சனி, 28 ஆகஸ்ட், 2021

ஒரு விண்வெளி ஆய்வாளர் கட்டாயம் படிக்க வேண்டிய 15 புத்தகங்கள்(Elon musk)

ஒரு விண்வெளி ஆய்வாளர் கட்டாயம் படிக்க வேண்டிய 15 புத்தகங்கள்
ஒரு விண்வெளி ஆய்வாளர் கட்டாயம் படிக்க வேண்டிய 15 புத்தகங்கள்

முன்னுரை:

இன்றைக்கு நம் குழந்தைகளில் பலருக்கும் ஒரு விண்வெளி ஆராய்ச்சியளராக வேண்டும் என்ற கனவு அதிகம் இருப்பதை என்னால் அதிகம் உணர்ந்து கொள்ளமுடிகின்றது.ஆனால் அதற்கான அறிவை எப்படி தேடுவது என்பதில் மிகப்பெரும் குழப்பமும் சரியான வழிகாட்டுதலும் இல்லாமல் இருப்பது அதைக்காட்டிலும் பேருண்மையாக இருக்கின்றது.எனவே ஆராய்ச்சி தளத்தில் தேர்ச்சி பெற்ற ஒருவர் எத்தகைய புத்தகங்களை ஆராய்ச்சிக்காக மக்களுக்கு பரிசிலிக்கின்றார் என்று நான் தேடிப்பார்த்ததில் இன்றைய வாலிபர்களுக்கு மிகப்பெரும் கதாநாயகனாக திகழும் எலான் மாஸ்க் அவர்கள் அது சம்மந்தமான அற்புத வழிகாட்டுதலை கொடுத்திருப்பதை என்னால் பெற முடிந்தது.

அவர் ஒரு விண்வெளி ஆய்வாளர் கண்டிப்பாக இந்த 15 புத்தகங்களையும் படித்தே ஆகவேண்டும் என்று அவைகளின் பெயர்களையும் தன்னுடைய சமூக வளைதளங்களில் பதிவிட்டுள்ளார்.அவர் பதிவிட்ட அந்த பதினைந்து புத்தகங்களையும் இங்கு நான் குறிப்பிடுகின்றேன். நீங்களும் விண் வெளித்துறையில் சாதிக்கத்துடிப்பவராக இருந்தால் நிச்சயமாக இது உங்களுக்கு மிக பிரயோஜனமிக்கதாக இருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.

15 புத்தகங்கள்:

1.Book Name: The Hitchhiker's guide to the galaxy.

Author name: Douglas Adams.

இது பால்வெளி அண்டத்தைப்பற்றி மிக விரிவாக பெசும் நல்ல புத்தகம் என்பதாக எல்லான் மாஸ்க் குறிப்பிட்டு காட்டுகின்றார்.

2.Book Name: "Structure " or why things don't fall down.?

Author Name: J.E. Gardon 

இது வடிவமைப்பு சம்மந்தமான பல்வேறு விஷயங்களை தெளிவாக விளக்கக் கூடிய புத்தகம் என்றும் இன்னும் இது ராக்கேட் வடிவியல் சார்ந்த பொறியியளாலர்களுக்கு மிக சிறப்பான புத்தகம் என்றும் எலான் மாஸ்க் குறிப்பிடுகின்றார்.

3.Book Name: "Super Intelligence"

Author Name: Nick Bostrom

இது இந்த உலகில் இயந்திரத்துவத்தின் சாதக பாதகங்களையும் சுற்றுச்சூழலின் அதீத பங்கைப்பற்றியும் விரிவாக பேசும் அற்புதமான புத்தகம் என்பதாக எல்லான் மாஸ்க் குறிப்பிடுகின்றார்.

4.Book Name: "Our final Intention"

Author Name: James Barret.

இது இயந்திர வாழ்வையும்,மனித வாழ்வையும் ஒப்பிட்டுக்காட்டும் சிறந்த புத்தகம் என்கிறார். அதாவது இயந்திரத்தில் மனித நேயங்களை தேட முடியாது என்பதை பல்வேறு இயந்திர செயல்பாட்டையும் மனித செயல்பாட்டையும் பிறித்துக்காட்டும் ஒரு நல்ல புத்தகம் என்பதாக குறிப்பிடுகின்றார். 

5.Book Name: "Ignition. An informal history of liquid rocket Propellents"

Author Name: John D. Clark"

இது ராக்கெட்டின் வரலாறுகள் குறித்த ஒரு அற்புதமான தொகுப்பாக இருக்கின்றது என்று எல்லான் குறிப்பிடுகின்றார்.

6.Book Name: The Foundation Trilogy.

Author Name: Isaac Asimov

இது பூமியை தவிர்த்து வேறு கிரகங்களைப் பற்றி மிக சுவாரஸ்யமாகவும் விரிவாகவும் பேசும் நல்ல புத்தகம் என்பதாக குறிப்பிடுகின்றார்.

7.Book Name :"Life 3.O being human in the age of artificial intelligence "

Author Name : By Max Tegmark.

வாழ்வின் பல செயல்களுக்கு இது தான் பொருள் என்று கூறும் மிகச் சிறந்த புத்தகம் என்கிறார் எல்லான் .

8.Book Name : The moon is a harsh Misterss"

Author Name: Robert Heinlein .

நிலவு சம்மந்தமான பல்வேறு இரகசியங்களைப்பற்றி பேசும் ஒரு அற்புதமான புத்தகம் என்பதாக குறிப்பிடுகின்றார்.

9.Book Name : Merchants of Doubt"

Author Name :Naomi oreskes and Erik. M. Conway

இரண்டு அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அறிவியளாலர்கள் பொதுவாக தவறும் இடங்கள் சம்மந்தமாக எழுதிய புத்தகம் என்றும் இதை கட்டாயம் ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர் படிக்க வேண்டும் என்றும் எல்லான் குறிப்பிடுகின்றார்.

10.Book Name :" Einstein his life and universe"

Author Name: Walter Isaacson

ஒரு ஆராய்ச்சியாளர் தன் ஆய்வை ஐன்ஸ்டீனிலிருந்தே தொடங்க வேண்டும் என்று எல்லான் குறிப்பிடுகின்றார்.மேலும் ஐன்ஸ்டீனீன் கண்டுபிடிப்புகள்தான் இந்த உலகிற்கு பல நலவுகளை கொண்டு வர காரணமாக இருந்தது என்பதாகவும் குறிப்பிடுகின்றார்.

11.Book Name: "Howard hughes his life and madness"

Author Name: Donald L. Barlett and James B.Steele

ஹாவேர்ட் ஹியூஜஸ் என்பவர் வாழ்வியலுக்கு மிக முன் உதாரணமானவர் என்பதாக எல்லான் குறிப்பிடுகின்றார்.ஏனெனில் அவர் தன் வாழ்வில் எல்லாம் இருந்தும் மிக எளிமையாகவே செயல்பட்டார் என்றும்,மேலும் ஆராய்ச்சி துறையில் மிகப்பெரும் ஆளுமை என்றும் எல்லான் குறிப்பிடுகின்றார்.

12.Book Name: "The culture series"

Author  Name: Iain M.Banks

இந்த புத்தகம் தன்னை மிகவும் கவர்ந்த புத்தகம் என்றும் இதில் உலகின் பல கலாச்சார முறைகள் சுவாரஸ்யமாக விளக்கப்பட்டிருப்பதாகவும் எல்லான்  கூறுகின்றார்.

13.Book Name :"Zero to one "Notes on startups, or how to build the future "

Author Name: Peter Thiel

இது எல்லான் மாஸ்கும் அவருடைய நண்பரும் முதல் முதலில் ஆரம்பித்த பேபால் என்ற மென்பொருளின் வெற்றியை பற்றிய புத்தகமாகும்.இதை உறுவாக்கும் பொழுது எல்லான் மாஸ்க்கிடம் எந்த பணமும் இல்லை என்பதை கருத்தாக மையப்படுத்தியே இதற்கு 0 விலிருந்து 1 என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

14.Book Name: "The lord of the rings"

Author Name : J.R.R. Tolkin.

இது அமெரிக்காவிலுள்ள பழங்கதைகளை உள்ளடக்கிய புத்தகமாகும்.இதனை எல்லான் அவ்வப்பொழுது ரசித்து வாசித்து வந்ததாகவும்.இதில் பல்வேறு சிறந்த கருத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றார்.

15.Book Name :"Banjamin franklin".

Author Name: Walter Isaacson.

பெஞ்சமின் அமெரிக்காவின் சட்டத்துறையின் தந்தையாக போற்றப்படும் மிகப்பெரும் அறிஞர் ஆவார்.அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு ஆராய்ச்சியாளரும் படிக்கவேண்டும் என்று எல்லான் மாஸ்க் கூறுகின்றார்.ஏனென்றால் எதுவுமே இல்லாத ஒரு மனிதராக தொடங்கி பிறகு சிறிய வியாபாரியாக இருந்து பிறகு சட்ட மாமேதையான அவரின் வரலாறு சாதிக்கத்துடிக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்கிறார் எலான் மாஸ்க்.மேலும் பெண்ஜமின்தான் தன்னுடைய முன்னோடி என்பதாகவும் குறிப்பிடுகின்றார்.

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

தேசியவாதமும் தனிமனித உரிமையும்(Bjp Nationalism)

 

தேசியவாதமும் தனிமனித உரிமையும்
தேசியவாதமும் தனிமனித உரிமையும்

ஒருவன் நாட்டை காக்கவேண்டும் என்றும் நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்றும்,நாட்டிற்காக பல தியாகங்கள் செய்யவேண்டும் என்பதே தேசியவாதம் என்பதை நாமெல்லாம் நன்றாக அறிவோம் என்றே நம்புகின்றேன். உண்மையில் இத்தகையத்தன்மை ஒவ்வொரு குடிமகனிடமும் காணப்பட வேண்டிய அற்புத பண்பே என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருந்துவிட முடியாது.ஆனால் இந்தியாவில் தேசியவாதம் என்ற ஒரு அற்புதமான பண்பு அரசியல் செய்வதற்கான முக்கிய கருவியாக பயன்படுத்தப்பட்டு வருவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதை பார்க்கமுடிகின்றது.

இதுவே நாட்டின் குடிமகனை அச்சுறுத்தும் காரணியாகவும் அவனை வேற்றுமைபடுத்திக்காட்டும் கருவியாகவும் பயன்படுத்தப்படுகின்றது.இது சமூகத்தில் மிகப்பெரும் அச்சுறுத்தலையே தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றது.மேலும் இதுவே இந்நாட்டு மக்களில் சிலரை வேண்டுமென்றே  அன்னியப்படுத்தவும்,பலிவாங்கவும் உகந்த கருவியாகவும் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

உண்மையில் இன்றைய பாஜக அரசு தேசியவாதம் என்ற இந்த சொல்லை வைத்து மக்களை ஆட்சி செய்ய முடியும் என்று நம்புகின்றது.அது உண்மையில் பொதுப்பார்வையில் மிகச்சரியானதாக இருந்தாலும் அது நாட்டின் பல்வேறு மக்களுக்கு மிகப்பெரும் இழப்பைத்தர காத்திருக்கின்றது என்றே நான் கருதுகின்றேன்.ஏனென்றால் தேசியவாதம் என்ற பெயரில் நாடும் நாட்டின் பழமை கலாச்சாரமும் பாதுகாக்கப்பட வேண்டியது என்பதை சொல்லித்திரிபவர்கள் நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் குடிமக்களின் உரிமைகளை பறிப்பதை சரியாக காண்பது மிகப்பெரும் அநீதியாகும்.

இந்திய அரசியல் சாசனம் எவ்வாறு நாட்டையும் நாட்டு உடமைகளையும் பாதுகாக்கும்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் வலியுறுத்துகின்றதோ அதைவிட அதிகமாக நாட்டு மக்களுடன் சகோதரத்துவத்துடனும் தனிமனித சுதந்திரத்துடனும் செயல்பட வலியுறுத்துகின்றது.இன்றைக்கு நாட்டின் நாலாபுறங்களிலும் பாஜக என்ற குறிப்பிட்ட கட்சியை சார்ந்தவர்கள் தன்னை தவிர்த்து ஏனையவர்களெல்லாம் நாட்டுப்பற்றற்றவர்கள் என்று காட்டிகொள்ளவே முயற்சிப்பது நாட்டின் மிகப்பெரும் சாபக்கேடாக நான் காண்கின்றேன்.

சில தினங்களுக்கு முன்பு  இசைஅமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் இது சம்மந்தமாக ஒரு விஷயத்தை சமூகவலைதளத்தில் பதிந்து அது அனைவராலும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது.அவர் தன்னுடைய முன்னுரிமையைப் பற்றி அதில் குறிப்பிட்டிருந்தார்.அதாவது எனக்கு முதலில் மொழிதான் அதற்கு பிறகே நாடு என்பதெல்லாம் என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.உடனே அவரை தேசவிரோத சக்தி என்றளவிற்கு பலரும் விமர்சனம் செய்யத்துவங்கினர்.அவர்கள் வேறுயாருமில்லை நான் மேற்குறிப்பிட்ட அடிப்படை அரசியல் அறிவில்லாத பாஜக தொண்டர்களேயாவார்கள்.

இங்கு நான் ஒரு முக்கியமான அடிப்படையை விளக்க விரும்புகின்றேன். அதாவது நாட்டுப்பற்று என்பது எல்லோருக்குள்ளும் புதைந்து இருக்கும் ஒரு பொதுவான அம்சமேயாகும்.நிச்சயமாக நாட்டில் வசிக்கும் ஒரு பிச்சைக்காரனும் கூட தான்வசிக்கும் நாட்டை நேசிக்கவே செய்வான். அவற்றில் அவனுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.

ஆனால் தனக்கு நாட்டுபற்று இருக்கின்றது என்பதை மட்டுமே எப்பொழுதும் ஒருவன் காட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு அவனது சொந்த வாழ்வில் வேறு எதற்கும் விருப்பம் இருக்கவே கூடாது என்று கட்டாயப்படுத்துவது மிகப்பெரும் சர்வாதிகார போக்கு என்பதாகவே நான் காண்கின்றேன்.எனவே அண்பர்களே..!நாட்டு பற்றையும் அரசியல் ஆதாயம் தேடும் தேசிய வாதத்தையும் நாம் குழப்பிக்கொள்ளக்கூடாது என்பதற்காகவே இந்த கட்டுரையை எளிய வடிவில் அனைவரும் விளங்கிக்கொள்ளும் விதமாக வட்டுறுக்கமாக நான் எழுதியிருக்கின்றேன்.

இதனை நான் மதம் சார்ந்தோ அல்லது ஒரு கட்சி சார்ந்தோ தனிப்பட்ட வெறுப்பினால் பேசுவதாக நீங்கள் நீனைத்தால் தாராலமாக நினைத்துக் கொள்ளுங்கள்.ஆனால் என்னுடைய இந்த கட்டுரைக்கான நோக்கம் என் மக்கள் இது போன்ற ஏமாற்றுபேர்விளிகளிடம் சிக்கி (போலி) தேசியவாதம் என்ற பெயரில் தன் சொந்த மக்களையே எதிரியாக்கிவிடக்கூடாது என்ற தூய நோக்கத்திற்கானது மட்டுமே என்பதை தூய மனதுடன் தெரியப்படுத்திக்கொள்கின்றேன்.

நன்றி:

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

யார் உண்மையான அறிவாளி?(Intelligent)

யார் உண்மையான அறிவாளி?(Intelligent)
யார் உண்மையான அறிவாளி?(Intelligent)

முன்னுரை:

இந்த உலகத்தில் அறிவாளியாக வேண்டும் என்று பலரும் சொல்வதை நான் கேள்விபட்டிருக்கின்றேன்.சிலர் தாங்கள்தான் பெரும் அறிவாளி என்பதாக காட்டிக்கொள்ள முயற்சிப்பதையும் நான் பார்த்திருக்கின்றேன்.இவற்றிற்கு மத்தியில் ஒரு ஜென் துறவி யார் அறிவாளி என்பதை விளக்குவதை நாமெல்லாம் அறிந்து வைத்திருப்பது நமக்கு மிக பிரயோஜனம்மிக்கதாக இருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.ஆகவே அந்த நிகழ்வை இங்கு நான் பதிவு செய்கின்றேன்.

ஜென் துறவியின் கதை:

"அந்த ஜென் துறவி வில்வித்தையில் மிக கைத்தேர்ந்தவராக இருந்தார்.அவர் மாலை நேரத்தில் ஊரிற்குள் சற்று உலாவிவிட்டு வருவது வழக்கமாக இருந்தது.ஒருநாள் வழக்கம்போல் ஊரின் தெருவில் நடந்து கொண்டிருந்த போது சிலர் அவரை பிடித்து வில் வித்தையில் நீங்கள் மிக கைதேர்ந்தவர் என்று கேள்விபட்டோமே.!எங்கே உங்களிடம் வில்லும் இல்லை அம்பும் இல்லையே என்று ஏழனமாக கேள்வி எழுப்பினர் ?

அதற்கு அந்த துறவியோ "செயலின் உச்ச கட்டம் செயலின்மைதான் என்றும், பேச்சின் உச்சகட்டம் மௌனம்தான் என்றும், வில் வித்தையின் உச்சகட்டம் வில்லை எய்தாமலிருப்பதுதான் என்றும் புன்னகைத்துக்கொண்டே பதிலளித்துவிட்டு அவ்விடத்தைவிட்டும் நகர்ந்து சென்றுவிட்டார்.

இந்த நிகழ்வு ஒரு அறிவாளிக்கான உண்மையான இலக்கணத்தை மிகத்தெளிவாக எடுத்துறைக்கக்கூடியதாக இருக்கின்றது.ஓர் செயலின் உச்சநிலை என்பது அதில் செயலற்று இருப்பதுதான் என்பதை ஜென் தத்துவம் எல்லா இடங்களிலும் மிக அதிகமாக வலியுறுத்துவதை நம்மால் காண முடிகின்றது."ஒரு அறிவுள்ள மனிதன் தன்னுடைய அறிவாற்றலை தேவையின்றி பறைசாட்டுவதை விடுத்துவிட்டு அதனை தன்னிடம் பாதுகாப்பாக தக்கவைத்துக்கொள்ளவே நினைப்பான் என்கிறது ஜென் தத்துவம்.

மேலும் பல்ஹீனமானவனே தன்னுடைய ஆற்றலை பெரிதாக காட்டிக்கொள்ள விரும்பி இறுதியில் ஆற்றல் அற்றவனாகவே ஆகிவிடுகின்றான் என்பதாகவும் அது மிக வெளிப்படையாக பேசுகின்றது.எனவே அறிவு என்பது அறிவு இன்மையிலிருந்தே பிறக்கின்றது என்பதையும் ஜென் தத்துவம் மிக அற்புதமாக போதிக்கின்றது.யார் தனக்கு தெரியாத ஒன்றை தெரிந்தது என்று கூறுவாரோ அவரே அதில் பெரும் ஏமாற்றமும் காண்கிறார் என்பதையும் அது குறிப்பிடுகின்றது.

ஆகவே அண்பர்களே...!

அறிவு என்பது அது பெறப்பட வேண்டியது அதனை நாம் நிரப்பிக் கொண்டோம் என்று நினைத்துவிட்டால் பிறகு அந்த பாத்திரத்தில் வேறு எதனையும் எடுத்துக்கொள்ள முடியாது என்பதை நன்றாக நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.இந்த பரந்து விரிந்த உலகில் நாம் கற்பதற்கு பல ஆயிரம் கலைகள் உண்டு என்பதை உணர்ந்து அவற்றை கற்றுக்கொள்ளுங்கள்.ஆனால் அவற்றை கற்றுவிட்டோம் என்பதற்காக நாங்கள்தான் பெரும் அறிவாளிகள் என்று பரைசாட்டித்திரியாதீர்கள். அமைதியோடு அதனை அனைவருக்கும் உதவும் விதமாக பிரயோஜனப்படுத்திக்கொண்டே வாருங்கள்.அதுதான் உண்மையான அறிவாளியின் அடையாளமாகவும் இருக்கின்றது.

புதன், 25 ஆகஸ்ட், 2021

வெற்றியின் ரகசியம் பயிற்சியே (power of practice)

வெற்றியின் ரகசியம் பயிற்சியே (power of practice)
வெற்றியின் ரகசியம் பயிற்சியே (power of practice)

இன்றைக்கு வெற்றியாளர்களாக பார்க்கப்படும் அனைவரும் தங்களின் வெற்றிக்கான ரகசியமாக என்ன செய்கின்றார்கள் என்று என்றாவது நீங்கள் யோசித்ததுன்டா..? அல்லது அவர்கள் தங்கள் துறையில் மிகப்பெரும் உச்சத்தை அடைந்ததற்கு என்ன காரணம் என்றாவது நீங்கள் சிந்தித்ததுண்டா..?இந்த உலகில் வெற்றிபெற்றவர்களின் வரலாறுகள் அனைத்தையும் புரட்டிப்பாருங்கள்! அவர்கள் அனைவரும் தன் வாழ்வில் எதை நிகழ்த்த வேண்டும் என்று விரும்பினார்களோ அதில் அளவுகடந்து பயிற்சி எடுத்தார்கள் என்பதை மட்டுமே பெற்றுக்கொள்வீர்கள்...!

ஆம் அண்பர்களே!பயிற்சியாள் மட்டுமே முடியாதது என்ற ஒன்றே இல்லை என்று நிறூபிக்க முடியும் என்று நான் ஆழமாக நம்புகின்றேன்.ஒரு செயலை முதல்முறை செய்யும்பொழுது அதில் நாம் தயங்களாம்.அதனை மறுமுறை செய்யும்பொழுது சற்று அதில் தெளிவைபெறலாம்.பிறகு அதனை திரும்ப திரும்ப செய்யும்பொழுது நாம் அந்த காரியத்தில் வல்லுனர்களாக இயற்கையாகவே மாற்றிவிடுகின்றோம் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

இத்தகைய நிலையைத்தான் நான் பயிற்சி என்றும் பெயரிட விரும்புகின்றேன். நான் சந்திப்பவர்களில் பெரும்பாலானோர் என்னால் அது முடியாது இது முடியாது என்றே முறையிடுவார்கள்.ஆனால் சிறிது காலத்திலேயே பயிற்சியின் மூலம் அவர்களை நான் பொய்பித்துவிடுவேன்.

ஆம் அண்பர்களே ..!

பயிற்சியின் மூலம் நீங்களே உங்களை பொய்பிக்கமுடியும் என்பதும் எனது ஆழமான நம்பிக்கையாக இருக்கின்றது.உண்மையில் பயிற்சியே மனிதனை திறம்படச்செய்கின்றது என்பதற்கு மனிதனின் இயல்பு வாழ்க்கையிலேயே ஆயிரமாயிரம் எடுத்துக்காட்டுக்கள் கொட்டிக்கிடக்கின்றன.உதாரணமாக இன்று மிடுக்காக நடக்கும் நாம் சிறுபிராயத்தில் தவழுவதற்கே விழுந்து விழுந்து பயிற்சி எடுத்ததை நம்மால் மறுக்கமுடியுமா?இன்றைக்கு பலநூறு மீட்டர்கள் அதிவேகத்தில் சீரான ஒரு நேர்கோட்டுகுள் ஓட முடிந்த நாம் எழுந்து நிற்பதற்கே தத்தித்ததும்பிநின்றோம் என்பதை மறந்துவிட முடியுமா. இவைகளெல்லாம் எப்படி சாத்தியமானது என்ற கேள்விக்கு ஒற்றை பதில்தான்.

அது தான் பயிற்சி..!

போராட்டம் என்னும் பயிற்சியின் மூலமே ஒரு மனிதன் தன்னை உயர்த்தி நிறுத்த முடியும் என்பதை சிறுபிராயத்திலிருந்தே இயற்கை நிர்னயித்து இருக்கின்றது என்ற பெருண்மையை பெரும்பாலானோர் உணர முடியாமல்  இருப்பது மிகப்பெரும் கைசேதமாகவே நான் காண்கின்றேன்.எனக்குத் தெரிந்து வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்.வெற்றியாளார்கள் ஒன்றை செய்து பார்த்துவிடவேண்டும் என்று தானே முன்வருவார்கள்.தோல்வியாளர்கள் நம்மால் இவையெல்லாம் முடியாது என்று ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பார்கள்.இவ்வளாவுதான் இருவருக்கும் உள்ள வேறுபாடு.

கடலில் நீச்சல் அடிப்பது கடினம்தான்.ஆனால் அது எவ்வளவு இன்பகரமானது என்பதை அங்கு நீந்தி விளையாடும் நீச்சல் வீரர்களிடம் கேட்டுப்பாருங்கள். அது எத்துனை இன்பகரமான விளையாட்டு என்பதை புரிந்து கொள்வீர்கள். மலையில் ஏறுவது கடினம்தான்.ஆனால் அதில் ஏறி சாகசம் செய்யும் தோழர்களிடம் கேட்டுப்பாருங்கள் அது எத்துனை அற்புதமான அனுபவம் என்பதை புரிந்து கொள்வீர்கள்..!

வாகனங்களை இயக்குவது கடினம்தான்.ஆனால் அதில் கை தேர்ந்தவர்களை கேட்டுப்பாருங்கள் அது எத்துனை பிரயோஜனம்மிக்கது என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.ஆக அண்பர்களே இறுதியாக ஒன்றை நினைவூட்டிக் கொள்கின்றேன்.நன்றாக நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்...!

இந்த உலகிலுள்ள அனைத்தும் கடினமானதுதான் அதனை நீங்கள் உங்கள் வயப்படுத்தும்வரை.உங்கள் விடாபயிற்சியாள் எதனை நீங்கள் உங்கள் வயப்படுத்திவிடுவீர்களோ அதுதான் இந்த உலகிலேயே மிக இலகுவான காரியம் என்று நீங்களே பிறகு சாட்சிகூறுவீர்கள்.எனவே உங்களுக்கான எல்லையை முதலில் நீங்கள் உடையுங்கள்..!அயராது பயிற்சி மேற்கொள்ளுங்கள்...!சாதனை என்பது உங்கள் காலடியில் தவளும் பொம்மையாகிவிடும் என்பதை நான் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கின்றேன்.

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

கடன் அட்டைகளும் அதன் சாதக பாதகங்களும்(Credit card's pro and con)


கடன் அட்டை வாழ்விற்கு அவசியமா?

இன்றைக்கு நம் வாழ்வில் கடன்அட்டை என்பது ஒரு முக்கிய அங்கமாக இடம்பிடித்துவிட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும். சாதாரண கூழித்தொழிலாளி தொடங்கி அனைத்து கோடீஸ்வரர்களும் இந்த கடன் அட்டைக்கு அடிமைதான் என்றால் அது ஒருபொழுதும் மிகையாகாது. கடன் அட்டையின் வட்டியை செலுத்துவதற்காகவே இங்கு பெரும்பாலானோர் ஓடாய் உழைக்கின்றனர் என்பதும் நான் நிகழ் உலகில் பார்க்கும் உண்மையாக இருக்கின்றது.முன்பெல்லாம் வாழ்வாதாரத்திற்காக உழைத்த மக்கள் இன்று இந்த கடன் அட்டைக்காகவே உழைத்து உயிர் வாழ்வது மிகப்பெரும் சாபக்கேடாகும்.

இன்றைக்கு வங்கிகளும் சில நிறுவனங்களும் தங்களின் வியாபாரத்தை செழிப்பாக்கிக்கொள்ள உறுவாக்கிய திட்டமே கடன்அட்டை என்பது எனது கண்ணோட்டமாகும்.மேலும் ஆசைகளின் அடிவருடிகளாக இருப்பவர்களே இதற்கு நல்ல வாடிக்கையாளர்களாகவும் இருக்கின்றார்கள்.இதனைப்பற்றி மிக எளிய முறையில் சொல்வதானால் உனக்கு சொந்தமான பொருளையே நீ வட்டிக்கு வாங்குவதை போன்றதாகும்.அதாவது ஒரு பொருள் எப்படியானாலும் தன்னுடையதாகத்தான் ஆகப்போகின்றது என்று தெரிந்தும் அதனை இப்பொழுதே வாங்கிவிட வேண்டும் என்ற ஆசையில் கூடுதல் விலைக்கு வட்டியுடன் வாங்குவதைப்போன்றதாகும்.இதுதான் இருப்பதிலேயே மிகப்பெரும் ஊதாரித்தனம் என்று பெரும்பாலான அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதற்கு ஒரு பிரபல்யமான பொருளாதர கொள்கை கொண்ட பல்கலை கழகத்தால் சிறிய சோதனை ஒன்றும் நடத்தப்பட்டது.அதாவது அதில் சில குழந்தைகளின் கைகளில் இணிப்புத்துண்டு ஒன்றை கொடுத்து இதனை இப்பொழுதே வேண்டுமானாலும் நீங்கள் சாப்பிடலாம் என்றும் ஆனால் அதனை 10 நிமிடத்திற்கு பிறகு சாப்பிட்டால் மற்றொரு இணிப்புத்துண்டு உங்களுக்கு கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டது.

சில குழந்தைகள் மட்டுமே அவ்வாறு 10 நிமிடம் காத்திருந்து இரண்டு இனிப்புத்துண்டுகளை பெற்று சாப்பிட்டதாகவும் பல குழந்தைகள் அதனை கொடுத்த உடனே சாப்பிட்டுவிட்டன என்றுமே அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.மேலும் எந்த குழந்தைகள் காத்திருந்து சாப்பிட்டனவோ அந்த குழந்தைகளே பிற்காலத்தில் மிகவும் பொருளாதார பொறுப்புள்ள குழந்தைகளாக வந்தன என்றும் அவ்வாய்வின் மூலம் நிறூபனமும் ஆனது என்பதாக சொல்லப்படுகின்றது.எனவே நாளைக்கு எனக்கே சொந்தமாகப்போகும் ஒரு பொருளை இன்றே கடன் அட்டை மூலம் அதிக பணம் கொடுத்து பெறுவது நம்முடைய வாழ்விற்கு அவசியம்தானா என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும்..

கடன் அட்டையால் ஏற்படும் ஆபத்துகள் என்ன?

1.கடன் அட்டைக்கு 36 % வட்டி வசூலிக்கப்படுகின்றது என்பதே இதன் மிகப்பெரும் ஆபத்தாகும்.ஒரு நாள் நீங்கள் அதற்கான தொகையை கட்டத்தவறினாலும் உங்கள் உழைப்பில் பெரும்பகுதியை நீங்கள் வட்டியாக கட்ட தயாராகிக்கொள்ள வேண்டும்.இது கந்துவட்டி என்றும் மீட்டர் வட்டி என்றும் சொல்லக்கூடிய வட்டி முறையைவிட மிக மோசமான வட்டி என்பதாகவே நான் கருதுகின்றேன்.

2.கடன்அட்டை என்பது பெரும்பாலும் நம்மிடம் பொருளாதார மேலான்மையை கெடுத்துவிடும் என்பதும் இதில் இருக்கும் மிகப்பெரும் ஆபத்தாக நான் கருதுகின்றேன்.ஏனென்றால் இன்று நம் கையில் அட்டை இருக்கின்றது என்பதற்காக தேவையேயற்ற பொருளையும் கூட நாம் அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு நாம் தயாராகிவிடுகின்றோம் என்பது உலவியல் ரீதியான உண்மையாகும்.

உதாரணமாக  15 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க நீனைக்கும் கை பேசியை 25 ஆயிரம் கொடுத்து வாங்குவதற்கு இந்த அட்டைகள் நம்மை தூண்டுகின்றது என்பதே இதில் இருக்கும் மிகப்பெரும் ஆபத்தாகும்.இதனால் நம்முடைய பொருளாதாரம் சார்ந்த மேலான்மை முற்றிலும் கெட்டு நாம் நம்முடைய ஆசைக்காக எதனையும் வாங்கும் நபர்களாக மாறிவிடுவோம்.

3.நம்முடைய சேமிக்கும் பழக்கத்தை கடன்அட்டை பாழாக்கிவிடும் என்பது நான் அறிந்த உண்மையாகும்.என்னைப்பொறுத்தமட்டில் சேமிப்பு என்பதே நம்முடைய பொருளாதாரத்தின் மிகப்பெரும் பலமாக கருதுகின்றேன்.கடன் அட்டைகள் என்பது நிச்சயமாக அதனை கலவாடிச்சென்றுவிடும் காரணியாக இருக்கின்றது என்பதாகவே கருதுகின்றேன்.எனவே கடன்அட்டை என்பது நம்முடைய சேமிப்பிற்கு மிகப்பெரும் ஆபத்து என்பதாகவே நான் கருதுகின்றேன்.

4.டெபிட்கார்டைக்காட்டிலும் க்ரெடிட் கார்டுகளில் மோசடி நிகழ்வது அதிகம் என்ற ஆபத்து உள்ளது.க்ரெடிட் கார்டுகளின் இரகசிய எண்களை மிக இலகுவாக கண்டறிய முடிகின்றது என்றும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.எனவே அது போன்ற பண மோசடிகளை தவிர்க்க க்ரெடிட் கார்டுகளை தவிர்ப்பதே நல்லது.

கடன் அட்டையாள் ஏற்படும் சாதகங்கள் என்ன ?

1.கடினமான சூழலை தவிர்ப்பதற்காக கடன் அட்டையை பெறலாம். உதாரணமாக அவசியத்தேவை என்று நினைக்கும் பொருள் இப்பொழுது வாங்கவில்லையானால் பிறகு எப்பொழுதும் கிடைக்கவே கிடைக்காது என்ற சூழல் இருந்தால் அப்பொழுது கடன் அட்டை பயன்படுத்தலாம் என்பது எனது கருத்தாகும்.அதுவும் அக்கடனை மிக விரைவிலேயே கட்டிவிடும் திட்டத்தோடே அதனை பெறுவதும் மிக அவசியமானது என்றே நான் கருதுகின்றேன்.

2.இணையத்தில் பொருட்கள் வாங்குபவர்கள் (no cost EMI) என்ற சலுகையை பயன்படுத்துவதற்காகவும் கடன் அட்டையை பயன்படுத்துவது சிறந்ததாகும். எந்தவித வட்டியுமில்லாத கடனாகவே அது பார்க்கப்படுவதால் அது நமக்கு எந்த பொருளாதார சிக்கலையும் ஏற்படுத்தாது என்றே நான் கருதுகின்றேன்.

3.வெளிநாட்டு கொடுக்கல் வாங்கள் வைத்திருப்பவர்கள் கடன் அட்டை பயன்படுத்துவது இயல்பேயாகும்.ஏனெனில் டெபிட் கார்டுகள் உலக அளவில் பயன்படுத்த முடியாது என்பதால் வெளி நாட்டில் வர்த்தக தொடர்புடையவர்கள் க்ரெடிட் கார்டுகளை வைத்துக் கொள்ளலாம்.

எழுத்தாளர்:

Dr.S.Dhana priya