வெள்ளி, 3 செப்டம்பர், 2021

நிலைத்துநிற்பதே வெற்றியை தரும்

நிலைத்துநிற்பதே வெற்றியை தரும்
நிலைத்துநிற்பதே வெற்றியை தரும்

நிலைத்துநிற்பதே வெற்றியை தரும்

நீங்கள் அடையவிரும்பும் லட்சியத்தை எப்படி அடைவது என்று யோசித்துக்கொண்டே இருக்கின்றீர்களா?அல்லது ஒரே நாளில் ஏன் நம்மால் அதனை அடைய முடியவில்லை என்று சலித்துக்கொள்கின்றீர்களா..?உங்களுடைய லட்சியத்தை அடைவதற்கான இலகுவான ஒரு வழியை இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.முடிந்தாள் கடைபிடியுங்கள் நிச்சயமாக உங்கள் லட்சியத்தை அடைந்துவிடலாம்.

நீங்கள் அடைய விரும்பும் லட்சியத்தை நோக்கி நடந்து கொண்டே இருங்கள்.எவ்வளவு தூரம் நடந்தீர்கள் என்றோ அல்லது உங்கள் தூரத்தை அடைவதற்கு இன்னும் எவ்வளவு தூரம் இருக்கின்றது என்றோ யோசிக்கவே செய்யாதீர்கள்.உங்கள் கால்கள் வலிதரும் அளவிற்கு நடந்து கொண்டே இருங்கள்.பிறகு மறுநாளும் அதனைப்போன்றே செய்யுங்கள்.இப்படி உங்கள் லட்சியப்பாதையில் கொஞ்சமாகவோ அல்லது அதிகமாகவோ நடந்து கொண்டே இருங்கள்.எக்காரணத்திற்கும் நேற்றைய நிலையிலேயே இன்றைக்கும் அமர்ந்துவிடாதீர்கள்.இப்படி ஒவ்வொரு நாளும் செய்து வாருங்கள் உங்கள் லட்சியப்பயணம் எங்கு சென்று முடிய வேண்டுமோ அந்த இடத்தில் உங்களை அறியாமலேயே உங்களை அது கொண்டு சேர்த்துவிடும்.

இந்த வழிமுறையானது யார் தன் லட்சியப்பயணத்தை தொடங்கிய பின்பு அது எப்பொழுது முடியும் என்றோ அல்லது தனக்கு ஏன் இன்னும் அந்த லட்சியம் கிட்டவில்லை என்றோ தன்னைத்தானே சந்தேகிப்பார்களோ அவர்களுக்கு மிகச்சிறந்த வழிமுறையாகும்.இதை இங்கு ஏன் குறிப்பிட்டுக் காட்டுகின்றேன் என்றால் நம்மில் பலரும் ஒரு காரியத்தை மிக வீரியமாக ஆரம்பித்து விடுகின்றோம்.ஆனால் அதிலிருந்து உடனே பலன் கிடைக்கவில்லை என்பதால் ஒருசில தினங்களிலேயே அதனை அப்படியே விட்டொழித்து விடுகின்றோம்.அல்லது ஒரே சமயத்தில் அதனை முயற்சித்துவிட்டு பிறகு அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றோம்.

அதனை போக்குவதற்கு நான் மேலே குறிப்பிட்டுக்காட்டிய அந்த வழியே மிக உதவியாக இருக்கும்.ஏனென்றால் யார் ஒன்றை அடைய வேண்டுமென்று ஆரம்பம் செய்து அதில் நிலைத்திருக்கவும் செய்துவிடுகின்றாரோ அவர் என்றாவது ஒருநாள் அதனை அடைந்துவிடுவதே இயற்கையின் அமைப்பாக இருக்கின்றது.அதில் அவர் தன் பயணத்தை எவ்வளவு குறைவாக அமைத்திருந்தாலும் அதனை விடாமல் தொடர்ந்துகொண்டே இருந்ததின் விளைவாக  ஒருநாள் அதனை அவர் மிக இலகுவாக அடைந்துவிட அதுவே காரணமாக அமைந்துவிடுகின்றது.

எனவே நீங்களும் உங்கள் லட்சியத்தை இலகுவாக அடையவேண்டும் என்று விரும்பினால் அதனை உங்கள் வாழ்வில் அன்றாடம் நிலையாக செய்யும் காரியமாக மாற்றிக்கொள்ளுங்கள். அன்றாடம் செய்யும் அந்த காரியம் குறைவாக இருந்தாலும் சரியே.அதனை தொடர்ந்து செய்து வருவதில் நிலைத்திருங்கள்.நிச்சயம் ஒருநாள் அது பெரும் வெற்றியாக உங்களை வந்தடைய உங்களின் அந்த சிறிய நகர்வே காரணமாக அமைந்துவிடும்.

பெண் அடிமைத்தனமும் அதில் சமூகத்தின் பெரும் பங்கும்.

பெண் அடிமைத்தனமும் அதில் சமூகத்தின் பெரும் பங்கும்.
பெண் அடிமைத்தனமும் அதில் சமூகத்தின் பெரும் பங்கும்.

முன்னுரை:

உலக நாடுகளெல்லாம் விண்வெளி ஆராய்ச்சியில் விண்ணைத்தொட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தன் வாழ்க்கையை எல்லா காலமும் அடிமைத்தனத்திலும் அற்ப சேவகத்திலுமே கழிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்ட பெண் இனத்தைப்பற்றிப்பேச இங்கு யாரும் தயாராக இல்லை என்பதே இந்த சமூகத்திற்கு நேரிட்ட முதல் சாபமாக நான் காண்கின்றேன். மனித இனம் நாகரீகத்தின் உச்சியை தொட்டுவிட்டதாக கூறப்படும் இதே 20 ஆம் நூற்றாண்டிலும் பண்டைய காலத்தில் பெண் எவ்வாறெல்லாம் உடல் ரீதியிலும்,மனரீதியிலும்,பொருளாதார ரீதியிலும்,பொது வாழ்வியல் ரீதியிலும் இந்த சமூகத்தால் அடக்கி ஒடுக்கப்பட்டு அடிமையாக்கப்பட்டாலோ அதே நிலையில்தான் இன்றுவரை இருக்கின்றாள் என்பதாகவே நான் பார்க்கின்றேன்.

அவளை மீண்டும் மீட்டு எடுக்கவே முடியாதோ என்று நிலை குழைந்து நிற்கும் அளவிற்கு அவள் இந்த சமூகத்தால் அதலபாதாலத்தில் தள்ளப்பட்டிருப்பதை என்னால் முழுமையாக உணரமுடிகின்றது.இத்தகைய பெண் அடிமைத்தனம் சம்மந்தமாக"பெண் அடிமைத்தனமும் அதில் சமூகத்தின் பெரும் பங்கும்" என்ற எனது சிறிய புத்தகத்தில் மிக விரிவாக விவரித்திருக்கின்றேன். அவற்றின் ஒரு சிறிய பகுதியயை மட்டும் இந்த கட்டுரையில் பதிவுசெய்கின்றேன்.இந்த கட்டுரையில் பெண் எப்படியெல்லாம் இந்த சமூகத்தால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றாள் என்பதை என்னால் முடிந்தளவு சுறுக்கமாகவும் எளிமையாகவும் விளக்க முயன்றிருக்கின்றேன்.

இதனை படிக்கும் உங்களில் ஒவ்வொருவரும் இந்த சமூகத்தின் கட்டமைப்பை மாற்றியமைக்கும் வல்லமைபடைத்தவர்கள் என்ற நம்பிக்கையில் இக்கட்டுரையை உங்களுக்கு அற்பணம் செய்கின்றேன்.நீங்களும் ஒரு இனத்திற்கு எதுரான இந்த சமூகத்தின் மிகக்கொடிய அநீதியிலிருந்து தப்பித்துக்கொண்டு உங்களை சார்ந்தவர்களையும் காத்துக் கொள்ளுங்கள் என்று பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.

பெண் அடிமைத்தனம்:

1.வெளியில் செல்லும் பெண்கள் தவறானவர்கள் என்று சித்தரிப்பது.

வேலைக்காகவோ அல்லது தனது தேவைக்காகவோ அல்லது இந்த உலகை ரசிக்கவேண்டும் என்ற தனிப்பட்ட ஆசைக்காகவோ வெளியில் செல்லும் பெண்களின் நடத்தையை தவறாக சித்தரிக்கும் கண்ணோட்டம் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் இந்த சமூகத்தில் புரையோடிப்போய்தான்  கிடகின்றது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.என்னதான் பெண்கள் தைரியமாக வெளியில் வந்து வேலை செய்யத்துவங்கிவிட்டனர் என்று போலியாக சமூகத்திற்கு முன்பு மார்தட்டிக்கொண்டாலும் இந்த சமூகம் அவர்களை புறக்கணிப்பதையே வரவேற்கின்றது என்பதையே நிதர்சனமான உண்மையாக நான் காண்கின்றேன்.

உண்மையில் இன்றைக்கு வீட்டைவிட்டு வெளியேறிவிட்ட ஒரு பெண் எங்காவது யாராவது ஒருவரால் அவளுடைய நடத்தையாள் சந்தேகிக்கப்படுகின்றாள் என்பதை உங்களில் யாராவது மறுக்க முடியுமா?ஒருபோதும் முடியாது..!ஏனென்றால் ஒரு பெண் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டால் அவள் சந்தேகத்திற்குறியவள் என்று இந்த சமூகம் ஒரு அவளம்நிறைந்த பார்வையை கட்டமைத்து வைத்திருக்கின்றது.மேலும் வீட்டின் உள்ளே இருந்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பணிவிடை செய்வதுதான் ஒரு பெண்ணிற்கான சிறந்த இலக்கணம் என்பதாகவும் அது வெளிப்படையாகவே வலியுறுத்திக்கொண்டுமிருக்கின்றது.

அதற்கு தோதுவாக முந்தைய வழிகாட்டிகளான மூதாதையர்களும் வீட்டிற்கு சேவகம் செய்வதையே பெண்களின் மகத்தான பணியாக காட்டிக் கொள்வதால் இந்த ஆபத்தான சமூக கட்டமைப்பைவிட்டும் ஒரு சுதந்திரமான சிந்தனையுள்ள பெண் வெளியில் வர யோசித்துப்பார்க்கவே முடியாமல் போய்விடுகின்றாள்.இப்படி ஒரு பெண் தன் வாழ்விலும் ஜெயிக்க வேண்டிய பல காரியங்கள் இருக்கின்றது என்று எண்ணிப்பார்க்கவே முடியாத அளவிற்கு அவளை இந்த சமூகம் வீட்டு சூழலுக்குள் வைத்து பணிவிடை செய்வதற்கு மட்டும் நிற்பந்திக்கும் அந்த நிலையைத்தான் இங்கு நான் பெண் அடிமைத்தனத்தின் உச்சமாக கருதுகின்றேன்.

அச்சம்,நாணம் ,என்பதே பெண்களிடம் காணப்பட வேண்டிய சிறந்த பண்புகள் என்பதாகக்கூறி அவளை நான்கு சுவற்றிற்குள் அடைக்க நினைப்பதையே இந்த சமூகம் அவளுக்குச் செய்யும் மாபெரும் அநீதியாகவும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.ஆக ஒரு சிறந்த பெண் என்பவள் தன் வீட்டிலேயே அடைபட்டுக்கிடப்பால், வெளியில் செல்லவேமாட்டால் என்ற அடக்குமுறை நிறைந்த சமூக கட்டமைப்பை சித்தரித்ததில் இந்த சமூகத்திற்கே பெரும்பங்கு இருப்பதாக இங்கு மிக ஆணித்தரமாக பதிவுசெய்துகொள்கின்றேன்.

அடுத்தபடியாக ஒருபெண் சந்திக்கும் மிகப்பெரும் அநீதி மற்றும் அடிமைத்தனம் அவளின் துணையை தேர்ந்தெடுப்பதில்தான் எனபதாகவே நான் காண்கின்றேன்.வாருங்கள் அதுகுறித்த சில விவரங்களையும் இங்கே பார்த்துவிடுவோம்.

2.துணையை தேர்ந்தெடுப்பதில் உரிமையை பறிப்பது.

ஒரு பெண் தான்உறவாடுவதற்கு தகுதியான நபரை தானே தேர்ந்தெடுக்கும் உரிமையை இந்த சமூகம் இந்த 20 ஆம் நூற்றாண்டிலும் கூட கொடுக்க மறுத்துக்கொண்டிருக்கின்றது என்பதை மனசாட்சியுள்ள எந்த மனிதர்களும் மறுக்கமாட்டார்கள் என்றே நம்புகின்றேன்.ஆம்.! தங்கள் வீட்டுப்பெண் அல்லது தங்கள் குடும்பத்துப்பெண் தாங்கள் விரும்பிய நபர்களை தவிர்த்து வேறு யாரையும் தேர்ந்தெடுக்கவே கூடாது என்ற ஆதிக்க உணர்வு உண்மையில் இன்றும் பெரும்பாலானோரிடம் புரையோடிப்போய் கிடப்பதாகவே நான் காண்கின்றேன்.

அவளுடைய கற்பும்,குலமும் கோத்திரமும் மதிக்கப்பட வேண்டியதுதான் என்றாலும் அதனை விரும்புவதற்கும்,விரும்பாமல் போவதற்கும் அவளுக்கு முழு உரிமையுள்ளது என்பதை ஏற்கமுடியாத இந்த சமூக கட்டமைப்பையே பெண் அடிமைத்தனத்திற்கு உதவும் ஆபத்தான சமூக கட்டமைப்பாக நான் குறிப்பிட விரும்புகின்றேன்.உண்மையில் ஒரு பெண் தான்விரும்பிய நபருடன் பழகக்கூடாது என்று நிர்பந்திப்பதைவிட மிக கொடிய பெண்அடிமைத்தனம் வேறு எதுவுமில்லை என்றே நான் கருதுகின்றேன்.ஆனால் அது விஷயத்தில் ஒரு பெண்ணின் உரிமையை பரிப்பதிலேயே இன்றைய சமூகம் மிக வலுவான சமூக கட்டமைப்பை ஏற்படுத்தி வைத்திருப்பது இந்த மனித இனத்திற்கான சாபமாகவே நான் கருதுகின்றேன்.

ஏனெனில் பெண்கள் தங்கள் வாழ்க்கை துணையாக இருக்கட்டும் அல்லது நண்பர்களாக இருக்கட்டும் யாரை தேர்ந்தெடுக்க வேண்டுமானாலும் தன் வீட்டார்களின் ஆசைக்கினங்கவோ அல்லது தான் சார்ந்த சமூகத்தின் ஆசைக்கினங்கவோதான் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற நிலையை உறுவாக்கியதில் இந்த அவளம் நிறைந்த சமூகத்திற்கே பெரும் பங்கு இருப்பதாக நான் காண்கின்றேன்.

தொடர்ந்து வாசிக்க அமேசானில் இடம்பெற்றிருக்கும் எனது"பெண் அடிமைத்தனமும் அதில் சமூகத்தின் பெரும் பங்கும்" என்ற புத்தகத்தை பெற்று பயனடைந்துகொள்ளுங்கள்.

நன்றி:

வியாழன், 2 செப்டம்பர், 2021

யார் இந்த அல்பர்ட் ஐன்ஸ்டீன்?(Albert Einstein)

யார் இந்த அல்பர்ட் ஐன்ஸ்டீன்
யார் இந்த அல்பர்ட் ஐன்ஸ்டீன்

ஐன்ஸ்டீன் 1879 மார்ச் மாதம் 14 ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.இவருடைய தந்தை ஒரு பொறியாளர் ஆவார்.அதனால் தன் மகனையும் ஒரு பொறியாளனாக ஆக்க வேண்டும் என்ற கனவிலேயே ஐன்ஸ்டீனையும் படிக்க வைத்தார்.ஆனால் சிறு பிராயத்தில் ஐன்ஸ்டீனுக்கு படிப்பின் மீது எந்த ஈடுபாடுமில்லாமல் இருந்தது.ஆகையால் அவர் பள்ளி பருவத்தில் ஒரு சராசரி மாணவணாக கூட இருக்கவில்லை.ஆனாலும் ஐன்ஸ்டீனுக்கு இயற்பியல் சம்மந்தமான ஏதோ ஒரு தேடல் இருந்தது.இந்த பிரபஞ்சத்தின் சில ரகசியங்களை கண்டறிய வேண்டும் என்ற வேட்கை இருந்தது.

இதற்காகவே இயற்பியலில் இளங்கலை பட்டமும் படித்தார்.ஆனால் அவருடைய கல்லூரி காலங்களில் வகுப்பறைக்கு செல்வதைவிட ஏதேனும் ஒரு மரத்தடியில் அமர்ந்துகொண்டு இந்த புவியியலை உற்று நோக்கி குறிப்புகள் எழுதுவதிலேயே தன் பொழுதை கழித்தார்.இறுதியில் கல்லூரி கல்வியை முடித்தார்.ஆனால் படித்ததற்கான வேலை எங்கும் அவருக்கு கிடைக்கவில்லை.ஒரு சில வருடங்கள் வேலை தேடியே தன் வாழ்நாட்களை வெறுக்க ஆரம்பித்தார்.பிறகு அவருடைய தோழர் ஜெர்மனியில் உள்ள ஆய்வு கூடத்தில் ஒரு குமாஸ்தா வேலையிருப்பதாக கூறி அதில் சேர்த்துவிட்டார். அங்கு வேலைக்கு சேர்ந்த ஐன்ஸ்டீன் ஆய்வுஅறிக்கை பலவற்றை பார்க்கும் வாய்ப்பை பெற்றார்.அப்பொழுதும் மீண்டும் தன் ஆய்வு கனவுக்குள் குதித்தார்.ஒரு கட்டத்தில் இந்த உலகமே இன்று வியந்து போற்றும் இரு மகத்தான விதிகளை கண்டு அறிந்து இந்த உலகிற்கு கொடுத்தார்.

1.Special relativity-சிறப்பு சார்பு கோட்பாடு.

2.General relativity-பொது சார்புக் கோட்பாடு.

பிறகு இவற்றையே Theory of relativity -சார்புக் கோட்பாடு என்று அழைக்கப்பட்டது.இதை அவர் முன்வைத்தபோது இந்த உலகில் உள்ள பெரும்பாலானோர் இதனை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.ஏனெனில் இவர் ஒரு சாதாரண குமாஸ்தா வேலைசெய்பவர் என்பதும் அதற்கு முக்கிய காரணமாக இருந்தது. மேலும் ஐன்ஸ்டீன் ஒரு ஜெர்மானிய யூதர் என்பதனாலும் ஆரம்பத்தில் சிலர் புறக்கணித்ததாகவும் வரலாற்றில் நம்மால் காணமுடிகின்றது.ஆனாலும் முழு பூசனியை சோற்றில் மறைத்துவிட முடியாதல்லவா?எனவே ஐன்ஸ்டீனின் பெரும் போராட்டத்திற்கு பின் அவருடைய இந்த கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டது.பிறகு ஐன்ஸ்டீன் அறிவியல் உலகில் புகழின் உச்சிற்கு கொண்டு செல்லப்பட்டார்.

சரி இப்பொழுது ஐன்ஸ்டீனின் அந்த கோட்பாடு அப்படி என்ன இந்த உலகிற்கு முக்கியமானதை கூறிவிட்டது என்று நீங்கள் யோசித்தால் வாருங்கள் அதன் அடிப்படைகளை அறிந்து கொள்வோம்.E=mc2 இந்த மொத்த பிரபஞ்சத்தின் முழு செயல்பாட்டையும் இந்த சிறிய விதிக்குள் அடக்கிவிட்டார் என்பதே அவருடைய மகத்தான கண்டுபிடிப்பாகும்.அதாவது Energy=mass times the speed of light squared -ஆற்றலும் ஒரு பொருளின் நிறையாற்றலும் ஒளி வேகமும் சமமான காலத்தில் பயணிக்கின்றது என்றார்.

இதனை கூறுவதால் என்ன பலன் என்று நீங்கள் யோசிக்கலாம்.இங்குதான் அவர் இந்த விதியை வைத்து மனிதன் காலத்தையும் கடக்க முடியும் என்பதையும் சிறிய ஆற்றலை வைத்தே மகத்தான சக்தியையும் உறுவாக்கிவிட முடியும் என்ற பேருண்மையை வெளிப்படுத்துகின்றார்.ஒரு பொருளில் இயற்கையாகவே ஆற்றல் உள்ளது என்பதாலும் இந்த வெளி அண்டமானதும் தனக்குள் ஒரு ஆற்றலை வைத்திருக்கின்றது என்பதாலும் அவற்றை கடக்கும் ஒளி வேகத்தில் நாம் ஒரு ஆற்றலால் அழுத்தம் கொடுப்போமேயானால் அதன் மூலம் அப்பொருளில் பன்மடங்கு ஆற்றல் வெளிப்படும் என்று கூறுகின்றார்.

இதனை அடிப்படையாகக்கொண்டே இரண்டாம் உலகப்போரின் போது நியூக்லியஸ் அனுகுண்டுகள் தயாரிக்கப்பட்டது.தன்னுடைய கண்டுபிடிப்பை ஜெர்மனி மனித இனத்திற்கு எதிராக பயன்படுத்துவதை தன்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஐன்ஸ்டீன் எதிர்ப்பு தெறிவித்தார்.ஆனால் அவை சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது.ஜப்பானில் வெறும் 0.08 கிராம் உந்து சக்தி கொண்ட நியூக்லியஸ் அணுதான் பயன்படுத்தப்பட்டது.ஆனால் அதன் விளைவால் அங்கு 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனிதர்கள் சம்பவ இடத்திலேயே செத்துமடிந்தார்கள்.மேலும் அதன் தாக்கம் மிக கொடியது என்பதால் இன்றுவரை அதன் பாதிப்பு அங்கு தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது என்றும் ஒரு ஆய்வு கூறுகின்றது.

ஆக ஐன்ஸ்டீன் இந்த உலகை அழிக்கும் ஒரு சக்தியையே கண்டுபித்து கொடுத்தார் என்று பலரும் இன்று குற்றம் சாட்டுகின்றனர்.ஆனால் உண்மை என்னவெனில் அவர் இந்த உலகின் ஆற்றலையும் இந்த வெளியின் ஆற்றலையும் அளவிட்டு இதனை எப்படி கடந்து நாம் நமக்கான நலவுகளை தேடிக்கொள்ளலாம் என்பதையே கூறினார்.உதாரணமாக உலகில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் ஒரு தனி ஆற்றல் உள்ளது அவற்றின் மூலம் நாம் வேறொரு ஆற்றலை உறுவாக்க முடியும் என்பது மட்டுமே அவரின் மகத்தான விதியாக இருந்தது.அதன் அடிப்படையில்தான் இன்று நீரிலிருந்தும் கூட மின்சாரம் தயாரிக்கப்படிகின்றது.

அவர் கூறிய அந்த விதியின் அடிப்படையில்தான் பெட்ரோல், நிலக்கறி போன்ற பல்வேறு தனிமங்களிலிருந்து வெளிப்படும் அந்த ஆற்றல்களை எல்லாம் நாம் கண்டறிந்து அதன் மூலமாக பெரும் பெரும் கருவிகளை இயக்கிக் கொண்டிருக்கின்றோம்.எனவே என்னைப் பொறுத்தமட்டில் ஐன்ஸ்டீன் இந்த உலகிற்கு ஒரு மகத்தான வரப்பிரசாதம் என்பதாகவே நான் காண்கின்றேன்.மேலும் அறிவியல் உலகில் அவருடைய பங்கு மகத்தானதாக இருந்திருக்கின்றது என்பதையும் வருங்காலங்களிலும் அது இருக்கும் என்பதையும் நிச்சயமாக நம்மால் ஒருபோதும் மறுக்க முடியாது.
நன்றி:

புதன், 1 செப்டம்பர், 2021

நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது?timing-management

நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது-timing-management
நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது

முன்னுரை:

நம்மில் பலருக்கும் நம் நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் பல்வேறு குழப்பங்கள் நிறைந்திருக்கும்.அவ்வாறே எதை எப்பொழுது செய்வது என்பதிலும் மிகப்பெரும் சிக்கல்களும் இருந்திருக்கும்.அவற்றையெல்லாம் போக்கவே நேரமேலான்மை அறிஞர்களில் சிலர் ஒரு அற்புதமான அட்டவனையை உறுவாக்கினார்கள்.அவர்கள் உறுவாக்கிய அந்த அட்டவணையானது நம்மில் ஒவ்வொருவருக்கும் மிக பிரயோஜனம்மிக்கதாக இருக்கும் என்ற அடிப்படையில் இங்கு நான் அவற்றை பதிவு செய்கின்றேன். கட்டாயம் நீங்களும் அதனை கடைபிடித்து வாருங்கள்.நிச்சயம் உங்கள் நேரம் உங்கள் கைவசமிருக்கும்.

நேரத்தை எப்படி பாதுகாப்பது?

முதலில் நாம் நம்முடைய நேரத்தை பாதுகாக்க நம்முடைய காரியத்தை 4 வகையாக பிரித்துக் கொள்ள வேண்டும்.அதாவது..!

1. உடனே செய்ய வேண்டியதும்,மிக அவசியமானதும்.

2. உடனே செய்ய வேண்டியதல்ல,ஆனால் மிக அவசியமானது.

3. உடனே செய்ய வேண்டியது,ஆனால் அவசியமற்றது.

4. உடனே செய்ய வேண்டியதுமல்ல,மிக அவசியமானதுமல்ல.

இப்படி நம் வாழ்வில் அன்றாடம் செய்ய வேண்டிய காரியங்களை நான்கு வகையாக பிறித்துப்பார்த்தால் இப்பொழுதே செய்தாக வேண்டும் என்ற காரியங்கள் மிக குறைவாகவே இருக்கும்.அவற்றில் முதலில் எதனை செய்தால் தொல்லை நீங்குமோ அத்தகைய காரியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.இதனைத்தான் காலையில் எழுந்தவுடனே ஒரு பெரிய தவலையை விழுங்கி விடுங்கள் என்று ஒரு புத்தக ஆசிரியர் அற்புதமாக கூறுகின்றார். அதாவது அன்றைய அட்டவனையில் உங்களுக்கு மிக முக்கியமான காரியம் என்று எதனை நினைக்கின்றீர்களோ அதனையே முதலாவதாக செய்து முடித்துவிடுங்கள் என்கிறார்.அதனால் உங்களுடைய மனதில் இருக்கும் பெரும் பாரம் குறைந்து அன்றைய நாள் மிக மகிழ்சிக்குறிய நாளாக ஆரம்பத்திலேயே இருக்கும் என்பதாகவும் விளக்கமளிக்கின்றார்.

இங்கு எதனை முதலில் செய்வது என்பதில் குழப்பமுள்ளவர்களுக்கு நான் வாசித்த ஒரு துறவியின் உபதேசம் மிக பலனுள்ளதாக அமையும் என்பதால் அதனையும் இங்கு நான் பதிவு செய்கின்றேன்.

"ஒரு ஊரில் ஒரு துறவி தன் மாணவர்களுக்கு போதனை செய்து கொண்டிருந்தார்.அப்பொழுது அங்கு அந்த ஊரின் செல்வந்தார் மிக பதட்டமான சூழலில் ஓடிவந்தார்.துறவி என்னப்பா உனக்கு வேண்டும் என்றார்...!

"துறவியே! நான் மிகப்பெரும் குழப்பத்தில் இருக்கின்றேன்.ஒரு புறம் என் மனைவியின் உடல் நிலை சரியில்லாததால் அவள் படுத்த படுக்கையில் இருக்கிறால்,மற்றொரு புறம் என் வியாபாரத்தை பார்த்துக்கொள்ள யாருமே இல்லை.எனவே நான் என்ன செய்வது என்று தெறியாமல் இரண்டு மூன்று நாட்களாக தவிக்கின்றேன் என்று கூறினார்.

ஓஹ் அப்படியா,,?அதுதான் உன்னுடைய பிரச்சனையா?என்று பொறுமையாக கேட்ட துறவி தன் பையில் இருந்த ஒரு கண்ணாடி குடுவையையும் ஒரு சில கற்களையும் கையில் கொடுத்து இந்த கண்ணாடி குடுவையை இந்த கற்களால் நிரப்பி வை இதோ வருகின்றேன் என்று கூறிவிட்டு தன் அறைக்குள் சென்றுவிட்டார்.இதனைக் கேட்ட அந்த செல்வந்தனுக்கு மிக கோபம் வந்துவிட்டது.நான் பிரச்சனை என்று ஒன்றை கேட்க வந்தால் இந்த துறவி சம்மந்தமே இல்லாமல் கற்களை பாட்டிலுக்குள் நிரப்ப சொல்கின்றானே என்று மனதோடு புழம்பிக்கொண்டு ஒவ்வொரு கற்களாக நிரப்பத் தொடங்கினார்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்த துறவியிடம் அச்செல்வந்தன் ஐயா இந்தாங்கள் உங்கள் கண்ணாடி குடுவை அதில் கற்களை நான் நிரப்பிவிட்டேன் என்று கையில் கொடுத்தார்.அதனை தன் கையில் பெற்ற துறவி அடடே.!அழகாய் நிரப்பி இருக்கின்றாயே..!நான் உன்னிடம் பெரிய கற்களும் சிறிய கற்களுமாகவல்லவா கொடுதேன் அதை எப்படி பிறித்து இவ்வளவு அழகாக பாட்டிலுக்குள் அடைத்தாய் என்று கேட்டார்..?தொடர்ந்து வாசிக்க என்னுடைய "நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது" என்ற புத்தகத்தை வாசியுங்கள்.அதில் இன்னும் பல அற்புதமான சிந்தைகளையும் அட்டவனைகளையும் இணைத்துள்ளேன்.நிச்சயமாக அவைகள் உங்களுக்கு மிக பிரயோஜனமிக்கதாக இருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.

பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது?

பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது
பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது

பிரச்சனையில்லாத உலகமே இல்லை.

இந்த உலகில் எந்த மனிதனுடைய வாழ்விலும் பிரச்சனைகளுக்கு விதிவிலக்கு என்பதே கிடையாது.சிலருக்கு வாழ்வதே பிரச்சனையாக இருக்கின்றது. பலருக்கு வாழ்க்கையில் எங்குபோனாலும் பிரச்சனையாக இருக்கின்றது. சிலருக்கு பிரச்சனை எங்கிருந்தாவது வந்துவிடுமோ என்பதே பெரிய பிரச்சனையாக இருக்கின்றது.இப்படி பிரச்சனை என்பது மனிதனிடமிருந்து பிறிக்க முடியாத ஒரு அங்கமாகவே அது இடம் பெற்றுவிட்டது.ஆக பிரச்சனையில்லாத வாழ்வு அல்லது இடம் அல்லது மனம் வேண்டும் என்று இந்த உலகில் நீங்கள் விரும்பினால் நிச்சயம் நீங்கள் வேறு ஏதேனும் கிரகத்தில் தான் அதை தேட வேண்டும் என்று பணிவன்போடு வேண்டிக்கொள்கின்றேன்.

எனவே நான் இந்த கட்டுரையில் பிரச்சனையில்லாமல் எப்படி வாழ்வது என்பதைப் பற்றி ஒருபோதும் பேசப்போவதில்லை.ஏனெனில் அது சாத்தியமற்றது என்பது எனது கண்ணோட்டமாகும்.ஆனால் அந்த பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது என்பதைப் பற்றி ஒருசில வழிமுறைகளை இங்கு குறிப்பிடுகின்றேன்.அவை உங்களுக்கு பிடித்தமானவையாக இருந்தால் நீங்களும் அதனை கடைபிடியுங்கள்.

பிரச்சனையை தீர்க்கும் வழிகள்.

1.முதலில் நீங்கள் பிரச்சனை என்றால் என்ன என்று அறிந்திருக்க வேண்டும்.

ஏனென்றால் இன்று எதுவெல்லாம் பிரச்சனை என்று பார்ப்பதிலேயே இங்கு பலருக்கு பிரச்சனையாக இருக்கின்றது என்பதாகவே நான் காண்கின்றேன்.எனவே பிரச்சனை என்றால் என்ன என்பதை முதலில் இங்கு நான் விளக்கிவிடுகின்றேன்."ஒரு செயலால் நமக்கோ அல்லது நம்மை சுற்றியிருப்பவர்களுக்கோ அல்லது ஏதேனும் ஒரு பொருளுக்கோ மீட்ட முடியாத பெரும் சேதத்தை ஏற்படுத்துவதையே பிரச்சனையாக நான் கருதுகின்றேன்."இதுவே பிரச்சனைக்கான சரியான பொருளாக இருக்கும் என்றும் நான் நம்புகின்றேன்.இன்னும் இங்கு "மீட்ட முடியாத பெரும் சேதத்தையே" பிரச்சனைக்கான பெரும் காரணமாகவும் நான் கருதுகின்றேன்.

இன்றைக்கு சிறிய விஷயத்திற்காகவெல்லாம் ஊரை இரண்டாக்கும் மனிதர்களுக்கு இதனை மிக அழுத்தமாக சொல்லவும் நான் விரும்புகின்றேன். உண்மையில் அத்தகைய பக்குவமற்ற மனிதர்களிடம் நாம் மாட்டிக்கொள்வது மிகப்பெரும் சாபம் என்றே நான் கருதுகின்றேன்.ஆக இங்கு நான் வலியுறுத்த விரும்பும் விஷயம் என்னவென்றால் முதலில் பிரச்சனை என்றால் அது உங்களுக்கு பெரிய அளவில் மீட்ட முடியாத அளவிற்கு பாதிப்பை தருவதாக இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்பதேயாகும். ஏனென்றால் வாழ்வில் எந்த மாற்றங்களையும் தந்துவிடாத ஒரு காரியத்தை தன்னுடைய பிரச்சனையாக பார்ப்பவனைவிட மிகப்பெரிய முட்டாள் இந்த உலகில் வேறு யாருமில்லை என்றே நான் கருதுகின்றேன்.

எனவே உங்கள் வாழ்வில் எதையெல்லாம் உங்கள் மன நிம்மதியை கெடுத்துக் கொண்டிருக்கும் பிரச்சனையாக இன்று வரை நினைத்துக் கொண்டிருக்கின்றீர்களோ அது உண்மையில் உங்கள் வாழ்வின் பெரும் பகுதியை பாதிப்பதுதானா?என்று ஒரு கனம் சீர்தூக்கிப்பாருங்கள்.இல்லை என்ற பதில் கிடைத்தால் முதலில் அவற்றை உங்கள் மனதிலிருந்து பிடிங்கி எறியுங்கள்.இதுவே உங்களின் மனம் சார்ந்த அந்த பிரச்சனைக்கு முதல் தீர்வாகும்.அடுத்தபடியாக உண்மையிலேயே உங்கள் வாழ்வில் ஒரு விஷயம் பிரச்சனையாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் அதாவது உண்மையிலேயே அது உங்களுக்கு மனதளவிலோ அல்லது பொருளலவிலோ அல்லது ஏதேனும் ஒரு விதத்தில் பாதிப்பை தந்தால் அப்பொழுது அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு இரண்டு வழிகளை உங்களுக்கு இங்கு நான் பதிவுசெய்கின்றேன். அவற்றில் எது உங்களுக்கு சரியாகப்படுகின்றதோ அதனை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

1. அந்த கஷ்டங்களை கொடுப்பது உங்களுக்கு எவ்வளவு அவசியமானது என்பதை ஒப்பீடு செய்துபாருங்கள்.அது உங்களுக்கு மிக அவசியமானதாகவோ அல்லது அது இல்லாமல் நீங்கள் பெரும் துன்பத்திற்குள் ஆளாவீர்கள் என்றோ நீங்கள் எண்ணினால் அந்த பிரச்சனையை உங்கள் ஆழ்மனதால் முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முன்வாருங்கள்.அவற்றை சிறிது காலம் சகித்துக் கொண்டு கடந்துசெல்ல முடிவுசெய்யுங்கல்.உண்மையில் இதையும் ஒரு உண்ணதமான செயலாகவே நான் காண்கின்றேன்.

இத்தகைய சகிப்புத்தனமையைத்தான் அனைத்து மதங்களும் அதன் தலைவர்களும் உயர்ந்த செயலாக போதித்திருப்பதாக நம்மால் காணமுடிகின்றது.மேலும் இத்தகைய பொறுமையையே நம்முடைய நெருங்கிய உறவினர்களான தாய் தந்தையரிடமும் மனைவி மக்களிடமும் காட்டவேண்டும் என்றும் நான் விரும்புகின்றேன்.நான் மேலே பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே கிடையாது என்று கூறியதை தவறுகள் செய்யாத மனிதர்களே கிடையாது என்றும் நீங்கள் விளங்கிக்கொள்ளலாம்.எனவே இதனை ஒரு பொது விதியாக நீங்கள் புரிந்து கொண்டால் நான் கூறும் இந்த சகிப்புத்தன்மை நிச்சயமாக உங்களுக்கு பாரமாக இருக்காது என்றே நான் நம்புகின்றேன்.

நமக்கு ஏதோ ஒரு நிலையில் சில துன்பங்கள் தந்துவிட்டார்கள் என்பதற்காக ஒவ்வொருவரையும் நாம் தூக்கிஎறிந்துவிட வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் ஒரு கட்டத்தில் நம்மை நாமே நாம் வெறுக்க ஆரம்பித்துவிடுவோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.ஆக உண்மையிலேயே உங்களுக்கு சில கஷ்டங்களை தரும் பிரச்சனை இருக்கின்றது என்றால் அது தூக்கி வீசிவிட தகுதியானதுதானா என்பதில் ஒன்றுக்கு நூறு முறை யோசித்துக் கொள்ளுங்கள்.அதனை சீர்செய்துவிட முடியும் என்றோ அல்லது அது உங்கள் வாழ்வையே இழக்கும் அளவிற்கான பிரச்சணையல்ல என்றோ எண்ணினால் அதனை மனமுவந்து ஏற்றுக்கொள்ள தொடருங்கள்.

அதற்காக வேண்டுமென்றே உங்களை எப்பொழுதும் மிக மோசமாக நடத்தப்படுவதை நீங்கள் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும் என்று இங்கு நான் ஒருபோதும் கூறமாட்டேன்.ஆனால் இந்த உலகில் மிகச்சரியானது என்ற ஒன்று இல்லை என்பதை மட்டும் புரிந்துகொள்ளுங்கள் என்பதை மட்டுமே இங்கு நான் நினைவூட்ட விரும்புகின்றேன்.ஆக உங்கள் உண்மையான பிரச்சனைக்கு அதனை கொடுப்பவர்களை கருத்தில் கொண்டு ஏற்றுக் கொள்வதும் ஒரு சிறந்த தீர்வாகவே நான் காண்கின்றேன்.ஆனால் அதனை கட்டாயம் நீங்கள் செய்தே ஆக வேண்டும் என்பதில் எனக்கு எந்த உடன்பாடுகளும் கிடையாது என்பதையும் இங்கு நான் வெளிப்படையாகவே பதிவுசெய்துகொள்கின்றேன்.

2. உங்களுக்கு அந்த கஷ்டங்களை கொடுப்பது உங்கள் உயிரிற்கோ அல்லது உடலுக்கோ அல்லது உங்களின் முக்கிய உடமைக்கோ பெரும் பிரச்சனையாக மாறிவிடும் என்று நினைத்தால்,அல்லது அதனை பேச்சுவார்த்தையால் தீர்க்க முடியாது என்று எண்ணிணால் அதனை விட்டும் முடிந்தளவு தூரமாகிவிடுங்கள்.அல்லது அதனை தூரமாக்கிவிடுங்கள்.இவைகளுக்கு முடிந்தளவு சட்ட ரீதியிலான தீர்வுகளை காணவேமுற்படுங்கள்.ஆக இவற்றையே பெரும் பிரச்சனைகளுக்கான தீர்வாக நான் கருதுகின்றேன். அடுத்தபடியாக இந்த பெரும் பிரச்சனைகளை பெரும்பாலும் தவிர்த்துகொள்வதற்கு ஒரு சில வழிமுறைகளையும் இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.முடிந்தளவு அவற்றையும் கடைபிடித்து வாருங்கள்.அவை பெரும்பாலும் உங்களை பிரச்சனையை விட்டும் காப்பாற்றலாம்.

  • உங்களுக்கும் உங்களை நம்பி இருப்பவர்களுக்கும் மிக நேர்மையாக இருங்கள்.
  • உங்கள் பொருளிலிருந்து அவ்வப்பொழுது தர்மம் செய்து வாருங்கள்.
  • அனைவருடனும் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள்.
  • சமூகத்திற்கு பெரிய அளவில் தொல்லை தருபவர்களிடம் சற்று ஜாக்கிரதையாக இருங்கள்.
  • உங்கள் உடல் வலிமையையும் ,மனவலிமையும் வளர்ப்பதை கடைபிடியுங்கள்.
  • யாரைப் பார்த்தும் பயப்படாதீர்கள்.
இவ்வாறு நடந்து கொள்வதால் பிரச்சனைகள் வராது என்று சொல்ல முடியாது என்றாலும் நாம் பிரச்சனையை விட்டும் இலகுவாக வெளியில் வந்துவிடலாம் என்பதற்காகவே இதனை இங்கு நான் பதிவிட்டுள்ளேன்.இறுதியாக உறவுகளில் முறிவு ஏற்படும் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்பதையும் பார்த்துவிடுவோம்.

உறவு முறிவுக்கு தீர்வு உண்டா?

இந்த பிரச்சனைக்கு ஒரே ஒரு தீர்வு மட்டுமே இருக்கின்றது.அதாவது இது அவரவரின் மனம் சார்ந்தது என்பதாலும் சம்மந்தப்பட்ட இருவர் மட்டுமே இதனை தீர்க்க முடியும் என்பதாலும் ஏனையோர்கள் இதில் தலையிடாமல் இருப்பதே இதற்கான அற்புத தீர்வாக அமையும் என்றே நான் கருதுகின்றேன்.
மேலும் உறவில் ஒருவருக்கு ஒருவரை பிடிக்கவில்லையானால் ஏன் பிடிக்கவில்லை?என்றோ அல்லது எதற்கு பிடிக்கவில்லை? என்றோ கூட கேட்பதற்கு நமக்கு உரிமை இல்லை என்பதாகவே நான் கருதுகின்றேன். எனவே உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு என்பது அவரவரின் சுதந்திரமான உறவுமுறையை ஏற்றுக்கொள்வது மட்டுமேயாகும்.