செவ்வாய், 7 ஏப்ரல், 2026

விசிக - கட்சி தலைவர் திருமாவளவனுக்கு என்ன ஆனது ? What Happened to Thol.Thirumavalavan in-2026?



முன்னுரை:

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் இவ்வேளையில் ஒவ்வொரு கட்சியின் தலைவரும் தொண்டரும் தங்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டா வெயிலில் தெருத்தெருவாக வாக்கு சேகரிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.எங்கு பார்த்தாலும் கொடிகளும் கோஷமுமாய் தமிழகத்தின் பட்டிதொட்டிகளெல்லாம் தேர்தல் பிரச்சாரம் கலை கட்டிக்கொண்டிருக்கின்றது.ஆனால் அதேவேலையில் மற்றொருபுறம் தமிழகத்தின் முக்கிய கூட்டணி கட்சிகளுக்கு மத்தியில் தொகுதிகளை பங்கிட்டுக்கொள்ளும் விஷயத்தில் மிகப்பெரும் கலேபரம் நடந்தேரிக்கொண்டு வருகின்றது.

குறிப்பாக திமுகவினுடைய கூட்டணி கட்சியான,விசிகவிற்கு தொகுதி பங்கீடு விஷயத்தில் பெரிதும் வருத்தங்கள் இருப்பதாக விசிக தலைவர் தொள்.திருமாவளவன் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.அவற்றில் தாங்கள் 10 தொகுதி கேட்டிருந்தும் 8 தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்டது என்றும் அதிலும் தாங்கள் கேட்ட தொகுதிகள் முழுமையாக தங்களுக்கு வழங்கப்படவில்லை என்பதால் தான் மிகவும் வருத்தப்படுவதாகக் கூறி அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தற்போதைய தமிழக சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் போட்டியிடுவதாக முதலில் கூறியிருந்தார்.

அதற்கு காரணமாக தனது கட்சி மாநிலத்தில் இன்னும் வழுவாக இருக்க வேண்டிய தேவையிருப்பதாகவும்,வரும் காலங்களில் கொள்கை ரீதியாக தங்களது எதிரியான பாஜக தமிழகத்தில் காலூன்றுவதற்கு அதிகம் வாய்ப்பிருப்பதாகவும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு தான் தமிழக சட்டமன்றத்திற்குள் இருக்கவேண்டிய கட்டாயத்தேவையுள்ளது என்றும் தி ஹிந்து என்ற பத்திரிக்கைக்கு அவர் பேட்டியளித்திருந்தார்.பிறகு 4 நாட்களுக்கு பிறகு ஒரு பத்திரிக்கை கூட்டத்தை தானே கூட்டி தான் போட்டியிடும் தொகுதியிலும் மற்றொரு நபருக்கு வாய்ப்பு வழங்கப்போவதாக கூறி ஒரு நபரை அத்தொகுதிக்காக அறிவிப்பும் செய்துள்ளார்.

உண்மையில் திருமாவளவன் தனது மக்களின் உரிமைகளை காப்பதற்கும் இன்னும் வீரியமாக தனது மக்களுக்காக செயல்படுவதற்கும் சட்டமன்ற தேர்தலில் நிற்க வேண்டும் என்று முடிவு செய்வதற்கு அவருக்கும் அவரது கட்சியினருக்கும் முழு உரிமையிருக்கின்றது.அதனைப்போன்றே தான் போட்டியிடப்போவதாக கூறிய அதே காட்டுமன்னார்கோயில் தொகுதியை வேறொரு நபருக்கு விட்டுக்கொடுக்கப்போவதாக கூறி அவரே ஒருவரை முடிவு செய்து அறிவிப்பு செய்வதற்கும் அவருக்கு முழுஉரிமை இருக்கின்றது என்றாலும் அடிப்படையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியான திமுக வுடனான கூட்டணியை வைத்துத்தான் இந்த 8 சட்டமன்ற தொகுதிகளின் சீட்டுக்களையும் அவர் பெற்றுள்ளார் என்பதை திரு.திருமாவளவன் மறந்துவிடக்கூடாது என்று உபதேசிக்கும் அளவிற்கு தற்போது சகோதரர் நடந்துகொள்வது மிக வருத்தத்திற்குறியதாக காணப்படுகின்றது.

ஏனெனில் தனது கட்சியில் 200 நபர்கள் சீட்டு கேட்கின்றார்கள் என்றும் பலநூறு நபர்கள் 5000 ரூபாய் டெபாசிட் செய்து வேட்பாளராக நிற்கும் அளவிற்கு வந்துவிட்டார்கள் என்றும் கூறுவது தொள்.திருமாவளவனுக்கு பெருமையளித்தாலும் இப்படி பொதுவெளியில் இத்தனை நபர்கள் சீட்டுகேட்கிறார்கள் ஆனால் அதனை என்னால் கொடுக்கமுடியவில்லை, அதனால் சிலர் என்மீது கோபித்துக்கொள்கிறார்கள் அல்லது என்னை எதிரியாக பார்க்கின்றார்கள் என்றும் உலறுவது ஒரு சிறந்த தலைவனுக்கான அடையாளமல்ல என்பதை சகோதரர் தொள்.திருமாவிற்கு நினைவூட்டும் அளவிற்கு ஆழ்ந்த குளப்பத்திற்குள் தள்ளப்பட்டுள்ளார் என்றே அறியப்படுகின்றது.

அவ்வாறே எல்லா கட்சியிலும் எல்லோரும் சட்டமன்றத்தில் உட்கார அல்லது அப்பதவியை பெற ஆசைப்பட்டு வாய்ப்புக்கள் கேட்கத்தான் செய்வார்கள். அவர்கள் அனைவரும் கேட்கின்றார்கள் என்பதற்காக அவர்கள் அனைவரையும் திருப்திபடுத்த நினைத்தால் தமிழகத்தில் உள்ள 90% மக்களை சட்டமன்றத்திற்குள்தான் வைத்திருக்கவேண்டும் என்ற நிதர்சனம்கூடவா திருமாவிற்கு தெரியாமல் போய்விட்டது என்பது உண்மையில் ஆச்சர்யமாகவே உள்ளது.ஆக விசிக கட்சியின் தலைவர் தொள்.திருமாவளவன் தற்போதைய நிலையில் இவ்வாறு செயல்படுவதற்கான சில உலவியல் காரணங்கள் இருப்பதாகவே நான் கருதுகின்றேன்.அவற்றை இக்கட்டுரையில் முடிந்தளவு சுருக்கமாகவும் தெளிவாகவும் பதிவுசெய்ய விரும்புகின்றேன். இக்கட்டுரை நிச்சயம் அவருக்கும் அரசியல் சார்ந்த ஏனைய தோழர்களுக்கும் மிகச்சிறந்த புரிந்துணர்வை ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.நீங்களும் வாசித்து பயன்பெற்று ஏனைய நண்பர்களையும் பயன்பெறச்செய்யுங்கள்.

தொள்.திருமாவளவனின் அரசியல் சுருக்கம்.

தலித் மக்களின் உரிமைகளை காக்கவும்,சாதி ஒழிப்பு மற்றும் தமிழ்தேசியத்தை நோக்கமாகக் கொண்டு 1990-களில் தலித் பேந்தர்ஸ் என்ற இயக்கமாக தொடங்கி 1999-களில் அரசியல் கட்சியாக உறுவாகி கூட்டணி வியூகங்களின் மூலம் சட்டமன்றத்திலும், நாடாலுமன்றத்திலும் தன்னை பிரதிநிதித்துவப்படுத்திக்கொள்ள முயற்சித்துக்கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒரு கட்சியை தமிழகத்தில் தொள்.திருமாவளவன் தலைமைதாங்கி வழிநடத்திவருகின்றார்.

1999 தொடங்கி தற்போது 2026 வரையிலும் பல்வேறு கட்சிகளுடன் அவர் கூட்டணி வைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரதிநிதியாக செயல்பட்டு சட்டமன்ற தொகுதிகளிலும் நாடாலுமன்ற தொகுதிகளிலும் போட்டியிட்டு சில சமயங்களில் தோல்விபெற்றும் சிலசமயங்களில் வெற்றிபெற்றும் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் அவரும் அவரைச் சார்ந்தவர்களும் சென்றிருக்கின்றார்கள்.இவற்றிற்கு மத்தியில் தனது விசிக கட்சிக்காக சில கூட்டணி கட்சிகளிடம் ஒரு சீட்டு முதல் 25 சீட்டுகள் வரைக்கும் சட்டமன்ற தொகுதிகளாக பெற்று ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறாமலும் இருந்திருக்கின்றார்கள்.

இத்தகைய நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் தற்போதைய 2026 - சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியான திமுக வுடன் கூட்டணி வைத்துள்ளார்.அதன் அடிப்படையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் விசிகவிற்கு 8 சட்டமன்ற தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 10 இடங்களுக்கு பதிலாக 8 இடங்களையே பெற்றது,மற்றும் தாங்கள் கேட்ட தொகுதிகள் கிடைக்காதது போன்றவை திருமாவளவனுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்பதாக ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.அத்தோடு தங்களுக்கு கிடைத்த அந்த எட்டு தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகளோடு இணைந்து தனது வேட்பாளர்கள் களப்பணியாற்றி வெற்றிபெறவேண்டும் என்பதையும் தனது தொண்டர்களுக்கு காணொளி காட்சியின் மூலம் வழிகாட்டுதலும் வழங்கியுள்ளார்.

வேறு என்னதான் பிரச்சனை?

மேற்கூறியவற்றோடு திருமாவளவன் தன்னுடைய நிலைப்பாட்டை முடிந்திருந்தால் கூட்டனிக்குள் எவ்வித பிரச்சனையும் இல்லை.ஆனால் அத்தோடு சில குளறுபடிகளையும் அந்த காணொளியில் அவர் முன்வைத்திருப்பதே தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் இவ்வேலையில் மிகப்பெரும் சர்ச்சையாக பார்க்கப்படுகின்றது.அதாவது தன்னுடைய மீதமுள்ள 3 ஆண்டு கால நாடாளுமன்ற உறுப்பினர் பதைவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டமன்றத்திற்காக போட்டிபோட வேண்டிய அவசியம் என்ன உள்ளது என்ற கேள்விக்கு தன் கட்சியை தமிழகத்தில் வளர்க்கவேண்டியுள்ளது என்பதற்காக வருகின்றேன் என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் வரும் காலங்களில் மாநில அரசியல் பெரும் மாற்றங்களை காண இருப்பதாகவும் அவற்றை சமாளிப்பதற்குத்தான் அவர் மாநில அரசியலுக்குள் திடீரென குதித்ததாகவும் கூறினார்.

ஆனால் நான்கு நாட்களுக்கு பிறகு இப்பொழுது இங்கு எல்லாம் சரியாகத்தான் உள்ளது.எங்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப்பெரும் வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெறும்.நான் பதவிக்கு எப்பொழுதும் ஆசைபட்டவனல்ல.எனவே இப்பொழுது நான் போட்டியிடப்போவதாக கூறிய காட்டுமன்னார்கோயிலை மற்றொரு நபருக்கு விட்டுக்கொடுக்கின்றேன் என்பதாக ஒரு பத்திரிக்கை கூட்டத்தை கூட்டி தனது உள்ளுணர்வை வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஏன் இந்த தடுமாற்றம்?

அடிப்படையில் திருமாவளவனுக்கு எதிர் திசையான பாஜக, இந்த தேர்தலுக்கு பிறகு தமிழகத்தை கபலிகரம் செய்துவிடுமோ என்ற நெருடல் நீண்ட காலமாக இருந்துவருகின்றது அல்லது அப்படி அவர் காட்டிக்கொண்டிருக்கின்றார். தற்பொழுது அவற்றிற்குள் தாங்களும் கூட்டணியோடு சேர்ந்து சிக்கிவிடுவோமோ என்ற அச்சம் அதிகரித்திருக்கின்றது.அதற்கேற்றவாரு பாஜகவும் தமிழகத்தில் எப்படியாவது காலூன்ட வேண்டும் என்ற முயற்சியில் தங்களின் கூட்டணியை பலப்படுத்தி வருகின்றது.இவற்றையெல்லாம் முறியடிப்பதற்கான சக்தியாக நம்முடைய கூட்டணி ஒருவேலை இருக்குமா? அல்லது தானே அந்த இடத்தில் இருந்து செயல்படலாமா? என்பது போன்ற பல்வேறு குழப்பத்திற்குள் தொள்.திருமா தள்ளப்பட்டுள்ளார்.

ஆனால் பாஜகவின் பல்வேறு சூழ்சிகளையும் முறியடிப்பதற்காகத்தான் இந்த மதச்சார்பற்ற கூட்டணியே உறுவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது என்ற அடிப்படையை சகோதரர் திருமா மீள்பார்வை செலுத்த தவறியிருக்கின்றார் என்பதுதான் இங்கு வெட்டவெளிச்சமாக காணப்படுகின்றது.பாஜகவோடு கூட்டணி வைக்கக்கூடாது என்ற எண்ணத்தில்தான் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்குள் அவர் வந்திருக்கின்றார் என்பதையே அவருக்கு நினைவூட்டும் அளவிற்கு அவர் மிக தடுமாற்றத்தில் இருந்து வருகின்றார்.இதன் அடிப்படையில் அவர் தற்போது இரண்டு பெரும் உலவியல் பிரச்சனையில் இருப்பதாகவே என்னால் கண்டுகொள்ள முடிகின்றது.

ஒன்றாவது, கூட்டணி கட்சியான திமுக அல்லது அதுபோன்ற எந்த கட்சிகளுடனும் கூட்டணியில் இருப்பது அவருக்கு விருப்பமற்றதாக தெரிகின்றது.அதாவது கூட்டணியின்றி சுதந்திரமாக செயல்படுவதை அவர் விரும்புகின்றார் அல்லது அவரை அதனின் பக்கம் யாரோ செலுத்த தூண்டுகிறார்கள் என்றும்கூட வைத்துக்கொள்ளலாம்.

இரண்டாவது, அவர் தன்னுடைய கட்சியில் உள்ள வேட்பாளர்களை அளவுகடந்து நேசிப்பதால் சற்று சந்தேகிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தீர்வுதான் என்ன?

தற்போதைய நிலையில் திரு.திருமாவளவனிடம் மேற்கூறிய இரண்டு உலவியல் போராட்டங்களும் மிகைத்திருப்பதாகவே நான் காண்கின்றேன். ஏனெனில் கூட்டணியில் தங்களால் முழு சுதந்திரமாக செயல்பட முடியாத சூழலை பெரும்பாலும் தொள்.திருமா சந்தித்து வருவதாகவே பல்வேறு சமயங்களிலும் வெளிப்படுத்திவருகின்றார்.எனவே இந்த சமயமும் தங்களுக்கு விருப்பமான தொகுதி கிடைக்கவில்லை என்பதனாலும் தாங்கள் விரும்பிய எண்ணிக்கையில் தொகுதி கிடைக்கவில்லை என்பதனாலும் ஒரு விரக்திக்குள் தள்ளப்பட்டுள்ளார்.மேலும் கூட்டணியின்மையை அவரது அல்லது அவரது கட்சியின் அடுத்த கட்ட நகர்வாக சிந்திக்கவும் தொடங்கியுள்ளார்.உண்மையில் இத்தகைய சிந்தனை அவருக்கு நினைத்தது போன்ற முடிவையும் தரலாம் அல்லது நினைத்துப்பார்க்க முடியாத வீழ்ச்சியையும் தரலாம் என்பதை முதலில் கருத்தில்கொள்ள வேண்டும் என்பதை இங்கு பணிவன்போடு பதிவுசெய்துகொள்கின்றேன்.

ஏனெனில் அவர் தனி கட்சியும்,தனி சின்னமும் வைத்துள்ளார் என்றாலும் தனித்து கட்சியாக தேர்தலில் போட்டியிடும்பொழுது அதன் வெளிப்பாடு என்னவாக இருக்கும் என்பதை அவர் கருத்தில்கொள்ள தவறினால் ஏனைய கட்சியினர் எப்படி பல்வேறு தடுமாற்றங்களாலும் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற பேராசையாலும் ஒன்றுமில்லாமல் நிற்கின்றார்களோ அந்த நிலை தனக்கும் வரலாம் என்பதை ஒரு கனம் சீர்தூக்கிப்பார்க்கவேண்டும்.அப்படி முன்பு சீர்தூக்கிப்பார்த்ததின் விளைவுதான் தற்போது தான் இருக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெளிப்பாடாக இருக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

மேலும் எப்படி திமுகவுடன் கொள்கை நண்பர்களாக கூட்டணியில் இணைந்து இருக்கின்ராறோ அதே நிலையில் அதன் உறவை கடைபிடிப்பதுதான் அவருக்கும் அவரது கட்சியினருக்கும் தமிழகத்தில் சிறந்த அந்தஸ்த்தை தரும் என்பதை  மறந்துவிடக்கூடாது.இதைவிடுத்து தனது உள்ளுணர்வு மற்றும் தனது கட்சிகாரர்களின் தூண்டுதல்களுக்காக கூட்டணியின் மீது சந்தேகிப்பதோ அல்லது அவற்றின் செயல்பாட்டை குறைத்து மதிப்பிடுவதோ அவரின் சிறந்த தலைமைப்பன்பை பால்படுத்தும் முயற்சியாகிவிடும் என்பதை தலைவர் திருமா கவனத்தில் கொள்ளவேண்டும். என்னதான் ஆயிரம் முறை மற்றவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காகவே இந்த முறை முந்தைய சட்டமன்ற உறுப்பினர்களில் மூவருக்கு நான் வாய்ப்பளிக்கவில்லை என்று கூறினாலும்.தனது சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டணி கட்சியோடு அதிகம் ஐக்கியமாகிவியிருக்கின்றார்கள் என்ற புறத்தோற்றத்தால் தனது பேச்சை அவர்கள் கேட்காமாட்டார்கள் என்றோ அல்லது தனக்கு எதிராகவே செயல்பட ஆரம்பித்துவிடுவார்கள் என்றோ தனக்குத்தானே யூகித்துக்கொள்வது அல்லது பிற நபர்களின் தூண்டுதலுக்கு ஆளாவது மிகப்பெரும் பலவீனம் என்பதை தலைவர்.திருமா அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

அவ்வாறே தனது வேட்பாளர்கள் எல்லை மீறுகிறார்கள் என்பது தெரியவந்தால் அவர்களை அன்போடு பக்குவப்படுத்தி முடிந்தளவு தனக்கு பலமாக தன்னோடு வைத்துக்கொள்ள முயற்சிப்பதுதான் சிறந்த தலைமைத்துவமாக இருக்குமே தவிர அதைவிடுத்து அறியாமையில் அவர்கள் செய்த ஏதோ ஒன்றுக்காக தான் உறுவாக்கிய அல்லது வார்த்தெடுத்த தோழர்களை மிக இலகுவாக தட்டிவிட்டுவிட்டு செல்ல முற்படுவது நல்ல தலைமையில் ஏற்பட்டுள்ள மோசமான தடுமாற்றமாகவே பார்க்கப்படும் என்பதை தலைவர்.திருமா மறந்துவிடக்கூடாது.மேலும் அத்தகைய தடுமாற்றம் மிகப்பெரும் நஷ்டங்களை இழுத்துவந்து தந்துவிடும் என்பதையும் இங்கு பதிவு செய்ய நான் கடமைபட்டிருப்பதாக உணர்கின்றேன்.

உண்மையில் மக்களை வெற்றிபெறும் மேலும் மக்களுக்காக பணியாற்றும் சிறந்த சட்டமன்ற உறுப்பினர்களை உறுவாக்குவது சாதாரண விஷயமல்ல. அவர்களை முடிந்தளவு தன்னிடம் தக்க வைத்துக்கொள்வதற்குத்தான் ஒரு நல்ல தலைவர் முயற்சிக்க வேண்டுமே தவிர அவர்களை பழிவாங்கும் நடவடிக்கையிலோ அல்லது ஓரம்கட்டும் நடவடிக்கையிலோ இறங்கிவிடக் கூடாது என்பதில் தலைவர்.திருமா மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருனமாகவே இதை நான் காண்கின்றேன்.

ஒருவேலை அவர்கள் நடந்துகொள்ளும் விதம் தனக்கு பிடிக்கவில்லை என்றாலோ அல்லது அவர்கள் கூட்டனி கட்சியோடு நெருக்கமாக இருப்பது சரியாகபடவில்லையென்றாலோ அதனை அழகாக சுட்டிக்காண்பித்து சகோதரத்துவத்தோடு அவர்களை சரிசெய்வதற்கு ஏராளமான வழிகள் இருக்கின்றது என்பதை தோழர் திருமா அவர்களுக்கு இந்த கட்டுரையின் மூலம் பணிவோடு சுட்டிக்காண்பித்துக் கொண்டு எல்லாம் வல்ல இறைவன் இந்த பூமியில் சிறந்த ஆட்சியையும் சிறந்த ஆட்சியாளர்களையும் நிலைத்திருக்கச்செய்து இந்த பூமியை அமைதிப்பூங்காவாக அமைய அருள்செய்வானாக என்று என்றென்றும் பிரார்த்திக்கின்றேன்.

நன்றி:

Author.A.Sadam husain hasani

வியாழன், 2 ஏப்ரல், 2026

2026-யில் நம் ஓட்டு யாருக்கு? For whom our Votes in - 2026 ?

 

முன்னுரை: 


தமிழகத்தில் 2026-க்கான சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் -23 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் பல்வேறு கட்சிகளும் அதன் தலைவர்களும் வீதிகளில் இறங்கி பலநூறு தேர்தல் வாக்குறுதிகளையும், நம்பிக்கைகளையும் மக்களிடம் அள்ளிவீசிக்கொண்டிருக்கின்றார்கள். அவற்றில் குறிப்பாக மக்களுக்கு சலுகை செய்வதில் ஒருவர் மாதம் ஆயிரம் கொடுப்பதாக வாக்குறுதியளித்தால் மற்றொருவர் இரண்டாயிரம் என்கிறார்,மற்றொருவர் மூவாயிரம் என்கிறார்.இப்படி எங்களுடைய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கும் என்று மக்களை தங்களுக்கு வாக்களிக்கும்படி வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இவற்றிற்கு மத்தியில் மக்களாகிய நாம் இந்த தேர்தலில் மிகமுக்கியமாக எதற்காக உறுதி எடுக்க வேண்டும் என்பதையும்,தற்போதைய நிலையில் தமிழக மக்களுக்கு எது மிகமுக்கிய தேவை என்பதையும் மிக எளிய வடிவில் சுருக்கமாக இந்த கட்டுரையில் விவரித்திருக்கின்றேன்.நமக்கான அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கு முன்பே மக்களாகிய நாம் இதனை முடிவுசெய்ய கடமைபட்டுள்ளோம் என்பதை கருத்தில் கொண்டே தற்பொழுது இந்த கட்டுரையை தொகுத்துள்ளேன்.நிச்சயம் இக்கட்டுரை தற்போதைய தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் சமயத்தில் வாக்களிக்கும் நண்ப, நண்பிகளுக்கு மிகவும் பிரயோஜனமிக்கதாக அமையும் என்றே நம்புகின்றேன்.எனவே இதனை அன்புத்தோழர்களும் வாசித்து ஏனைய தோழமைகளுக்கும் பகிர்ந்து பயன்பெறச்செய்யும்படி அன்போடு வேண்டிக்கொண்டு கட்டுரைக்குள் செல்கின்றேன்.முதலில் வாக்காளர்களாகிய நாம் மிகமுக்கியமாக உறுதியேற்க வேண்டிய இரு விஷயங்களைப்பற்றி பார்த்துவிடுவோம்.

1.100% வாக்களிப்போம் என்று உறுதியேற்போம்.


வருகின்ற சட்டமன்ற தேர்தளில் மக்களாகிய நாம் 100% நம்முடைய வாக்குகளை செலுத்துவதற்கு உறுதியேற்க வேண்டும் என்பதுதான் எனது முதல் வேண்டுகோளாகும்.ஏதோ என்னுடைய ஒரு ஓட்டுதானே இதனால் இந்த ஆட்சியில் என்ன மாற்றம் ஏற்பட்டுவிடப்போகின்றது என்ற அலட்சியத்தாலோ அல்லது வியாபாரம்,தொழில்,தூரம் போன்றவற்றை காரணம் காட்டியோ வாக்களிக்கும் விஷயத்தில் பொடுபோக்காக இருந்துவிடாதீர்கள்.மேலும் இந்த முறை தேர்தல் கோடை காலத்தில் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது என்பதற்காக வெயிலை காரணம் காட்டியும் ஓட்டுபோடாமல் இருந்துவிடாதீர்கள்.ஏனெனில் மேற்கூறிய சிறுகுறு அசௌகரியங்களை காரணம் காட்டி நம்மை ஆட்சி செய்யத்தகுதியான தலைவர்களை தேர்தல் நாளில் நம் ஓட்டின் மூலம் நல்ல தலைவர்களை தேர்தெடுக்கத்தவறினால் நிச்சயம் மீதமுள்ள ஐந்து வருடங்களும் அரசு அலுவலகங்களின் வாயிலிலோ அல்லது யாரோ ஒரு அரசியல்வாதியின் கால்களிலோ கழிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவோம் என்பதை ஒருபொழுதும் மறந்துவிட வேண்டாம் என்பதை பணிவோடு வேண்டிக்கொண்டு அடுத்தபடியாக மக்களாகிய நாம் மிக முக்கியமாக உறுதியேற்க வேண்டிய இரண்டாவது விஷயத்தைப்பற்றி பார்ப்போம் வாருங்கள்..!

2.நமக்கு என்ன தேவை என்பதை நாமே முடிவு செய்ய உறுதியேற்போம்.


இதுவரையிலும் மக்களுக்கு என்ன தேவை என்பதை அரசியல் தலைவர்கள்தான் முடிவு செய்தார்கள்.அதற்கேற்ப சில உயர்ந்த தலைவர்கள் மக்களின் துயரை துடைப்பதற்காக தானே முன்வந்து பல்வேறு நலத்திட்டங்களை தங்கள் மக்களுக்காக செய்தார்கள் என்பதும் நிதர்சனம்தான் என்றாலும் தற்போதைய நிலையில் மக்களின் விலைமதிப்பற்ற வாக்கை பெறுவதற்கு அவர்களின் அற்ப தேவைகளை நிறைவேற்றும் வண்ணமாக சொம்பு கொடுப்பது,சோப்பு டப்பா கொடுப்பது, வலையல் கொடுப்பது,போன்ற அற்ப செயல்களின் மூலம் நம்முடைய வாக்குரிமையை அசிங்கப்படுத்த பல்வேறு அரசியல்வாதிகளும் முற்படுகின்றார்கள்.அப்பாவி மக்களாகிய நமக்கு ஒரு ஓட்டின் மதிப்பு எங்கே தெரியப்போகின்றது என்பதாக கூறிக்கொண்டு ஏதாவது சில பொருட்களை தூக்கி எறிந்தால் அதனையும் வரிசையில் நின்று வாங்கிக்கொண்டு சென்றுவிடுவார்கள் என்ற மமதையில் திரிகின்றார்கள்.

எனவேதான் அரசியல்வாதிகள் எதை கொடுக்கின்றார்களோ அதனை வாங்கிக்கொண்டு செல்வதை விடுத்து இந்த அரசிடமிருந்து நமக்கு என்ன தேவை என்பதை வெளிப்படையாக கேட்பதற்கு உறுதியேற்க வேண்டும் என்கின்றேன்.அரசியல்வாதிகள் தங்களது கடைகளில் அல்லது தங்களது கம்பெனிகளில் ஓடாத அல்லது கமிஷனுக்கு பெற்றுவரப்பட்ட பாத்திரங்களை நம் தலையில் கட்டி நமக்கு தலைவனாக நினைத்தால் அதனை அப்படியே பல் இழித்துக்கொண்டு பெறாமல் எங்களுக்கு எது வேண்டுமோ அதனை செய்துகொடுங்கள் என்று தைரியமாக கேட்கவேண்டும் என்கின்றேன்.
எது எப்படியோ!இனியாவது மக்கள் தங்களுக்கு இந்த அரசிடமிருந்து என்ன தேவை என்பதை மக்களே முடிவு செய்ய உறுதியேற்கவேண்டும் என்பதை இங்கு பதிவு செய்துகொண்டு அடுத்தபடியாக தற்போதைய நிலையில் தமிழக மக்களுக்கு அப்படி என்னதான் மிகமுக்கிய தேவையிருக்கின்றது என்று அலசிப்பார்ப்போமேயானால் குறிப்பாக தமிழக மக்களுக்கு ஐந்து மிகமுக்கிய தேவைகள் இருப்பதாக என்னால் காணமுடிகின்றது.அவை ஒவ்வொன்றையும் வட்டுறுக்கமாக இங்கே பதிவுசெய்வது நம் ஒவ்வொருவருக்கும் மிக பிரயோஜனமிக்கதாக அமையும் என்றே நம்பி அவற்றை கீழே பதிவுசெய்கின்றேன்.ஒருவேலை உங்களுடைய கருத்து ஏதேனும் இருந்தால் அதனை என்னுடைய மின் அஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள் நிச்சயம் அதன் மூலம் நான் மிகவும் பயன்பெற்றுக்கொள்வேன்.

தற்போதைய நிலையில் தமிழக மக்களுக்கு என்ன தேவை?


1.தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்ப அட்டைதாரரின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் அரசு நிதி வழங்க வேண்டும்.


2026-யின் அறிக்கைப்படி தமிழகத்தில் கிட்டதட்ட 7.76 கோடி மக்கள் வசித்துவருகின்றார்கள்.இவர்களில் 9.42 லட்சம் நபர்கள் அரசு ஊழியர்களாக பணியாற்றி வருகின்றார்கள்.மேலும் 6.50 லட்சம் அரசு பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் காலியாகவும் உள்ளது.இந்நிலையில் ஏனைய தமிழக மக்களுக்கு அவர்களின் கல்வி,பொருளாதாரம் சார்ந்த நிலைகளை உயர்த்துவதற்கு அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏதேனும் ஒரு தொழில் தொடங்க போதுமான நிதி வழங்கி உதவி செய்ய வேண்டும் என்பதே தற்போதைய நிலையில் தமிழக மக்களுக்கு மிக முக்கிய முதல் தேவையாக இருக்கின்றது என்று நான் கருதுகின்றேன்.

ஓருவேலை ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி,சீருடை,உணவு போன்ற பல்வேறு அத்தியாவசிய தேவைகளை தற்போதைய தமிழக அரசே செய்துவருகின்றது.அவை மட்டுமல்லாமல் மகளிர் உதவித் தொகையாக தற்போதைய திமுக அரசு 1000/-ரூபாயை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கிவருகின்றது என்பதாக நீங்கள் கேட்டால்..!உண்மையில் தற்போதைய அரசின் மேற்கூறிய திட்டங்கள் மக்களுக்கு உதவியாகத்தான் இருக்கின்றது என்றாலும் அதனால் மக்களின் பொருளாதார நிலை இன்னும் வளர்ச்சியடையாமல் இருக்கின்றது என்பதையும் ஒரு எழுத்தாளனாக இங்கு பதிவுசெய்ய கடமைபட்டிருப்பதாக உணர்கின்றேன்.

மேலும் தற்போதைய விலைவாசி உயர்வோடு அரசு வழங்கும் 1000/- ரூபாயை ஒப்பிடுகையில் அது பெரும்பாலும் மக்களின் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு உதவவேவில்லை என்பதையே நிதர்சனமாக காண்கின்றேன். இப்படி ஒவ்வொரு மாதமும் 1000/- ரூபாய் வழங்கி உதவுவதால் அரசிற்கு அதிகப்படியான செலவும் மக்களின் பொருளாதார நிலை அப்படியே இருக்கும் சூழலும்தான் ஏற்படுகின்றதே தவிர இவற்றால் தமிழக மக்களின் வாழ்வாதாரத்திலோ அல்லது பொருளாதாரத்திலோ எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.எனவே மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்கள் தொழில் செய்யவோ அல்லது உற்பத்தி செய்யவோ அல்லது ஏற்றுமதி, இறக்குமதி செய்யவோ போதுமான குறைந்தபட்ச நிதியை வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்.

மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருவது நிச்சயம் ஒரு உதவிதான் என்றாலும் அவ்வுதவியை விரிவுபடுத்தி தனிநபர் பொருளாதாரத்தையும் நாட்டின் கூட்டு பொருளாதாரத்தையும் வளர்க்க யார் வழிவகை செய்ய முன் வருகின்றார்களோ அவர்களுக்குத்தான் நம் ஓட்டு என்ற முடிவிற்கு மக்களாகிய நாம் வரவேண்டும் என்பதை பணிவன்போடு கேட்டுக்கொண்டு அடுத்தபடியாக தமிழக மக்களுக்கு இரண்டாவதாக மிகமுக்கிய தேவை என்ன என்பது குறித்த பகுதிக்கு செல்கின்றேன்.

2.தனியார் ஊழியர்களுக்கு பொருளாதார ரீதியில் போதுமான ஊதியம் வழங்க அரசு சட்டம் இயற்ற வேண்டும்.


இந்தியாவில் தொழிலார்கள் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ஒருசில அடிப்படை உரிமைகளை தற்பொழுது பெற்றுவருகின்றார்கள் என்றாலும் இன்னும் அவர்களுக்கான ஊதியத்திலும் வேலைநேரத்திலும் பல்வேறு குழறுபடிகளை சந்தித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.அந்த வகையில் குறிப்பாக தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் உழைப்பாளர்களின் உழைப்பை சுரண்டும் வண்ணமாக ஆதிக்க மனோபாவம் கொண்ட முதலாளிகள் அடிப்படை ஊதியம்கூட வழங்குவதில்லை என்பதை அரசே முன்வந்து சரிசெய்ய வேண்டும்.ஏழை எளிய மக்கள் அன்றாட உணவிற்காகவும்,வாழ்வாதாரத்திற்காகவும் தங்களின் கால்களில் விழுந்துகிடந்துகொண்டே இருக்க வேண்டும் என்ற ஆதிக்க மனோபாவம் கொண்ட முதலாளிகளுக்கு எதிராக உழைப்பாளர்களுக்கு அவர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்குவதை அரசு சட்டம் இயற்றி பாதுகாக்கவேண்டும்.

முதலாளிகளின் வியாபாரத்தில் வருகின்ற லாபத்தின் கூட்டாளிகளாக திகழும் தொழிலாளர்களுக்கு சரிசமமான பங்கு இல்லையென்றாலும் தற்போதைய விலைவாசிகளை கருத்தில்கொண்டு அவர்களின் ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதே தமிழகத்தில் பல்வேறு தொழிலார் நலச்சங்கங்களின் வேண்டுகோளாக இருக்கின்றது.அவ்வாறு அரசு நீதமான ஒரு ஊதியத்தை நிர்ணயிக்கத் தவரினால் ஓரளவு நாகரீகத்தை நெருங்கிச்செல்லும் இந்த மனித சமூகம் திரும்பவும் கற்காலத்திற்கே இழுத்துச் செல்லப்படும் ஆபாயம் காத்திருப்பதாகவும் எச்சரிக்கின்றது.

எனவே தனியார் நிறுவனங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்றிக்கொள்ளும் அளவிற்கான குறிப்பிட்ட ஊதியத்தை அரசே நிர்ணயம் செய்து சட்டம் இயற்றி தமிழக மக்களின் வாழ்வாதாரத்தையும்,பொருளாதாரத்தையும் செழிப்பாக்கவேண்டும். அப்படியில்லையெனில் எந்த அரசு அதனை செய்ய முன்வருகின்றதோ அந்த அரசிற்கே நமது ஓட்டு என்று மக்களாகிய நாம் முடிவுசெய்ய வேண்டும் என்பதை இங்கு நினைவூட்டிக்கொண்டு அடுத்தபடியாக தமிழக மக்களுக்கு மூன்றாவதாக மிகமுக்கிய தேவை என்ன என்பது குறித்து பதிவுசெய்கின்றேன்.

3.பெண்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும்.


தற்போதைய நிலையில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள்,கற்பலிப்புகள் அதிகமதிகம் நடந்தேறிக்கொண்டே இருக்கின்றது.அதிலும் குறிப்பாக குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்வது அல்லது அவர்களை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்குவது போன்ற குற்றங்கள் எங்கு பார்த்தாலும் நடந்தேறிக்கொண்டே இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றது.இத்தகைய நிலை தமிழக மக்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கிவருகின்றது.இதனை கட்டுக்குள் கொண்டுவர கூட்டு பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் அல்லது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்வில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அவர்களின் குற்றம் உறுதியானால் அதிகபட்ச தண்டனையாக தூக்குதண்டனை வழங்க அரசு சட்டம் இயற்ற வேண்டும்.

தமிழகத்தில் பெண்களின் மீது கைவைத்தால் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்ற சூழலை உறுவாக்க தற்போதைய அரசு உறுதியேற்க வேண்டும்.தற்போதைய தமிழக திமுக அரசு பெண்களுக்கு பல்வேறு விதங்களில் உதவிகள் பல செய்துவந்தாலும் பெண்களின் பாதுகாப்பு சம்மந்தமாகவும் கவனம் செலுத்த கடமைபட்டிருக்கின்றது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.அந்த வகையில் பெண்களுக்கெதிரான பாலியல் சீண்டல்கள் சார்ந்த குற்றங்கள் நிரூபனம் ஆணால் அவர்களுக்கு கடினமான தண்டனை வழங்க சட்டம் இயற்ற வேண்டும்.

அவ்வாறு சட்டம் இயற்றி பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத்தவறினால் அத்தகைய அரசை முடிவிற்குகொண்டுவந்து எந்த அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்கின்றதோ அதற்கு மட்டுமே நமது ஓட்டு என்பதை மக்களாகிய நாம் உறுதிபடுத்தவேண்டும் என்பதை இங்கு பதிவு செய்துகொண்டு அடுத்தபடியாக தமிழக மக்களின் நான்காவது மிக முக்கியதேவை என்ன என்பது குறித்து பதிவுசெய்கின்றேன்.

4.போதை பொருட்கள் வினியோகத்திற்கு எதிராக கடுமையான சட்டம் வேண்டும்.


தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல்,மற்றும் விற்பனை, இன்று மிகப்பெரும் பிரச்சினையாக உறுவெடுத்துவருகின்றது.கடந்த 11 மாதங்களில் 1,411 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிநாட்டவர்கள் உள்பட 3778 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் 61,627 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து 129 கொக்கைன், மெத்அம்பட்டமின் போதைப் பொருள் கடத்தல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.இவற்றில் குறிப்பாக சினிமாத்துறையில் உள்ள நடிகர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள் குறிவைத்து விற்பனைக்குள்ளாக்கப்படுவதும் அவர்களையே சப்ளையர்களாக உறுவாக்கும் நிலையும் தொடர்ந்துவருகின்றது.இத்தகைய நிலை இந்திய மக்களை குறிப்பாக தமிழக மக்களை மிகப்பெரும் சமூக சீர்கேட்டில் தள்ளிவிடுவதற்கான முயற்சியாகவே நான் காண்கின்றேன்.எனவே இதனை தற்போதைய அரசு கவனத்தில் கொண்டு போதைபொருள் கடத்துபவர்களை மற்றும் விற்பனைசெய்பவர்களை அடையாளம் கண்டு மிக கடுமையான தண்டனை வழங்க சட்டம் இயற்ற வேண்டும்.

மேலும் மது விற்பனையால் தமிழகத்தில் அரசிற்கு மிகப்பெரும் லாபம் வருகின்றது என்பதற்காக மக்களை சிறிதுசிறிதாக கொலை செய்யக்கூடிய மதுபானம் மற்றும் குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்வதற்கு பதிலாக அரசு மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த பானங்களையும்,பொருட்களையும் உற்பத்தி செய்து விற்பனைசெய்ய முன்வரவேண்டும்.அதனால் மது போன்ற போதை தரும் பொருட்களை உட்கொள்பவர்களால் ஏற்படும் குற்றங்கள் குறைந்து அரசுக்கு வருமானமும் பெருகி சிறந்ததொரு சமூக கட்டமைப்பையும் கட்டி எழுப்பிய சிறப்புகிடைக்கும் என்பதை கருத்தில்கொள்ள வேண்டும்.

மேலும் போதை பொருள் கட்டுப்பாடிற்கென்று தனிப்படைகள் அமைத்து அதனை விற்பனை செய்பவர்கள் மற்றும் பாவிப்பவர்கள் ஆகியோர்களை இனம் காண்பதோடுமட்டுமல்லாமல் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றவேண்டும்.அவ்வாறு செய்யவில்லையெனில் எந்த அரசு இதனை செயல்படுத்த முன்வருகின்றதோ அதற்குத்தான் என் ஓட்டு என்று மக்களாகிய நாம் முடிவுசெய்ய வேண்டும் என்பதை தாழ்வன்போடு இங்கு பதிவு செய்துகொண்டு தமிழக மக்களுக்கு கடைசியாக ஐந்தாவது மிகமுக்கிய தேவை என்ன என்பதையும் பதிவுசெய்துவிடுகின்றேன்.

5.அரசு வழங்கும் நலத்திட்டங்களில் ஊழல்களை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை அரசு இயற்ற வேண்டும்.


தமிழகத்தில் தற்போது அரசு அலுவலகங்கள்,டென்டர்கள், கட்டுமானப்பணிகள்,கல்விக்கூடங்கள்,மருத்துவமனைகள் என எல்லா புறங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகின்றது.அரசு சார்ந்த எந்த துறையென்றாலும் அவற்றில் ஒரு அலட்சியமும் போதுமான செயல்பாடின்மையும் தற்போதைய நிலையில் மிகப்பெரும் நோய்தொற்றாக நிலவிவருகின்றது.இத்தகைய நிலை அரசின் மீது மிகப்பெரும் அதிர்ப்தியை மக்களுக்கு ஏற்படுத்துயும் வருகின்றது.அவை மட்டுமின்றி இலவசமாகவோ அல்லது சிறிய கட்டணம் செலுத்தியோ அரசு செய்துதர வேண்டிய காரியங்களை அரசு அலுவலர்கள் பல ஆயிரங்கள் இலஞ்சம் பெற்றுக்கொண்டு செய்துகொடுப்பதை முற்றிலுமாக  ஒழித்துக்கட்ட கடுமையான சட்டம் இயற்றவேண்டிய மிக முக்கியமான தேவை தற்போதைய தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏழை மாணவர்கள் படித்து பயன்பெறுவதற்காக பல்லாயிரக்கணக்கான பள்ளிகளை அரசு நடத்திவருகின்றது.ஆனால் அவற்றில் ஆசிரியர்கள் பற்றாக்குரையால் அங்கு படிக்கும் ஏழை குழந்தைகளுக்கு கல்வியில் மிகப்பெரும் பின்னடைவு ஏற்படுகின்றது. அத்தோடு பல்வேறு கல்விக்கூடங்களில் ஆசிரியர்கள் தங்கள் பணியை சரிவர செய்யாமல் மாணவர்களின் கல்வியை பாலடித்துவருகின்றார்கள்.இத்தகைய நிலைகள் கலையப்படுவதற்கு அரசு கட்டாயம் வழிவகை செய்யவேண்டும். அவைமட்டுமின்றி தமிழகத்தில் பல ஆயிரம் சுகாதார மையங்களும்,அரசு மருத்துவமனைகளும் கட்டப்பட்டுள்ளது.ஆனால் அவற்றில் பணியாற்றுவதற்கு போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லை.இதனால் மக்கள் அரசு மருத்துவமனைக்கே செல்லமுடியாத அளவிற்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

குறிப்பாக நகர்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வேண்டுமென்றே மருத்துவர்கள் பணிசெய்யாமல் இருப்பது அல்லது தங்கள் பணியில் மிகப்பொடுபோக்காக செயல்படுவது போன்ற செயல்கள் அதிகமதிகம் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது.இவற்றிற்கெல்லாம் தீர்வு காண எந்த அரசு முன்வருகின்றதோ அந்த அரசிற்குத்தான் இந்த சட்டமன்ற தேர்தலில் எங்களது ஓட்டு என்று மக்களாகிய நாம் உறுதியேற்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இறுதியாக இக்கட்டுரையின் முடிவுரைக்கு வருகின்றேன்.

முடிவுரை:


அன்பு நண்பர்களே.! 2026- சட்டமன்ற தேர்தலில் குறிப்பிட்ட இந்த அரசியல் தலைவருக்கு ஓட்டுப்போடுங்கள் என்றோ அல்லது புதிதாக வந்திருக்கும் அந்த அரசியல் தலைவருக்கு ஓட்டுப்போடுங்கள் என்றோ சுட்டிக்காண்பிப்பது என்னுடைய நோக்கமல்ல.மாறாக மக்களாகிய நாம் மனநிறைவோடும் அடிப்படை வசதிகளோடும் கலவரங்கள் மற்றும் அடக்குமுறைகளின்றி அமைதியாக வாழ எந்த ஆட்சியாளர்கள் வழிவகை செய்கின்றார்களோ அவர்களுக்குத்தான் நம் ஓட்டு என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்பதையே இக்கட்டுரை மூலமாக நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

நிச்சயம் இக்கட்டுரை தற்போதைய நிலையில் தமிழகத்தில் யாருக்கு ஓட்டுப்போடுவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் நண்ப,நண்பிகளுக்கு மிக பிரயோஜனமிக்கதாக அமையும் என்றே ஆதரவு வைக்கின்றேன்.எல்லாம் வல்ல இறைவன் சிறந்த ஆட்சியாளரை நமக்கு வழங்கி நம் வாழ்வில் எல்லா வளங்கலோடும் மனநிறைவோடும் வாழ வழிவகை செய்வானாக என்று என்றென்றும் பிரார்த்திக்கின்றேன்.

நன்றி:
Author.A.Sadam husain hasani

செவ்வாய், 31 மார்ச், 2026

உலக வரைபடத்தை மாற்றத்துடிக்கும் இரண்டு மன நோயாளிகள் - The Two Mentally ill persons who try to change the world map


முன்னுரை:

என் ஆயுதப்படையும்,என் கப்பல்படையும்,என் விமானப்படையும் என் ஏவுகனைகளும்,என் அணுகுண்டுகளும் எத்தகைய சக்திவாய்ந்தது என்பதை உனக்கு காட்டாமல் விடப்போவதில்லை என்று கூறிக்கொண்டு அப்பாவி பொதுமக்களின் மீதும்,ஏதும் அறியாத பள்ளி குழந்தைகளின் மீதும் கொத்துக்கொத்தாக வீசித்திரியும் ஆதிக்க மனநோய் பிடித்த கொடூரர்களை மனநோயாளிகள் என்றே இங்கு அடையாளப்படுத்த விரும்புகின்றேன்.எப்படி அடிபட்டு வெறிபிடித்த மிருகங்களாக ஹிட்லரும்,முசோலினியும் ஜெர்மனியை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடவேண்டும் என்று இரண்டாம் உலகப்போரை தொடங்கி நாடுபிடிக்கும் மனநோயில் திரிந்தார்களோ அதனைப்போன்றே தற்போது இஸ்ரேல் அதிபர் 1.நெதன்யாகு, அமெரிக்க அதிபர் 2.டோனல்ட் ட்ரம்ப் என்ற இரண்டு நாடுபிடிக்கும் மனநோயாளிகள் இந்த உலகில் மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தி அதில் குழிர்காய போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த உலகில் பொருளாதாரத்திலோ அல்லது தொழில்நுட்பத்திலோ அல்லது இராணுவத்திலோ தன்னைவிட எந்த நாடும் பலமாக இருந்துவிடக்கூடாது என்பதுதான் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் விசித்திரமான மனநோய். இவர்களின் மனநோய் தெருவில் நடக்கும் எவரைப் பார்த்தாலும் தனக்கு அச்சுறுத்தலாக மட்டுமே பார்க்கக்கூடிய அளவிற்கு முற்றிவிட்டிருக்கின்றது. தன்னைவிட அல்லது தனக்கு நிகரான பலமுடையவராக இந்த உலகில் யாரும் இருக்கக்கூடாது என்பதுதான் இந்த மன நோயாளிகளுக்குள் குடிகொண்டிருக்கும் மோசமான நிலை.தன்னைவிட பலமாகவோ அல்லது தனக்கு நிகராகவோ யாரையாவது இவர்கள் கண்டால் அவரின்மீது எப்படியாவது ஆதிக்கம் செலுத்தி தனது கட்டுப்பாட்டில் அவரை வைத்துவிட வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.எந்த நாடாவது சுயமாக முன்நேற்றம் காண்கின்றது என்றால் அடுத்த நொடியே அதனை நாசமாக்குவதற்கோ அல்லது அதனை அநியாயமாக சூரையாடுவதற்கோ திட்டம் தீட்டிவிடுவார்கள்.அதற்காக அந்நாட்டை உலகின் அச்சுறுத்தல் என்றோ அல்லது தனது நாட்டிற்கு எதிரான பயங்கரவாதம் என்றோ இந்த முட்டால் உலகிற்கு முகத்திரை அணிவித்து அந்நாட்டையும் அதன் வளங்களையும் சுரண்டி சூரையாடிவிடுவார்கள்.

இவர்கள் நினைத்தாள் ஒருசில நிமிடங்களில் ஏதோ ஒரு நாட்டின் தலைவரை மிக இலகுவாக கொலை செய்துவிட முடியும் என்றும்,இவர்கள் நினைத்தால் ஏதோ ஒரு நாட்டின் மொத்த வளங்களையும் சூரையாடி சின்னாபின்னமாக்க முடியும் என்றும் காட்டிக்கொள்வது இந்த உலகை முடிவிற்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்கள் என்ற எச்சரிக்கை மணியாகவே நான் காண்கின்றேன்.இத்தகைய மனநோயாளிகள் இந்த உலகையும் அதன் வரைபடத்தையும் சிதைத்து சின்னாபின்னமாக்க துடித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை இப்பொழுதேனும் இந்த உலகை காக்க விரும்பும் நல்லுள்ளங்கள் விழித்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த கட்டுரையை தொகுத்திருக்கின்றேன்.நிச்சயம் இந்த கட்டுரை தற்போது இந்த உலகை சூழ்ந்திருக்கும் போர் நிலையையும் அதன் காரணியையும் தெளிவுபடுத்தும் என்றே நம்புகின்றேன். நீங்களும் இந்த கட்டுரையை வாசித்து பிற நண்பர்களுக்கும் பகிர்ந்து பயன்பெறச்செய்யும்படி அன்போடு வேண்டிக்கொள்கின்றேன்.

ஆதிக்க மனநோயே போர்களின் துவக்கப்புள்ளி:

இந்த உலகம் முழுவதையும் ஏதாவதொரு வகையில் தன் கட்டுக்குள் வைத்து அடக்கி ஆட்சி செய்துவிட வேண்டும் என்ற பேராசை இந்த உலகம் சுழல ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் புதைந்துகிடக்கத்தான் செய்கின்றது.நாட்டின் அரசர்களாக இருந்தவர்கள் அவர்களின் ஆளுகைக்கேற்ப தனக்கு கீழுள்ள மனிதர்களின் மீது தன்னால் முடிந்தளவு ஆதிக்கம் செலுத்தத்துடித்தார்கள்.பிரஞ்சைகளாக இருந்தவர்கள் அதே ஆதிக்கத்தை எப்படியாவது அடைந்து அனைத்து மக்களையும் தானும் அடக்கியாண்டுவிட வேண்டும் என்ற பேராவலில் ஏங்கிக்கொண்டிருந்திருக்கின்றார்கள்.இவ்வளவுதான் மக்களுக்கும், மன்னர்களுக்கும்,ஆட்சியாளர்களுக்கும் மத்தியில் அன்று முதல் இன்று வரை இருக்கும் வேறுபாடாக நான் காண்கின்றேன்.இவற்றைத்தவிர்த்து ஒரு மனிதன் சகமனிதனின் மீது அநியாயமாக ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்று போதிப்பதற்கோ அதனை செயல்படுத்துவதற்கோ ஒருவரும் இல்லாத நிலையையே இந்த மனித சமூகம் எல்லா காலங்களிலும் எட்டியிருந்திருப்பதாக வரலாற்றில் நம்மால் காணமுடிகின்றது.

ஆம்!இது என் எல்லை என்றும்,இது என் வான்பரப்பு என்றும்,இது என் நிலப்பரப்பு என்றும், கூறிக்கொண்டு இந்த உலகில் ஓட்டப்பட்ட இரத்தங்கள் பல நூறு மில்லியன் லிட்டர்கள் என்பதை வரலாறுகள் இன்றும் துள்ளியமாக பதிவு செய்துவைத்திருக்கின்றது.யாரோ ஒருவரின் மீது எங்கோ ஏற்பட்ட வெறுப்பிற்காக, அல்லது யாரோ ஒருவருடன் எதற்காகவோ ஏற்பட்ட முரன்பாட்டிற்காக, அவரின் இரத்தத்தை ஓட்டாமல் ஓயப்போவதில்லை என்றும் அவரின் உடமைகளை பறித்து நடுத்தெருவில் அவரை நிறுத்தாமல் விடப்போவதில்லை என்றும் இந்த மனித சமூகத்திற்குள் நடந்தேரிய அட்டூழியங்கள் எண்ணில் அடக்கமுடியாதவை.

உண்மையில் இந்த உலகில் மனித சமூகம் பல்வேறு காரணங்களுக்காக போர்புரிந்திருக்கின்றது.அவற்றில் சில போர்கள் தன்னை தற்காத்துக்கொள்ளவும்,தன் உடமைகளை பாதுகாத்துக்கொள்ளவும் நடத்தப்பட்டிருந்தாலும்,பல போர்கள் பிற மக்களை அடிமைகளாக்கி அடக்கியாளவும்,அவர்களின் உடமைகளை அநியாயமாக சொந்தமாக்கிக்கொள்ளவும்,அவர்களின் நம்பிக்கைகளை இழிபடுத்தி புலங்காகிதம் அடைந்துகொள்ளவும்தான் நடத்தப்பட்டிருக்கின்றன என்பதை மிக வெளிப்படையாகவே இங்கு நான் பதிவு செய்ய கடமைபட்டிருக்கின்றேன்.

அவ்வளவேன் ஏதும் அறியாத ஒரு வீட்டு செல்லப்பிராணி பக்கத்துவீட்டில் வைத்திருந்த பானையில் உள்ள தண்ணீரை குடித்துவிட்டது என்பதற்காக இரண்டு வீட்டார்களும் பல ஆண்டுகளாக கோத்திரம்,கோத்திரமாக போர்புரிந்திருக்கின்றது என்ற வரலாறுகளின் மூலம் இந்த மனித சமூகம் எத்துணை மோசமான மடமைத்தனத்தில் கழித்திருக்கின்றது என்பதை  அறிந்துகொள்ள முடிகின்றது.இப்படி இந்த பூமியில் இந்த மனித சமூகம் ஒருவர் மற்றொருவருக்கு எதிராக தன் பலம் என்ன என்பதை வெளிக்காட்டவோ அல்லது இங்கு எல்லோரும் எனக்கு கீழ்தான் என்பதை நிறூபித்துக்காட்டவோ செய்த அட்டூழியங்கள் வார்த்தைகளால் விவரிக்கமுடியாதவை. தொட்டதிற்கெல்லாம் கொலை,கொள்ளை சர்வநாசம் என்று காட்டுமிராண்டித்தனமான வாழ்வை இந்த மனித சமூகம் பல ஆயிரம் ஆண்டுகளாக கடந்து வந்திருக்கின்றது.

ஆனால் தற்பொழுது இந்த மனித சமூகம் மனித நேயம்,சட்ட ஒழுங்கு,சமூக அக்கரை என்ற பெரும் பாக்கியம்பெற்ற நாகரீத்தின் பக்கம் வார்த்தெடுக்கப்பட்டபின்பும் எதெற்கெடுத்தாலும் போர்,அழிவு,நாசம் என்ற இழிவான சூழல்களுக்குள் இழுத்துச்செல்லப்படுவது இந்த மனித சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரும் சாபம் என்பதாகவே நான் காண்கின்றேன். எப்படியாவது யாரோ ஒருவரின் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற மனநோய் இன்று ஒவ்வொரு வீட்டின் சமயலரை தொடங்கி வானம், பூமி,கடல் என்று பரந்துவிரிந்து சென்றுகொண்டேபோகின்றது.அந்தளவிற்கு கண்ணில்படும் மனிதர்களையெல்லாம் அடக்கி ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் மன நோயாளிகள் தற்போதைய பூமியை ஆட்கொள்ள ஆரம்பித்திருக்கின்றார்கள் என்பதாகவே என்னால் உணரமுடிகின்றது.

இரண்டாம் உலகப்போரில் கிட்டதட்ட 90 லட்சம் உயிர்களை காவு வாங்கிவிட்டு ஒருசில ஆண்டுகளாக போரின்றி சப்தமின்றி அமைதியாக சென்று கொண்டிருந்த இந்த பூமியையும் அதன் வரைபடங்களையும் சிதைத்துப்பார்ப்பதற்கு தற்போது இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகுவும் அவரைப்போன்ற ஆதிக்க மனநோய்பிடித்த அவரது நண்பரான அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பும் இந்த சதுரங்க ஆட்டத்தை ஆடத் தொடங்கியிருக்கின்றார்கள்.மனித வாழ்வின் மான்புகளை உணராத இந்த மனநோயாளிகள் இந்த மனித சமூகத்தை திரும்பவும் கற்காலத்திற்கே திருப்பி இழுத்துச்செல்ல அணி திரட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டை காத்துக்கொள்வதற்காகவே உறுவாக்கிய NATO என்ற இராணுவ கூட்டமைப்பை வைத்து பல்வேறு நாடுகளையும் பிடித்துவிடலாம் என்று இந்த இரு மனநோயாளிகளும் தப்புக்கணக்கு போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் மடத்தனங்களால் ஏற்படப்போகும் மிகப்பெரும் ஆபத்தை இந்த உலகம்தான் சந்தித்துக்கொண்டிருக்கின்றது இன்னும் சந்தித்திக்கவும்போகின்றது.ஒருசில தினங்களுக்கு முன்பு ஈரானை திடீரென்று தாக்கி அவர்கள் பெரிதும் மதிக்கக்கூடிய அவர்கள் நாட்டின் அதிஉயர் பதவியில் இருந்த தலைவர் அயதுல்லா கமேனியை பலநூறு குண்டு மழைபொழிந்து அவரை கொலை செய்தார்கள்.அதன் விளைவாக ஈரான் இஸ்ரேலின் மீதும் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீதும் ஏவுகணை தாக்குதல்களை தொடுத்துவருகின்றது.மேலும் கப்பல் பறிமாற்றம் செய்யும் ஹர்மூஸ் அணையை தங்களின் பகுதியில் முற்றாக மூடிவிட்டது. அதனால் இன்று பல்வேறு நாடுகளும் எறிபொருள் மற்றும் எறிவாயு மற்றும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துவருகின்றது.குறிப்பாக தங்களின் இறையாண்மையை இழிவு செய்யும் வண்ணம் செயல்பட்ட நெதன்யாகு மற்றும் ட்ரம்ப் ஆகிய இருவரும் செய்த மடத்தனத்திற்கு அவர்களின் நட்பு நாடுகளும் இப்பொழுது தண்டனை பெறுகின்றன. இவற்றிற்கிடையில் தற்பொழுது ஹர்மூஸ் அணையை திறப்பதற்காக மிகப்பெரும் படையை திரட்டி இந்த பூமியை நாசக்காடாக்குவோம் எல்லோரும் வாருங்கள் என்று இந்த இரு மனநோயாளிகளும் ஏனையோர்களையும் கூவி அழைப்பது கொடுமையிலும் கொடுமை.

முடிவுரை:

இந்த இரு மனநோயாளிகளும் செய்யும் அட்டூழியங்களை தாங்கள் செய்யும் சாகசங்களாகத்தான் இப்பொழுதும் கூறிக்கொள்கின்றார்களே தவிர இவர்கள் தங்களின் தவறுகளை உணர்வதற்கோ அல்லது யாராவது இவர்களுக்கு உணர்த்துவதற்கோ வாய்ப்பே இல்லாத நிலையை அடைந்துவிட்டார்கள். இத்தகைய நிலையில் மொத்த பூமியையும் ஒருசில விநாடிகளில் அழித்தொழித்துவிடும் அணுஆயுதங்களையும் இந்த மன நோயாளிகள்  கையில் வைத்திருக்கின்றார்கள் என்பதை விரைவாக கருத்தில்கொண்டு முதலில் இவர்களை அதிகாரக் கட்டிலிலிருந்து இந்த உலகம் அகற்றவேண்டும். அடுத்தபடியாக ஆதிக்க மனோபாவம் கொண்ட இந்த மனநோயாளிகளுக்கு சிறந்த மருத்துவர்கள் மூலம் சிகிச்சையுமளிக்க வேண்டும் என்பதையே இவர்களுக்கான மற்றும் இந்த உலகம் பாதுகாக்கப்படுவதற்கான சிறந்த தீர்வாக அமையும் என்பதை இறுதியாக இங்கு பதிவுசெய்து கொண்டு இக்கட்டுரையை  இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.

நன்றி: ஆசிரியர்.அ.சதாம் உசேன் ஹஸனி.

வெள்ளி, 20 மார்ச், 2026

முஸ்லிம்கள் ஏன் ஈத் பெருநாளை கொண்டாடுகின்றனர்-Why Muslims are Celebrating Eid-AL-Fitir?

 

முஸ்லிம்கள் ஏன் ஈத் பெருநாளை கொண்டாடுகின்றனர்?

முன்னுரை:

இந்த உலகில் எல்லா மதங்களுக்கும் எல்லா இனங்களுக்கும் எல்லா குழுக்களுக்கும் எல்லா சமூகத்திற்கும் மனம் மகிழ்ந்து கொண்டாடுவதற்கென்று ஒரு நாள் நிர்னயிக்கப்பட்டிக்கின்றது. அந்நாளில் அம்மதத்தைச் சார்ந்த அல்லது அவ்வினத்தைச்சார்ந்த அல்லது அக்குழுவைச்சார்ந்த மக்கள் தங்கள் முழு சக்தியையும் செலவழித்து கோலாகலமாக கொண்டாடியும் மகிழ்கின்றனர்.சிலர் அப்படி கொண்டாடி மகிழ்வதற்கான காரணங்களை குறிப்பிடுகின்றனர்.சிலர் அவற்றிற்கான காரணம் இல்லையானாலும் வாழையடி வாழையாக பின்பற்றிவருகின்றனர். அந்த வகையில் வருடாவருடம் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பிற்கு பிறகு ஈத்பெருநாள் (அதாவது ஈகை திருநாள்)என்ற தினத்தை மிக கோலாகலமாக கொண்டாடி வருவதை நாமெல்லாம் காணமுடிகின்றது.அப்படி அவர்கள் கொண்டாடுகையில் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி முகமன் வாழ்த்து கூறியும், பரிசுப் பொருட்கள் வழங்கியும் தங்கள் மகிழ்சியை வெளிப்படுத்திக்கொள்கின்றனர்.

இவ்வாறு குறிப்பிட்ட ஒருநாளை இஸ்லாமியர்கள் ஏன் கொண்டாடுகின்றனர் என்றும் அதற்கு ஏதேனும் முக்கிய காரணம் இருக்கின்றதா என்றும் ஒருசில நண்பர்கள் என்னிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.என்னால் முடிந்தளவு அவற்றின் காரணத்தை எளிய வடிவில் இங்கு பதிவு செய்ய முயல்கின்றேன்.இக்கட்டுரையை நீங்கள் வாசித்து பயன் பெறுவதோடு உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து பயன்பெறச் செய்யும்படி அன்போடு வேண்டிக்கொள்கின்றேன்.

இஸ்லாமிர்கள் ஏன் ஈத் பெருநாளை கொண்டாடுகின்றனர்?

முதல் காரணம்:

அடிப்படையில் இஸ்லாமியர்கள் ரமலான் எனும் புனிதமிகு மாதத்தில் 30 நாட்களும் தங்களின் இறைவனுக்காக பசித்திருந்து பல்வேறு மனோ இச்சைகளையும் தவிர்த்திருந்து இறைவழிபாட்டில் திழைத்திருப்பதென்பது இறைவன் அவர்களுக்கு வழங்கிய மாபெரும் பாக்கியமாக கருதுகின்றனர். எனவே அத்தகைய பாக்கித்தை முழுமையாக வழங்கிய இறைவனுக்கு நன்றி கூறும் வண்ணமே இத்தகைய ஈத்பெருநாளை இறைவனுக்கு நன்றி கூறும் திருநாளாக இஸ்லாமியர்கள் கொண்டாடிவருகின்றனர்.

இரண்டாவது காரணம்:

இந்த குறிப்பிட்ட நாளை கொண்டாடும் இஸ்லாமியர்கள் தாங்கள் புத்தாடை அணிந்து,சிறந்த உணவுகளை உட்கொள்வதற்கு முன்பே பிற ஏழைகளுக்கும்"ஈதுல் ஃபித்ர்" என்னும் பசியை தீர்க்கும் தானதர்மங்களை செய்து பிறமனிதர்களையும் மகிழ்வித்துவிட வேண்டும் என்று போதிப்பதால் இந்நாளை கொண்டாடி மகிழ்கின்றனர்.இதன் மூலம் பசித்திருத்தளின் வலியையும் பிற ஏழைகளுக்கு பசியாற்ற வேண்டிய கடமையையும் கற்றுணர்கின்றார்கள்.ஏழை எளிய மக்களின் பசியாற்றி மகிழச்சொல்லும் இத்தகைய  கொண்டாட்டம் மிக அற்புதமான சமூக வாழ்விற்கு வழிவகை செய்வதால் பல்வேறு சமூக அக்கறை கொண்ட பிறமத நன்மக்களும்கூட இதனை வெகுவிமர்சையாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

மூன்றாவது காரணம்:

இந்த ஈத் பெருநாளில் எல்லா மக்களும் ஒற்றுமையாக ஒரே திடலில் ஒன்று கூடி இறைவணக்கம் புரிந்து ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி மகிழவேண்டும் என்று போதிக்கப்படுவதால் அத்தகைய சகோதரத்துவத்தையும்,மனித நேயத்தையும் காப்பதற்காக இந்நாளை வெகுவாக கொண்டாடிவருகின்றனர். இந்த கொண்டாட்டத்தால் மக்களின் மனங்களில் புதைந்து கிடக்கும் வெறுட்சிகள்,வஞ்சங்கள் நீங்கி அன்பும், அரவணைப்பும் மலர்கின்றது.மேலும் சமூக ஒழுங்கை கட்டமைப்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றது என்பதாலும் இஸ்லாமியர்கள் இதனை கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.எனவே இந்த ஈகை திருநாள், வெறும் சடங்கு சம்பிரதாயமாகவோ அல்லது ஏதோ ஒரு மதவழிபாடாகவோ மட்டும் கொண்டாடப்படாமல், மனிதர்களின் மான்புகளை மதிப்பதற்கும்,சமூக அக்கரையோடு இந்த மனித சமூகம் செயல்படுவதற்கும் வலியுறுத்துகின்றது என்பதற்காவே இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்றது.

முடிவுரை:

ஆக கொண்டாட்டம் என்ற பெயரில் தன்னை அழித்துக்கொள்வதையும்,பிற மனிதர்களுக்கு தொல்லை தருவதையும் கோலாகலமாக கொண்டாடப்படும் இன்றைய சூழலில்,இறைவனுக்கு நன்றி செலுத்தி,பிற மனிதர்களுக்கு தர்மம் செய்து மகிழ்விப்பதை போதிக்கும் இத்தகைய ஈகை திருநாள் போற்றப்பட வேண்டும் என்பதே எனது நம்பிக்கையாகும்.மேலும் ரம்ஜான் என்றாலே பிரியாணி என்று பிறமத சகோதரர்கள்கூட போற்றும் அளவிற்கு இந்த ஈகை திருநாளை பசியாற்றும் பெரும் நாளாக தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் நிறூபித்துக்கொண்டுமிருப்பது தமிழக இஸ்லாமியர்களின் ஈகை கொள்கைக்கு மிகப்பெரும் சான்றாகவும் நான் காண்கின்றேன்.இத்தகைய அன்பும், அரவணைப்பும்,சமூக அக்கரையும் கொண்ட கொண்டாட்டம் இந்த மனித குலத்தை சிறந்த புரிந்துணர்வோடு என்றென்றும் காக்கட்டும் என்றும் இதன் வழிநடக்கும் எல்லா மனிதர்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் எல்லா நலவுகளையும் வழங்கட்டும் என்றும் என்றென்றும் பிரார்திக்கின்றேன்.

நன்றி: Author.A.Sadam husain hasani

புதன், 18 மார்ச், 2026

மனிதன் முழுமை பெறவே முடியாதா?Can a person not fulfill him?


முன்னுரை:

என்னுடைய புத்தகத்திற்கு "முழுமை பெற்ற மனிதானக இரு"என்று நான் பெயரிட்டதை வைத்து பல்வேறு நண்பர்களும் ஒரு மனிதன் முழுமை பெறுவது என்பது சாத்தியமற்ற விஷயமாயிற்றே எப்படி நீங்கள் முழுமை பெற்ற மனிதனாக இரு என்று புத்தகம் எழுதுகின்றீர்கள் என்பதாக ஆச்சர்யமாய் கேட்கின்றனர்.இன்னும் சிலர் இந்த உலகில் எந்த மனிதனும் முழுமை பெற்றவனெல்லாம் கிடையாது.எல்லோரும் இங்கு அயோக்கியர்கள்தான் யாரும் இங்கு யோக்கியரில்லை என்று ஆணித்தரமாய் கூறி முற்றிலுமாய் என்னை எதிர்க்கின்றனர்.இத்தகைய எதிர்திசைகளுக்கு விரிவான விளக்கமளிக்க ஒரு எழுத்தாளனாக இங்கு நான் கடமைபட்டிருப்பதை கட்டாயமாக உணர்கின்றேன்.அதன் அடிப்படையில் உலகில் பிறக்கும் ஒரு மனிதன் முழுமை பெறவே முடியாது என்ற முரண்பாட்டிற்கு முதலில் இங்கு விளக்கமளித்துவிடுகின்றேன்.

மனிதன் முழுமை பெறவே முடியாதா?

இந்த உலகில் இறைவனால் படைக்கப்பட்ட அல்லது இயற்கையால் உறுவாக்கப்பட்ட அனைத்துமே தன்னால் முடிந்தளவு தன்னை முழுமைபடுத்திக்கொள்வதற்காகவே  உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்ற பேருண்மையை இந்த மனித சமூகம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையே முதலில் இங்கு நான் சுட்டிக்காட்ட கடமைபட்டிருக்கின்றேன்.

ஆம்..!

சுருங்கிய சுருளிற்குள் சுருண்டுவிடாமல் பீரிட்டு எழுந்து,பசுமை பொழிந்து, பூக்கள் பூத்து,காய்கள் தரித்து,கனிகள் பொழிந்து பிறருக்கு குடையாகவும் தனக்கு நிழலாகவும் கம்பீரமாய் காட்சியளித்து தன்னை முழுமைபடுத்த துடிக்கும் ஒவ்வொரு செடிகொடிகளும் இதற்கு சாட்சி.!

கண்கவரும் வண்ணம் பூசி,கதைகள் கூறும் அறைகள் தொடுத்து,கட்சிதமான ஜன்னல்கள் வைத்து,அதற்கேற்ப திரை சீலையும் தைத்து,வண்ணமயமாய் காட்சிதரும் ஒவ்வொரு பூக்களும் இதற்கு சாட்சி.

இப்படி நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ஒவ்வொன்றையும் கவனித்துப்பார்த்தால் அவை அனைத்தும் தன்னை தனித்துவத்தோடு செழுமைப்படுத்தி, முழுமைபடுத்தி, திருப்தியுற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை கண்ஊடாக கண்டுகொள்ளலாம்.அப்படி இருக்கையில் மனிதன் மட்டும் எப்படி தன்னை செழுமைபடுத்தி முழுமையாக்கிக்கொள்ள முடியாது என்று வாதிடமுடிகிறது என்பதுதான் வேடிக்கையாக உள்ளது.உண்மையில் மனிதன் முழுமை பெறவே முடியாது என்ற வாதம் இந்த உலகில் மனிதன் தறிகெட்டு தான்தோன்றித்தனமாக வாழ்வதை நியாயப்படுத்துவதற்கு வேண்டுமானால் உதவியாக அமையுமே தவிர மனித வாழ்வை மேம்படுத்தவோ அல்லது அவனை மனநிறைவான சுதந்திரத்தோடு வாழவைக்கவோ உதவாது என்பதையே நிதர்சனமாக நான் காண்கின்றேன்.

அவைமட்டுமின்றி தற்போதைய நிலையில் சுய ஒழுக்கங்களும் சமூக அக்கறைகளும் மனித வாழ்வை சிறைப்படுத்தும் பெரும் பாரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.இன்னும் சொல்லப்போனால் தற்போதைய நிலையில் தனிமனித ஒழுங்கிற்கும்,சுதந்திரத்திற்குமான வேற்றுமையை புரிய வைப்பதே மிகப்பெரும் சவாலாக இருக்கின்றது.ஏனெனில் தனிமனித ஒழுங்கைப்பற்றியோ அல்லது யாருக்கும் எவ்விதத்திலும் அநீதி இழைத்துவிடாத சுதந்திரத்தைப்பற்றியோ பேசினால் அவை பழம்பெருமையாகவோ அல்லது சலிப்பூட்டும் வேடிக்கையாகவோ மட்டுமே பார்க்கப்படுகின்றது.இவை ஒருபுறம் இப்படி இருக்க மற்றொரு புறம் மது,மாது,கொலை,கொள்ளை என தறிகெட்டு,பிற மனிதர்களையும் அடக்குமுறைக்குள்ளாக்கி அநீதி இழைப்பதுதான் வாழ்வின் மிகப்பெரும் சாகசம் என்பதாக பெரும்பாலான திரைக்கதைகளால் போதிக்கப்பட்டுள்ளது. அவை பெரும்பாலன மனிதர்களால் போற்றவும்படுகின்றது. 

இப்படி தற்போது எல்லா புறங்களிலும் மனித வாழ்வின் ஒழுங்கின்மையை வரவேற்பவர்களைப் பார்த்து ஒருசில கேள்விகளை இங்கு நான் கேட்க விரும்புகின்றேன்.அதாவது நீங்கள் நடத்தும் ஒரு நிறுவனத்தில் அனைத்தும் ஒழுங்கற்றதாக இருப்பதை நீங்கள் உங்களுக்காக ஏற்றுக்கொள்வீர்களா?முடியாது என்று கூறுவீர்களேயானால் பிறகு எப்படி மனிதனின் ஒழுங்கின்மையை மட்டும் உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகின்றது?மேலும் இந்த உலகில் எதையும் சரிசெய்ய முடியாது என்றும் இங்கு யாரும் ஒழுங்கல்ல என்றும் கூறுவதின் மூலம் இந்த மனித சமூகத்திற்கு நீங்கள் எதனை கற்றுத்தர விரும்புகின்றீர்கள்?

இந்த கேள்விகளுக்கெல்லாம் இந்த மனித சமூகத்தை தட்டழிந்து திரியச்செய்ய நினைக்கின்ற அல்லது இந்த மனித சமூகத்தை வாழ்வின் வெறுட்சியில் சுழலவைக்க நினைக்கின்ற எவரிடமும் ஒழுக்கக்கேடு என்பதை தவிர வேறு எந்த பதிலுமில்லை.ஏனெனில் அவர்கள் ஒழுங்கின்மை என்ற பாதாளக்குழிகளுக்குள் அகப்பட்டுக்கிடக்கின்றார்கள்.அவற்றிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளும் கடினங்களைக் கண்டு அஞ்சுகிறார்கள். எனவே அவர்கள் மற்றவர்களையும் அதே பாதாளக்குழிகளுக்குள் இழுத்துக்கொள்ள போராடுகின்றார்கள்.

இத்தகையவர்கள் சாலையில் மூவண்ண விளக்குகள் மூலம் சாலைவிதியை கடைபிடிப்பது என்பதுகூட தேவையில்லாதது என்று உறுதியாக நம்புகிறார்கள்.ஆனால் இந்த சாலை விதிகளால் ஒவ்வொரு நாளும் பல்வேறு உயிர்கள் காக்கப்படுகின்றது என்ற பேருண்மையை சீர்தூக்கிப்பார்க்க மறுக்கின்றார்கள்.ஒன் வேயில் (One Way) எதிர்புறமாக சென்றால் மிகப்பெரும் விபத்து ஏற்படும் என்று கூறும் சாலைவிதிகள் இந்த மனித சமூகத்தை காக்கவும் அதனை நாகரீகப்படுத்தவும் உதவுகின்றது என்பதை ஏற்கமறுக்கின்றார்கள்.உண்மையில் இத்தகையவர்கள் இன்றைய சமூகத்திற்கு மிகப்பெரும் சவால் என்பதை சுட்டிக்காட்டுவதோடு இத்தகையவர்கள் மனது வைத்தால் ஒழுங்குற முழுமைபெற்று இவர்களாலும் தங்கள் வாழ்வை வாழமுடியும் என்பது எனது நம்பிக்கையாகும்.

இவற்றைவிடுத்து மனிதர்களுக்கு ஏன் சட்டங்கள்,விதிகள்,ஒழுங்குமுறைகள்?மனிதர்களுக்கு இவை முற்றிலும் அவசியமற்றது என்று கூறிக்கொண்டு மனித வாழ்வின் பல்வேறு புனிதங்களை குழிதோண்டி புதைத்து இந்த மனித சமூகத்தை ஒழுங்கின்மை என்னும் மிகப்பெரும் சாபக்குழியில் தள்ளிவிட நினைப்பவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் நல்வழி காட்டட்டும் என்ற பிரார்த்தனையை மட்டும் இங்கு பரிசளிக்க விரும்புகின்றேன்.அடுத்த கட்டுரையில் இந்த மனிதன் தன்னை எவற்றிலெல்லாம் முழுமைபடுத்திக்கொண்டு மனநிறைவோடு வாழமுடியும் என்பதை விவரிக்கின்றேன்.

முடிவுரை:

இந்த கட்டுரையின் இறுதியாக ஒன்றே ஒன்றை மட்டும் நீங்கள் கவனிக்க வேண்டும் என்பதை எனது தாழ்வான கோரிக்கையாக வேண்டிக்கொள்ள ஆசிக்கின்றேன்.அதாவது மனிதனின் முழுமை என்பது சாத்தியமற்றது என்று கூறி தறிகெட்டு வாழச்சொல்வதில் மோசமான உள்நோக்கங்கள் இருக்கின்றதா? அல்லது மனிதன் தனக்காக திருப்திகரமிக்க ஒரு வாழ்வை தேர்ந்தெடுத்து தன்னை செழுமைபடுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறுவதில் மோசமான உள்நோக்கங்கள் இருக்கின்றதா என்பதை ஒரு கணம் சீர்தூக்கிப்பாருங்கள்.உங்கள் உண்மையான உணர்வுகள் உங்களுக்கு நல்வழி காட்டலாம்.


நன்றி : Author.A.Sadam husain hasani

புதன், 22 ஜனவரி, 2025

பங்குச்சந்தையே சூதாட்டம்தானா? Indian Share Market

முன்னுரை:

இந்த உலகில் கொட்டிகிடக்கும் அருட்செல்வங்கள் அனைத்தையும் குறைவின்றி அள்ளிக்கொடுத்துக்கொண்டிருப்பது இந்த இயற்கைத்தாயோ அல்லது இறைத்தாயோ என்பதில் நமக்கு எவ்வித மாற்றுக்கருத்துமிருக்காது என்றே நான் கருதுகின்றேன்.அத்தகைய இறை அருட்செல்வங்களை அடைந்து கொள்வதற்காக மனிதன் பல்வேறுமுறைகளில் பாடுபட்டுவருகின்றான் என்றாலும் ஒருவர் மற்றொருவருக்கு எவ்விதத்திலும் அநீதிஇழைத்துவிடாமலும் தீங்கிழைத்துவிடாமலும் அவற்றை அடைந்துகொள்வதற்கே வியாபாரம் என்ற ஒரு சிறந்த வழியை இந்த மனிதசமூகம் தேர்ந்தெடுத்துக்கொண்டது அதற்கு கிடைத்த பெரும்பேறு என்பதாகவே குறிப்பிடலாம்.

இத்தகையநிலையில் 2024 யின் ஆய்வறிக்கைப்படி இந்த உலகில் கிட்டத்தட்ட 359 மில்லியன் வியாபாரங்களும் அதற்காக கிட்டத்தட்ட 328 மில்லியன் கம்பெணிகளும் செயல்படுத்தப்பட்டுவருவதாக நம்மால் காணமுடிகின்றது. இந்த வியாபாரங்களில் பெரும்பான்மையானவை மனிதர்களின் தேவைகளை பூர்த்திசெய்யக்கூடிய பொருட்களை தயாரிப்பதற்கும் அதனை சந்தைப்படுத்துவதற்குமானதாகவே இருக்கின்றது என்றாலும் அவற்றில் சில இந்த மனிதசமூகத்தை சீரழிப்பதற்கு காரணியாக அமையக்கூடியவைகளும் இருக்கின்றது.உதாரணமாக மது,புகையிலை போன்ற போதைப்பொருள் வியாபாரங்கள் அல்லது சூது,நிச்சயமற்ற பந்தையம் போன்ற அறமற்ற விளையாட்டு வியாபாரங்கள் அல்லது அநியாய வட்டிவசூல் வியாபாரங்கள் இவையனைத்தும் அவற்றில் அடங்கும்.

அந்தவகையில் பங்குச்சந்தை என்பது எத்தகைய வியாபாரமுறை என்பது குறித்தும் உண்மையில் அது சூதாட்டத்திற்கு இணையானதா?என்பது குறித்தும் இந்த கட்டுரையில் விரிவாக விளக்கியிருக்கின்றேன்.பங்குச்சந்தை குறித்த பல்வேறு தவறான கண்ணோட்டமுடையவர்களுக்கு நிச்சயம் இந்த கட்டுரை சிறந்த தெளிவைத்தரும் என்றே நம்புகின்றேன்.முதலாவதாக பங்குச்சந்தை என்பதே சூதாட்டம்தானா என்பதை நாம் புரிந்துகொள்ள இரண்டு அடிப்படைகளை புரிந்துகொள்ளவேண்டும்.முதலாவது சூதாட்டமென்றால் என்ன என்பது குறித்தும் இரண்டாவது பங்குச்சந்தை என்றால் என்ன என்பது குறித்தும் கட்டாயம் அறிந்துகொள்ளவேண்டும்.எனவே வாருங்கள் முதலில் சூதாட்டமென்றால் என்ன எனபது குறித்து பார்த்துவிடுவோம்.

What is Gambling?

சூதாட்டமென்றால் என்ன?

"பணத்தையோ அல்லது மதிப்புமிகு ஏதேனும் ஒருபொருளையோ பகராமக வைத்து குறிப்பிட்ட சில விளையாட்டுகளை விளையாடுவதாகும்."உதாரணமாக தற்போதையநிலையில் கேசினோ என்னும் ரம்மி சீட்டுக்கட்டுக்களை அடிப்படையாகக்கொண்ட விளையாட்டுகள் அல்லது கிரிகேட் போன்ற விளையாட்டுப்போட்டிகளின் முடிவுகளை அடிப்படையாக வைத்து பந்தையம் கட்டுவது அல்லது அதிக தொகையை வெல்லும் நம்பிக்கையில் லாட்டரி சீட்டுக்களை விலைக்கு வாங்கிவைத்துக்கொள்வது போன்ற அனைத்து முறைகளும் சூதாட்டமாகவே கருதப்படுகின்றது.இத்தகைய விளையாட்டுக்கள் பொழுதுபோக்கிறகாக விளையாடப்பட்டாலும் தற்போதையநிலையில் இவை மிகப்பெரும் பொருளாதார சீர்கேட்டை கட்டமைப்பதற்கு மிகமுக்கிய காரணியாக மாறிவிட்டது.

அதாவது தற்போதைய நிலையில் மேற்கூறப்பட்ட விளையாட்டுக்களில் பந்தையம்கட்டி தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்த மொத்த பொருளாதாரத்தையும் ஒருசில நொடிகளில் இழந்துவிடுவதால் ஒவ்வொருநாளும் பல்வேறு நபர்கள் தற்கொலை செய்துகொள்வதை கண்கூடாக நம்மால் காணமுடிகின்றது.மேலும் சிலருக்கு இதுவே பழக்கமாகமாறி இத்தகைய சூதாட்டத்திலேயே தங்களுடைய பொன்னான நேரத்தையும் பொருளாதாரத்தையும் முற்றிலுமாக வீணடித்துவிடுகின்றனர்.இப்படிப்பட்ட விளையாட்டுக்களில் கட்டப்படும் பந்தையங்கள் கடுமையான சட்டங்களாலும்,தண்டனைகளாலும் தடைசெய்யப்படவேண்டியதுதானேயன்றி அவைகளும் ஒரு வியாபார முறையாகவோ அல்லது லாபமீட்டுவதற்கான வழியாகவோ பார்க்கப்படவேண்டுமென்று எந்த ஒரு நல்ல மனிதனும் வாதிடமாட்டான் என்றே நம்புகின்றேன்.

அதனடிப்படையில் அடுத்தபடியாக பங்குச்சந்தை என்பது மேற்கூறப்பட்டது போன்ற சூதாட்டம்தானா?என்பதை விவரிக்க பங்குச்சந்தை என்றால் என்ன என்பது குறித்து பார்த்துவிடுவோம் வாருங்கள்..!


பங்குச்சந்தை என்றால் என்ன?

(Stock Market) -பங்குச்சந்தை என்பது முதலீட்டாளர்கள் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கும்,விற்பதற்கும் வழிவகுக்கக்கூடிய ஒரு சந்தையாகும்.இதன்மூலம் நிறுவனங்கள் தங்களது பங்குகளை முதலீட்டாளர்களிடம் வெளியிட்டு அவற்றைவிற்று அதன்மூலம் தங்களது நிறுவனத்திற்கான நிதியை திரட்டிக்கொள்கின்றன.இதனைப்போன்றே முதலீட்டாளர்கள் தாங்கள் வாங்கிய பங்குகளின் மதிப்பு அதிகமாகும்பொழுது அதிலிருந்து குறிப்பிட்ட லாபங்களையும் பெறுகின்றனர்.அவைமட்டுமின்றி அந்த நிறுவனத்தின் சிறு உரிமையாளராகவும் மாறுகின்றனர்.மேலும் இத்தகைய பங்குச்சந்தைக்கு இந்தியாவில் பல்வேறு கட்டுப்பாடுகளும் இருக்கின்றது.அதாவது இவற்றிற்கென்றே விதிகளை அமைக்கும் அரசு பொதுஅமைப்புகள் இங்கு பலமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக இந்திய பங்குச்சந்தையை நிர்வகிக்கும் அரசு அமைப்பிற்கு (SEBI) செபி என்று சொல்லப்படுகின்றது.இவை இந்தியாவின் அதிகபட்ச அதிகார வரம்பைக்கொண்ட (RBI)-ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா-வின் நேரடிப்பார்வையில் இயங்கக்கூடிய ஒரு அரசு அதிகாரமிக்க அமைப்பாகும்.இவற்றிற்குக்கீழ் (NATIONAL STOCK EXCHANGE)-தேசிய பங்கு வர்த்தகம் மற்றும் BOMBAY STOCK EXCHANGE-பாம்பே பங்கு வர்த்தகம் என்று சொல்லப்படக்கூடிய இரண்டு சந்தை தளங்களை அடிப்படையாகக் கொண்டே இவை செயல்படுத்தப்படுகின்றன.இத்தகைய ஒரு முதலீட்டு அமைப்பிற்கே பங்கு வர்த்தகம் அல்லது பங்குச்சந்தை என்று சொல்லப்படுகின்றது. தற்பொழுது பங்குச்சந்தை என்றால் என்ன என்பது குறித்தும் அது எப்படி இயங்குகின்றது என்பது குறித்தும் ஓரளவு புரிந்திருப்பீர்கள் என்றே நம்புகின்றேன்.எனவே வாருங்கள் அடுத்தபடியாக மேற்கூறப்பட்ட பங்குவர்த்தகம் சூதாட்டம்தானா என்பது குறித்த விவரங்களை பார்த்துவிடுவோம்.


பங்குச்சந்தையே சூதாட்டம்தானா?

இதற்கு ஒற்றை வரியில் பதிலளிக்கவேண்டுமானால் மேலே நான் குறிப்பிட்ட வரைமுறைகளில் செயல்படும் முதலீட்டுத்தளமான பங்குச்சந்தையை சூதாட்டத்துடன் ஒப்பிடுவது அறியாமையின் உச்சம் என்பதாகவே நான் கருதுகின்றேன்.ஏனெனில் ஒரு நபர் ஒரு நிறுவனத்தில் தன்னுடைய பணத்தை அரசின் மூலமாக முதலீடு செய்து அதன்மூலம் நிறுவனத்திற்கும் அரசிற்கும் தனக்கும் லாபத்தை ஈட்டிக்கொள்வது எந்த வகையில் சூதாட்டமாகும்? உண்மையில் ஒரு சிறந்த முதலீட்டாளர் தன்னுடைய பணத்தை தான் விரும்பிய அல்லது வளர்ந்துவரும் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்து லாபமடைந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பது எவ்விதத்திலும் சூதாட்டமாகாது.மேலும் பங்குச்சந்தையை ஒரு சிறந்த முதலீட்டுக்களமாக பயன்படுத்துவதே ஒரு சிறந்த பொருளாதார நிபுனரின் மிகச்சிறந்த சேமிப்பாகவும் முதலீடாகவும் இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

ஏனெனில் இப்பங்குச்சந்தையே நாட்டின் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிக்கும் நிறுவனத்திற்கும் நாட்டின் குடிமக்களான முதலீட்டாளர்களுக்கும் மத்தியில் பெரும்பாலமாக இருக்கின்றது. உண்மையில் இப்பங்குச்சந்தையின் மூலம் நாட்டின் கடைகோடியில் உள்ள ஒருவரும் தன் முதலீட்டின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்காக பங்களிக்கும் வாய்ப்பை பெறுவதோடு அவற்றின் மூலம் தானும் லாபமடைந்து கொள்கின்றார் என்பதே நிதர்சனமாகும்.எனவே இத்தகைய ஒரு சிறந்த முதலீட்டுத்தளத்தை சூதாட்டம் என்று சொல்வது மடமையையன்றி வேறுஎன்னவாக இருக்கமுடியும்?

இறுதியாக ஒருசிலர் இப்படி கேட்பதையும் என்னால் காணமுடிகின்றது. அதாவது பங்குச்சந்தை என்பது சிறந்த முதலீட்டுத்தளம்தான் என்றால் அதில் ஏன் 95% சதவிகிதம் நபர்கள் பணத்தை இழக்கின்றார்கள் என்பதாக பங்குச்சந்தையை நிர்வகிக்கும் செபி அமைப்பே கூருகின்றதே என்பதாக கேள்வியெழுப்புகின்றனர்.எனவே அதுகுறித்த விவரங்களையும் இங்கு பதிவு செய்துவிடுகின்றேன்.



பங்குச்சந்தையில் அதிகமானோர் ஏன் பணத்தை இழக்கின்றனர்?

இவற்றிற்கு சுறுக்கமாக பதில்கூறவேண்டுமானால் கீழ்வருமாறே என்னுடைய பதிலை பதிவுசெய்துகொள்ள நான் விரும்புகின்றேன். "குறுகிய காலத்தில் அதிக லாபமீட்டுவதற்கு நினைப்பதே அதற்கான அடிப்படை காரணியாகும்."அதாவது பங்குச்சந்தையில் Option -ஆப்சன் முதலீடு அல்லது Future - குறிப்பிட்ட காலவரையரை முதலீடு என்று சொல்லப்படக்கூடிய முதலீட்டுமுறைகள் உள்ளன.அவைகள் சிலசமயங்களில் குறுகிய காலத்தில் பெரிய லாபத்தை தந்துவிடும் என்பது நிதர்சனமானாலும் அதைக்காட்டிலும் பெரிய நஷ்டத்தில் தள்ளிவிடும் என்பதும் மகத்தான உண்மையாகும்.இத்தகைய முதலீட்டுமுறைகள் பெரும்பாலும் நஷ்டத்தையே கொடுக்கும் என்பதில் நல்ல முதலீட்டாளர்களிடத்தில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை என்பதை இங்கு நான் வெளிப்படையாகவே பதிவுசெய்துகொள்கின்றேன்.

மேற்கூறியவாரான முதலீட்டுமுறைகளை பெரும்பாலும் சிறந்த முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுப்பதே கிடையாது என்பதே நிதர்சனமாகும்.ஆனால் பங்குச்சந்தைக்கு புதிதாக வருபவர்கள் அல்லது மேற்கூறிய முறையை மட்டுமே பங்குச்சந்தை என்பதாக எண்ணிக்கொள்பவர்கள் மட்டுமே பங்குச்சந்தையில் தன்மொத்த முதலீட்டையும் கொட்டி புல்லுக்கிறைத்த நீராய் தங்களின் பணத்தை இழந்துவிட்டு காணாமல்போய்விடுகின்றார்கள்.அல்லது தங்களின் முதலீட்டில் பெரும்பகுதியை இழந்து பங்குச்சந்தையையே வெறுத்து வெளியேறிவிடுகின்றார்கள்.உணமையில் இத்தகைய நபர்களைத்தான் சூதாடும் மனோபாவம் கொண்டவர்கள் என்பதாகவும் இங்கு சுட்டிக்காட்ட நான் விரும்புகின்றேன்.

ஆனால் இவற்றிற்கு மாறாக நீண்டகால அடிப்படையில் ஒரு சிறந்த நிறுவனத்தில் செய்யப்படும் முதலீடுகள் பெரும்பாலும் லாபத்தை மட்டுமே தருகின்றது என்பதே எனது அனுபவத்தின் முடிவாகும்.அதனடிப்படையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது மட்டுமலாமல் ஒரு நல்ல முதலீட்டாளர் தான் முதலீடு செய்யும் நிறுவனம் எத்தகையது என்பது சார்ந்தும் அதன் கடன் சார்ந்த விவரங்கள் என்ன என்பது சார்ந்தும் மேலும் அதனுடைய காலாண்டு மற்றும் அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விற்பனையையும் லாப நஷ்டங்களையும் கட்டாயம் கவனிக்கவேண்டும் என்பதையும் இங்கு தாழ்வண்போடு சுட்டிக்காண்பித்துக்கொண்டு, இந்த கட்டுரை நிச்சயம் உங்களுக்கு மிக பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்ற ஆதரவோடு முடித்துக்கொள்கின்றேன்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்து உங்கள் முதலீட்டின் மூலம் லாபமடைய நீங்களும் விரும்பினால் நான் நம்பகமான இரண்டு பங்கு விற்பனை தரகர் செயலிகளை பயன்படுத்துகின்றேன்.
  1. ZERODHA - சிரோதா -LINK



  1. ANGEL ONE- ஏஞ்சல் ஒன்- LINK
இவற்றில் ஏதேனும் ஒரு செயலியை தேர்ந்தெடுத்து இவற்றின் மூலம் நீங்கள் முதலீடு செய்ய ஆரம்பம் செய்யலாம்.மேலும் இவற்றில் Zerodha -வில் உங்கள் முதலீட்டுக்கணக்கை ஆரம்பம் செய்யும் பொழுதே வருடாந்திர கட்டணமாக 400/- ரூபாய் வசூலிக்கின்றனர்.ஆனால் Angel One -யில் இலவசமாகவே Demate Account -பெறுவதற்கு உதவுகின்றனர்.ஆனால் மாதம் ஒருமுறை 20 ரூபாய் பராமரிப்புக் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.மேலும் அடுத்த கட்டுரையில் பங்குச்சந்தையில் எப்படி ஒரு கம்பெணியை தேர்ந்தெடுப்பது என்பது சம்மந்தமாகவும் அதனை எப்படி வாங்குவது மற்றும் விற்பது என்பது சம்மந்தமாக விரிவாக பார்ப்போம்.

Online Stock Market Course In Tamil


Online Stock Market Course In Tamil

தமிழில் பங்குச்சந்தை சார்ந்த அனைத்து தகவல்களையும் பாடமாக படிப்பதற்கு இணையத்தின் வழியாகவே பங்குச்சந்தை வகுப்பை நான் நடத்தி வருகின்றேன்.பங்குச்சந்தையை ஒரு சிறந்த முதலீட்டுக்களமாக பயன்படுத்திக்கொள்ள விரும்பும் நண்பர்கள் மட்டும் அப்பயிற்சி வகுப்பில் கலந்து பயன்பெறும்படி அன்போடு வேண்டிக்கொள்கின்றேன்.
 

நன்றி:
Author:A.Sadam husain hasani

திங்கள், 13 ஜனவரி, 2025

இந்திய இஸ்லாமியர்களின் கல்விநிலையும் அதற்கான தீர்வும்-Indian Muslims and their Education


முன்னுரை:

                            இந்த மனித சமூகத்தை இன்றுவரை மனிதமாண்புடன் நிலை நிறுத்திக்கொண்டிருப்பதே கல்விதான் என்றால் நிச்சயம் அது மிகையாகாது. கல்வியற்ற மனிதர்கள் கட்டற்ற காட்டுமிராண்டிகளாகவும்  அறமற்ற அரக்கர்களாகவுமே இப்பூமியில் வளம்வருவார்கள் என்பதற்கு வரலாறு நெடுகிழும் சான்றுகள் கொட்டிக்கிடக்கின்றன.அதனடிப்படையில்தான் "ஒரு பள்ளிக்கூடம் ஆயிரம் சிறைச்சாலைகளை மூடுகின்றது" என்று நெல்சன் மண்டேலா குறிப்பிட்டுக்காட்டுகின்றார்.அவ்வளவேன் "கல்வியின் வாடையையே கண்ணில் காட்டாத காலத்திலேயே "கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைபுகினும் கற்கை நன்றே" என்று பாடிவிட்டு சென்றால் நம் பாட்டி அவ்வையார்.இப்படி இந்த மனித சமூகத்தின் முதுகெழும்பான கல்வியின் மாண்பை இங்கு எடுத்துறைக்க பேனாக்களும் போதாது, காகிதங்களும் போதாது.

ஆக ஒருமனிதன் தான் பிறந்ததிலிருந்து இந்த உலகில் கற்கவேண்டிய பாடங்களும் அனுபவங்களும் எண்ணிள் அடக்கமுடியாதளவிற்கு கொட்டிக்கிடக்கின்றன.அவை அனைத்தையும் இப்பூவுலகிற்கு வரும் ஒவ்வொரு மனிதனும் கற்றுவிடமுடியாதென்றாலும் அவனுக்கென்ற அடிப்படை அறிவையும் வாழ்வியல் நெறியையும் பொருளாதார மற்றும் சமூக புரிதலையும் பெறவேண்டியது அல்லது கொடுக்கவேண்டியது இந்த மனித சமூகத்தை மனிதமாண்போடு காக்கப்போராடும் ஒவ்வொருவரின்மீதும் கடமையாகும்.அவ்வாறு காக்கத்தவறினால் படித்த அல்லது மனித மாண்போடு வாழநினைக்கும் ஏனையோறும் சேர்ந்து அழிந்துபோகவேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்படுவார்கள்.இதன்காரணமாகவே இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை கட்டாயம் வழங்கவேண்டும் என்ற சட்டம் (ஒரு சில ஆண்டிற்கு முன்பு)இயற்றப்பட்டிருபதை நம்மால் காணமுடிகிறது.

(இந்திய அரசியலமைப்பு சட்டம் 2002இல் (86-வது திருத்தம்), ஆறு முதல் பதினான்கு வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வியை அடிப்படை உரிமையாக வழங்குவதற்காக, இந்திய அரசியலமைப்பில் 'பிரிவு 21A' சேர்க்கப்பட்டது. இது கல்வி உரிமைச் சட்டம் (RTE), 2009 என்று அழைக்கப்படுகிறது.)

மேற்கூறப்பட்டவாறு சட்டம் இயற்றப்பட்டும் இன்றைக்கு இந்தியாவில் ஆரம்ப கல்வியென்பது எல்லா தரப்பிலும் ஓரளவு பரவாயில்லை என்பதாகவே அறிக்கைகள் கூறினாலும் அவை இஸ்லாமிய சமூக மக்களின் கல்விசார்ந்து மிகப்பெரும் வருத்தத்தை பகிர்ந்திருக்கின்றது.மேலும் உயர் நிலை கல்வியிலோ அல்லது மேல்நிலைக் கல்வியிலோ பார்க்கும்பொழுது பிற்படுத்தப்பட்ட மேலும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களின் சதவிகிதத்தைக் காட்டிலும் மிகமோசமாக உள்ளதாக சிறுபான்மை கல்வி தரவை நாடாலுமன்றத்தில் சமர்பித்த சர்ச்சார் கமிட்டி கூறுவது உண்மையில் என் இதயத்தை சுக்குநூறாக்குகின்றது.

சர்ச்சார் கமிட்டி நாடாளுமன்றத்தில் வழங்கிய தரவு:Download

தற்போதைய தரவு 👇

இஸ்லாமியர்களின் பள்ளி கல்வி நிலை சதவிகிதம்

மேற்கண்ட தரவுகளின் அடிப்படையில்தான் இன்றைய இஸ்லாமிய சமூகம் இருக்கின்றதா என்றால் அவற்றில் கணக்கிடப்படாத ஏராளமான அவளநிலைகளும் இங்கு அரங்கேறிக்கொண்டேதானிருக்கின்றது.அந்த அவளங்களுக்கெல்லாம் அடிப்படை காரணமென்ன என்பதை அலசி ஆராய்ந்துபார்த்தால் இந்த சமூகம் வாழ்வாதாரப் பற்றாக்குறையோடு ஒவ்வொரு நாளும் போராடி போர்புரிந்துகொண்டிருப்பதை காணமுடிகின்றது. ஆம்.!நம்நாட்டில் உள்ள 85% சதவிகித வறுமைகோட்டிற்கு கீழுள்ள மக்களில் 30% மக்கள் இஸ்லாமியர்கள் என்பதாக அரசு தரவுகள் சான்றுபகர்கின்றன.

மேலே நான் சுட்டிக்காட்டியிருக்கும் சர்ச்சார் கமிட்டியின் அறிக்கையை நன்றாக வாசித்துப்பாருங்கள்.முஸ்லிம்கள் கல்வித்தரம் மலைவால் மக்களைக்காட்டிலும் மிகமோசமாக இருப்பதாக சுட்டிக்காண்பித்திருக் கின்றார்கள்.அவைமட்டுமின்றி வேலைவாய்ப்பு,அடிப்படை வசதிகள் போன்ற அனைத்திலும் இந்த இஸ்லாமிய சமூகம் மிகவும் பின்தங்கியிருப்பதாக அவ்வறிக்கை நமக்கு தெளிவுபடுத்துகின்றது.இப்படி அன்றாடம் தானும் தன்குடும்பமும் ஒருவேலை சாப்பாட்டிற்கே போராடவேண்டிய சூழல் இருக்கும்பொழுது ஒரு இஸ்லாமிய குழந்தை நிறுவனமையமாவதையும்,(மருத்துவராவதையும்,கணிணி பொறியாளர் ஆவதையும்) தொழில் நுட்பவாதியாவதையும் எப்படி கனவு காணும்?என்று நினைக்கும்பொழுது உண்மையில் கண்களில் இரத்தமே வருகின்றது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க தன்சொந்த நாட்டு மக்களை கல்வியாலும் வேலைவாய்ப்புகளினாலும் மேம்படுத்தவேண்டிய தற்போதைய அரசு மதஅடிப்படைவாதத்தை கையிலெடுத்துக்கொண்டு குறிப்பிட்ட சமூகங்களை வஞ்சிக்கும் நோக்கோடு செயல்பட்டுவருவது அதனினும் கொடுமை. இத்தகைய இக்கட்டான இச்சமயத்தில் இந்திய இஸ்லாமிய சமூகம் இதற்காக என்னதான் செய்யவேண்டும்?என்பதை விரிவாக விவரிப்பதே என்னுடைய இந்த கட்டுரையின் நோக்கமாகும்.நிச்சயம் இக்கட்டுரை இஸ்லாமிய சமூகத்தை உயர்த்தி நிறுத்த போராடிக்கொண்டிருக்கும் நல்லுல்லங்களுக்கு ஒரு பரந்த புரிந்துணர்வை ஏற்படுத்தும் என்றே ஆதரவுவைக்கின்றேன்.

தற்போதைய நிலையில் இஸ்லாமிய சமூகம் என்ன செய்யவேண்டும்?

தீர்வு-1.தரவுகளை சேகரிக்கவேண்டும்.

முதலாவதாக இந்தியாவில் வசிக்கும் அனைத்து இஸ்லாமியர்களும் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்புகளும் ஜமாஅத்துகளும் தங்களின் பகுதிகளில் உள்ள இஸ்லாமிய குடும்பங்களின் எண்ணிக்கையையும்,அவர்களில் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்விவரை யாரெல்லாம் கற்றிருக்கின்றார்கள் என்பதையும்,அவர்களில் யாரெல்லாம் அரசு வேலை வாய்ப்புகளை பெற்றிருக்கின்றார்கள் என்பதையும் மேலும் தாங்கள் படித்த படிப்பிற்கான பணியில் யாரெல்லாம் இருக்கின்றார்கள் என்பதையும் தரவுகளாக்க வேண்டும். உண்மையில் இஸ்லாமிய சமூகம்பற்றிய இந்த தகவலே இன்றைய அரசிடம் இல்லை என்பது கேட்பாரற்ற சமூகமாக இஸ்லாமிய சமூகம் விடப்பட்டிருக்கின்றது என்பதை வெளிப்படையாகவே காட்டுகின்றது.

எனவே இன்றைய இஸ்லாமிய இயக்கங்களும் ஜமாஅத்தலைவர்களும் தங்களுக்கு மத்தியில் உள்ள குடும்ப பிரச்சனைகளையும் பதவிப் பிரச்சனைகளையும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களையும் ஓரமாக வைத்துவிட்டு இறைவனுக்காகவும் இந்த கேட்பாரற்ற சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும் சேவைசெய்யும்விதத்தில் தங்கள் பகுதியில் உள்ள இஸ்லாமிய குடும்பங்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலைக்குறித்த தரவுகளை சேமிப்பது காலத்தின் கட்டாயம் என்பதை உணர வேண்டும். மேலும் அத்தரவுகளை சேமித்து ஏதோ நம் பகுதியில் உள்ள மக்களின் தகவல்களை தெரிந்துகொண்டோம் என்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் அடுத்தகட்ட நடவடிக்கையை நோக்கி அடுத்த கணமே நகரவேண்டும்.அது என்ன அடுத்தகட்ட நடவடிக்கை என்று நீங்கள் யோசித்தால் வாருங்கள் அவை என்னவென்று பார்த்துவிடுவோம்.


தீர்வு-2.இஸ்லாமிய சமூக அமைப்புடன்கூடிய தரமான கல்விக்கூடங்களை ஒவ்வொரு பகுதியிலும் உறுதி செய்யவேண்டும்.

இன்றைக்கு மதச்சார்பற்ற அரசியல் செய்வதாககூறும் மாநிலங்களிலுள்ள பள்ளிகள்கூட நமதுநாட்டில் இஸ்லாமிய குழந்தைகளின் மத அடையாளங்ளையும் அவர்களின் மதம் சார்ந்த உணர்வையும்  அழிப்பதற்கும் அதன்மீது வன்மத்தை கக்குவதற்குமே முயற்சிப்பதை காணமுடிகின்றது. பெரும்பாலும் அரசு பள்ளிகளில் படிக்கும் இஸ்லாமிய குழந்தைகள் ஆசிரியர்களாலும் சகமாணவர்களாலும் மதத்தால் குறிவைக்கப்பட்டு மனோஉலைச்சலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.அதனால் நன்கு படிக்கும் குழந்தைளும்கூட கல்வியை துண்டித்து தவறான பாதையில் செல்லும்நிலை அதிகரித்துவருகின்றது.இதனைத்தான் அந்த கயவர்களும் விரும்புகின்றனர்.

உண்மையில் மனசாட்சியோடு சிந்தித்துப்பாருங்கள்!இன்றைக்கு நம் பெண் குழந்தைகள் தங்களின் கண்ணியத்திற்காக அணியும் ஹிஜாப் என்னும் துப்பட்டா அல்லது மேற்துண்டுகளை எத்தனையோ கல்விக்கூடங்கள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தடைசெய்துவிட்டது.அவை ஒருபுறமிருக்க தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள்கூட இந்த துண்டுகளையெல்லாம் இன்னும் ஏன் கழட்டிவீசாமல் தலைகளில் சுமந்துகொண்டு திரிகின்றீர்கள் என்பதாக ஏதோ அவர்களே பலநூறு கிலோ சுமையை தங்களின் தலைகளில் சுமப்பதைப்போன்று நம் சமூக சகோதரிகளிடம் ஒரு குற்றஉணர்ச்சியை தூண்டிக்கொண்டிருக் கின்றார்கள்.இவற்றிற்கு பலியாகும் அப்பாவி குழந்தைகளும் இன்று பெருகிவருகின்றனர்.

எனவே இவற்றையெல்லாம் துடைத்தெரிய இஸ்லாமிய சமூகம் தங்களுக்கான தலைசிறந்த கல்விக்கூடங்களை தங்களின் பகுதியில் நிறுவுவதற்கு உறுதி செய்யவேண்டும்.மேலும் அவற்றில் உலகத்தரம் வாய்ந்த கல்வி,விளையாட்டு மற்றும் செயல்திறன் பயிற்சிகளை வழங்கவேண்டும்.பல்வேறு மொழிகளை பயிற்றுவிக்கவேண்டும்.குறிப்பாக ஏழைமாணவர்களுக்கு அந்த ஊரில் உள்ள செல்வபெருந்தகைகள் அல்லது ஜமாஅத்தார்கள் பொறுப்பேற்று உயர்கல்வி கொடுப்பதோடு சிறந்த பணிகளை அவர்கள் அடைவதற்கான எல்லா வழிவகைகளையும் செய்துகொடுக்க வேண்டும்.மேலும் அவர்களை சமூக அக்கரைகொண்ட சிறந்த சமூகஅமைப்பாளர்களாகவும் சமூகத்திற்காக அற்பணிக்கவேண்டும்.

இவ்வாறு செய்யும்பொழுது இஸ்லாமிய சமூகத்தில் சிறந்த கல்வியாளர்களை இஸ்லாமிய விழுமியத்தோடு நம்மால் வார்த்தெடுக்கமுடியும்.மேலும் அதனால் தன்னிறைவோடு வாழக்கூடிய ஒரு சிறந்த கூட்டமைப்பையும் நம்மால் கட்டிக்காக்கவும் முடியும்.மேலும் கல்விக்காக சேவைசெய்யக்கூடிய ஒரு சிறந்த சமூகமாகவும் நம்மை கட்டமைத்துக்கொள்ளவும் முடியும். அவைமட்டுமின்றி நம்முடைய குழந்தைகளுக்கெதிரான வன்மங்களையும் வஞ்சங்களையும் எதிர்கொண்டு அடக்கவும் முடியும்.எனவே தற்போதைய ஆரம்ப நிலையிலேயே இதில் நாம் கவனம்செலுத்தவேண்டும். இல்லையெனில்  நிச்சயம் நம் சமூகம் மிகப்பெரும் அதலபாதாளத்தில் தள்ளிவிடப்படும் என்பதை சமூகஅக்கரை கொண்ட ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள கடமைபட்டிருக்கின்றோம் என்பதை பணிவண்போடு சுட்டிக்காண்பித்துக்கொள்கின்றேன்.

முடிவுரை:

இன்றைய இஸ்லாமிய சமூகம் எல்லாதுறைகளிலும் மிகப்பெரும் அளவில் வஞ்சிக்கப்பட்டுவருகின்றது என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை.ஏனெனில் கண்முன்னே ஒரு குறிப்பிட சமூகத்திற்கெதிரான பல்வேறு அநீதிகளும் அக்கிரமங்களும் இங்கு அரங்கேறிக்கொண்டேதான் இருக்கின்றது.இவற்றையெல்லாம் அறத்தோடும் ஆழமான ஆற்றலோடும் எதிகொள்ளவேண்டிய கட்டாயத்தின் கீழ் இன்றைய இஸ்லாமிய சமூகம் பணிக்கப்பட்டிருக்கின்றது.மேலும் இவற்றை கலைவதற்கு நாம் கல்வி,பொருளாதாரம்,அதிகாரம் என்பதை நோக்கி அறத்தோடு நடைபோடவேண்டிய கட்டாயத்திலும் இருகின்றோம். அரசு,ஆட்சிஅதிகாரம் என்பதை நாம் என்றைக்குமே கேட்டுப்பெறுபவர்களல்ல என்றாலும் நம்முடைய அடிப்படை உரிமைகளை காப்பதும் நமது மதச்சுதந்திரத்தை உறுதிசெய்வதும் நம்மில் ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.

இவற்றில் குறிப்பாக நம்சமூக குழந்தைகளின் கல்வியின் விஷயத்தில் எவ்வித சமரசமுமின்றி எவ்வித பாகுபாடுமின்றி உலகத்தரம்வாய்ந்த கல்வியை அடையச்செய்வதற்கு நாம் ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும்.சிறந்த கல்வியாளர்கள் சமூகமாக நம்மை செதுக்கி எடுக்கவேண்டும்.ஏதோ பணம்படைத்தவர்கள் அல்லது அரசியல் அடிவருடிகளாக வளம்வருபவர்களின் பிள்ளைகள் மட்டுமே உயர் கல்விபடிக்கமுடியும் என்ற அல்லது உயர்பதவியில் இருக்கமுடியும் என்ற பீடைநிலையை விட்டொழித்துவிட்டு கீழே நான் குறிப்பிடும் சில அடிப்படைகளை ஒவ்வொரு நல்லுள்ளம்கொண்ட சமூக அக்கரையாளர்களும் கருத்தில் கொள்ளவேண்டுமென்று மிக பணிவண்போடுவேண்டிக்கொள்கின்றேன்.

ஒவ்வொரு பள்ளிவாயிலிலும் ஒரு (Smart Class) வகுப்பறை நிறுவப்பட வேண்டும்.

நம்மில் ஒவ்வொரு(மஹல்லா)பகுதியிலும் அல்லது ஒவ்வொரு ஜமாஅத்திலும் தற்பொழுது எப்படி குர்ஆன் வாசிப்புமுறை கற்பிக்கப்படுகின்றதோ அவ்வாறே அடிப்படை கல்விமுதல்(UPSE-GROUP-1-GROUP-2 & 4)எழுதுவதற்கான பயிற்சிவரை அளிக்கப்படவேண்டும்.அவை மட்டுமின்றி நமது சமூக குழந்தைகள் மருத்துவ கல்வியில் சிறந்துவிளங்க மருத்துவ நுழைவுத்தேர்விற்கான சிறந்த பயிற்சிகளையும் அங்கு கொடுக்கப் படவேண்டும்.அவ்வாறே சூழழுக்கு தகுந்தவாறு பல்வேறு மொழிகள் கற்பிக்கப்பட வேண்டும்.மேலும் பெண்பிள்ளைகளுக்கு (B.Ed)ஆசிரியை படிப்பதற்கான எல்லாவித ஏற்பாடுகளையும் செய்துகொடுக்க வேண்டும்.இவ்வாறெல்லாம் நாம் நம் சமூகத்திற்கான பயனுள்ள கல்வி ஏற்பாடுகளை செய்வதால் நிச்சயம் நாம் குறைந்தபட்சம் இரண்டு தலைமுறையினரை தன்னிறைவோடு வாழச்செய்துவிடலாம் என்பது எனது நம்பிக்கையாகும்.

(குறிப்பு)இங்கு பலரும் என்ன இவர் மார்க்க கல்வி கற்பிப்பதை சார்ந்து எதுவும் சொல்லவில்லை.அப்படியானால் அது தேவையே இல்லை என்று எண்ணுகிறாரா? என்று கேட்கலாம்.அன்பர்களே நிச்சயம் அவ்வாறல்ல.மாறாக அதுதான் நம் உயிர்நாடி.அவை நம்முடைய ஆளமானவேர் என்றால் மேலே குறிப்பிட்டவைகளெல்லாம் அதற்கான உரங்கள் என்பதாகவே நான் கருதுகின்றேன்.அந்த ஆழமான வேர்கள் இருப்பதால்தான் இந்த கட்டுரையை எழுதவேண்டிய கட்டாயமே எனக்கு ஏற்பட்டுள்ளது.எனவே மார்க்க கல்வியை ஒருகாலமும் பிரித்துப்பார்ப்பதற்கான நிலையை நான் ஒருபோதும் அடைந்ததில்லை,அடையப்போவதுமில்லை.அவை நம் கல்வியோடு ஒன்றோடொன்று பிணைந்துவிட்டது.அதனை பிரித்துப்பார்க்கும் எந்த நோக்கமும் என்னிடமில்லை என்பதை பணிவண்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நன்றி:
A.Sadam husain hasani