புதன், 22 செப்டம்பர், 2021

உங்கள் மனம் தேவையற்ற தீர்மானம் செய்கிறதா?

முன்னுரை:

இன்றைக்கு மனிதர்களிடம் காணப்படும் குணங்களிலேயே மிக ஆபத்தான குணம் தேவையற்ற தீர்மானம் செய்வதுதான் என்றே நான் கருதுகின்றேன். எந்த அவசியமும் இல்லாத இடங்களிலும் கூட மனிதர்களில் பெரும் பாலானோர் தேவையற்ற தீர்மானங்களை தேடுவதையும், அதில் ஈடுபடுவதையும் காணும்பொழுது எனக்கு மிக பரிதாபமாகவே உள்ளது. அத்தகைய நிலையைக்கொண்ட மூன்று ஜென் துறவிகளின் ஒரு நிகழ்வை இங்கு நான் குறிப்பிட்டுக்காட்ட விரும்புகின்றேன்.அது நிச்சயம் நம் போன்ற தேவையற்ற தீர்மானங்களை தேடும் மனிதர்களுக்கு மிக பிரயோஜனம் மிக்கதாக இருக்கும் என்றும் நம்புகின்றேன்.

"மூன்று ஜென் துறவிகள் காலை பொழுதில் எப்பொழுதும் போல் நடை பயிற்சிக்காக அருகில் உள்ள காட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கின்றனர்.அப்பொழுது எதார்த்தமாக அந்த காட்டில் இருந்த மலை உச்சியில் தங்கள் முந்தைய ஆசிரியரான ஒரு ஜென் துறவி நிற்பதை மூவரும் காண்கின்றனர்.அவரை கண்டவுடனே மூவரில் ஒருவர் நம் ஆசிரியர் யாரையோ எதிர்பார்த்து நிற்பதை போன்று தெரிகின்றதே என்றார்.
அதனைக்கேட்ட மற்றொருவர் இல்லை!இல்லை.!அவர் எதோ ஒன்றை தொலைத்துவிட்டு மலையின் உச்சியில் நின்று தேடுகின்றார் என்றே நான் நினைக்கின்றேன் என்றார்.

அதனைக் கேட்ட மூன்றாமவரோ இல்லை!இல்லை..!அவர் அங்கு நின்று தியானம் செய்துகொண்டிருக்கின்றார்.ஏனெனில் அவரிடம் எந்த அசைவும் காணப்படவில்லை என்று கூறி முடித்தார்..!இப்பொழுது மூவருக்கும் தங்கள் ஆசிரியர் என்ன செய்துகொண்டிருக்கின்றார் என்பதில் கருத்து வேறுபாடு முத்தியது.வேறு வழியே இன்றி இப்பொழுது ஆசிரியரையே நேராக சென்று சந்தித்து பிரச்சசனையை தீர்ப்பதாக முடிவு செய்யப்பட்டது.

தாங்கள் எதற்கு வந்தார்களோ அவற்றை எல்லாம் மறந்துவிட்டு,மலை உச்சிக்கு சென்றால் தாங்கள் செய்ய வேண்டிய அடுத்த வேலைகளெல்லாம் நின்றுபோகும் என்பதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு சிரமத்தோடு மலை உச்சியை அடைந்தார்கள்.அப்பொழுது அரை கண்ணை மட்டும் திறந்த நிலையில் ஆசிரியர் நின்று கொண்டிருப்பதைக்கண்டனர்.ஆனாலும் முதலாமவருக்கோ தன் கருத்துதான் சரி என்று நிறூபிக்கப்பட வேண்டும் என்ற பேராவல் இருந்ததால் அவர் மெல்லமாக ஆசிரியரை அழைத்தார். ஆசிரியரும் என்ன கூறுங்கள் என்றார்.அதற்கு முதலாமவர் ஐயா நீங்கள் இங்கு யாரையோ தேடி வந்திருக்கின்றீர்கள் அப்படித்தானே என்றார்.

அதற்கு துறவியோ எனக்கு இந்த உலகில் யாரும் இல்லையே நான் யாரை தேடப்போகின்றேன் நான் தனியாகவே இந்த உலகிற்கு வந்தேன் தனியாகவே போவேன் என்பதை நான் நன்றாக அறிவேன் எனவே இங்கு நான் யாரையும் தேடவேண்டிய அவசியமில்லையே என்றார்.அதனைக்கேட்ட இரண்டாமவர் தன்னுடைய முடிவுதான் சரியானது என்று எண்ணிக்கொண்டு அப்படியானால் நீங்கள் உங்களுடைய கால் நடைகளில் ஏதோ ஒன்றை தொலைத்து விட்டு மேலிருந்து தேடுகின்றீர்கள் அப்படித்தானே என்றார்.

அதற்கும் துறவி இங்கு என்னுடைய பொருள் என்று எதுவுமே இல்லை என்றிருக்கும் பொழுது நான் எப்படி என்னை விட்டும் தொலைந்த பொருளை தேடுவேன்?எனவே நான் எந்த பொருளையும் தேடவில்லை என்று பதிலளித்தார்.பிறகு மூன்றாமவருக்கோ மிக்கமகிழ்ச்சி ஏனென்றால் ஆசிரியர் தியானத்தில் இருப்பதாக தான் கருதியதுதான் உண்மை என்று எண்ணிக்கொண்டு "அப்படியானால் நீங்கள் இங்கு தியானம் செய்கின்றீகள்தானே என்றார்.

அதற்கு துறவியோ உனக்கு தெரியாதா?தியானம் என்பது எல்லா நிலையிலும் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம் என்று.அதனை நான் நம் மடத்திலேயே செய்துவிட்டேன்.இப்பொழுது நான் ஏதுமற்ற நிலையில் இருக்கின்றேன்.நான் யார் எனக்குள் என்னவெல்லாம் இருக்கின்றது என்பதையெல்லாம் மறந்து ஒரு காலிப்பாத்திரமாக இருக்கின்றேன்.இத்தகைய நிலைதான் புத்தர்களால் போற்றி புகழப்பட்ட நிலை.எனவே இது தியானமும் இல்லை என்றார்.மூவரின் முகமும் வாடிப்போனது.தங்களின் தேவையற்ற தீர்மானங்கள் அனைத்தும் பொய்யாய் போனதை உணர்ந்துகொண்டார்கள்.அப்பொழுது துறவியோ மக்களின் நிலையை முடிவு செய்வதை விடுத்துவிட்டு உங்கள் காரியங்களில் ஈடுபடுங்கள்.அதுதான் உங்களுக்கு தீர்க்கமான தீர்வை தருவதற்கு மிக உகந்தது என்று உபதேசித்து அவர்களை அனுப்பி வைத்தார்.

நீதி:

  • அடுத்தவர்களின் காரியத்தில் மூக்கை நுழைக்காதீர்கள்.
  • பிறரின் செயலுக்கு வடிவம் கொடுக்காதீர்கள்.
  • நிச்சயமற்ற ஒன்றிற்காக உங்கள் சக்தியை வீணடிக்காதீர்கள்.
  • தேவையற்ற இடங்களில் உங்கள் கருத்தை நிறூபிக்க விரும்பாதீர்கள்.
  • தேவையற்ற விஷயத்தை உங்கள் தோளில் சுமக்காதீர்கள்.
  • உங்கள் காரியத்தில் ஈடுபாட்டுடன் செயல்படுங்கள்.

திங்கள், 20 செப்டம்பர், 2021

வாழ்வில் முன்னேற வேண்டுமா?

வாழ்வில் முன்னேற வேண்டுமா
வாழ்வில் முன்னேற வேண்டுமா

முன்னுரை:

இந்த உலகில் வளர்ச்சிபெற்ற ஒரு நபராக ஆகவேண்டும் என்று விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்படும் இந்த நான்கு விதிகளையும் கடைபிடித்தால் நிச்சயம் தங்கள் வாழ்வில் முன்னேறிவிடமுடியும் என்று நம்புகின்றேன்.எனவே வாசிப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் கட்டாயம் கடைபிடித்து வாருங்கள் இது உங்களுக்கு மிக பிரயோஜனமிக்கதாக இருக்கலாம்.

முதல் விதி: 1.குறைவாக பேசுங்கள்.

நீங்கள் முன்னேற வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் அதிகம் பேசுவதை நிறுத்தி அதிகம் செயல்படத்தொடங்கிவிடுங்கள்.இதனைத்தான் இங்கு குறைவாக பேசுவது என்று நான் குறிப்பிட விரும்புகின்றேன்.நம்மில் பலரும் பல்வேறு அற்புதத் திட்டங்கள் கொண்டவர்களாகவோ அல்லது அற்புத கருத்துக்கள் கொண்டவர்களாகவோ இருந்துவிடுகின்றோம்.ஆனால் அதனை செயல்படுத்துவதைவிட்டுவிட்டு அல்லது அதனை செயல்படுத்தும் வழியில் பொராடுவதை விட்டுவிட்டு சொற்காளால் மட்டுமே வெள்ளப்போவதாக கூறித்திறிவது மிக குறைமதியாளர்களின் பண்பாகவே நான் காண்கின்றேன்.

ஏனென்றால் முன்னேறிய மேன்மக்கள் தங்கள் திட்டங்களை கூறித்திரிவதை காட்டிலும் செயல்படத்தொடங்கிவிடுகின்றனர் என்பதே வரலாறு நமக்கு கற்றுத்தரும் முக்கிய பாடமாக இருக்கின்றது.எனவே நீங்கள் உங்கள் வாழ்வில் முன்னேற விரும்பினால் குறைவாக பேசுங்கள்.உங்கள் செயலையே உங்களுக்கான வெளிப்பாடாக ஆக்கிக்கொள்ளுங்கள்.

இரண்டாம் விதி: 2.அதிகம் கவனியுங்கள்:

இந்த உலகில் நீங்கள் கவனிக்காமல் எதுஒன்றையும் கற்றுவிட முடியாது என்பதையும் மேலும் உங்களால் கற்காமல் எதிலும் முன்னேற முடியாது என்பதையும் நீங்கள் உணராத வரை உங்களால் ஒருபோதும் முன்னேற முடியாது என்பதை உங்கள் ஆழ்மனதில் எப்படியாவது ஆழப்பதிய செய்துவிடுங்கள்.ஏனெனில் கூர்ந்து கவனித்தல் என்ற பன்பே உங்களை முன்னேற்றத்தின் அடுத்தபடிக்கு அழைத்துச்செல்லும் அற்புத பண்பாக இருக்கின்றது.அவ்வாறே யார் கவனித்தலை விட்டுவிடுகின்றார்களோ அவர்கள்தான் பெரும்பாலும் இந்த உலகில் பலநூறு நலவுகளைவிட்டும் தூரமாக்கப்பட்டும் விடுகின்றனர்.எனவே இந்த உலகில் ஒவ்வொன்றையும் கற்கும் ஆவலோடு உற்றுநோக்குங்கள்.நிச்சயம் உங்களை அது முன்னேற்றத்தின் உச்சிக்கு அழைத்துச் செல்லும்.

மூன்றாம் விதி:3.குறைவாக எதிர்வினையாற்றுங்கள்:

உங்களிடம் வரும் எல்லா பிரச்சனைகளுக்கும் உங்களுடைய எதிர்வினையை வெளிப்படுத்த வேண்டும் என்ற எந்த அவசியமுமில்லை என்பதை முதலில் உணர்ந்துகொள்ளுங்கள்.சிறிய சிறிய வியங்களுக்கெல்லாம் நீங்கள் உணர்ச்சி வயப்படக்கூடியவராக இருந்தால் நிச்சயம் உங்களால் முன்னேறவே முடியாது என்பதையும் நன்றாக நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.இந்த உலகம் போட்டி நிறைந்தது.எனவே அது உங்களின் உணர்வுகளை உங்களுக்கு எதிரான ஒரு பகடைக்காயாக பயன்படுத்தி உங்களை முன்னேறு வதிலிருந்தும் வெகு தூரத்தில் தள்ளிவிட முயற்சிக்கும்.அச்சமயங்களில் நீங்கள் எதிர்வினை ஆற்றுவதை தவிர்த்துவிட்டு நிதானத்தோடு செயல்படத் தொடங்கிவிடுவீர்களேயானால் நிச்சயம் உங்கள் வாழ்வில் நீங்கள் முன்னேறிவிடலாம்.

 நான்காம் விதி:4.அதிகம் உள்வாங்குங்கள்.

இந்த உலகை உற்று நோக்குவதின் மூலம் நாம் எந்தளவிற்கு உள்வாங்குகின்றோமோ அந்தளவிற்கு நம்மால் சிறப்பாக செயல்பட முடியும்.நம்மில் பலரும் அவசரக்காரர்களாகவும் அல்லது எல்லாம் தெரிந்தவர்களாகவும் நம்மை காட்டிக்கொள்ள விரும்புவதால் பெரும்பாலும் பல்வேறு விஷயங்களை நாம் உள்வாங்க தவறிவிடுகின்றோம்.ஆனால் யார் (Observe)உள்வாங்குதல் என்ற பண்பைக்கொண்டிருக்கின்றார்களோ அவர்கள் இந்த உலகில் மகத்தான விஷயங்களையும் வெளிக்கொண்டு வந்துவிடும் ஆற்றல் மிக்கவர்களாக திகழ்வது நிதர்சனமாக இருக்கின்றது.எனவே இந்த உலகை உங்களால் முடிந்தளவு உள்வாங்க கற்றுக்கொள்ளுங்கள்.ஏனெனில் உள்வாங்கும் பண்பே நிச்சயம் உங்களை உயரத்தில் நிறுத்தும்.!

சனி, 18 செப்டம்பர், 2021

வியாபாரத்தின் அடிப்படை தத்துவங்கள் என்ன?

வியாபாரத்தின் அடிப்படை தத்துவங்கள் என்ன
வியாபாரத்தின் அடிப்படை தத்துவங்கள் என்ன

முன்னுரை:

இன்றைய சூழலில் பெரும்பான்மையான பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பொருளாதாரம் சம்மந்தமான பாடங்கள் கற்பிக்கப்பட்டாலும் அவைகள் மாணவர்களுக்கு புரியும் வண்ணமோ அல்லது மாணவர்களின் வாழ்வியலோடு கலந்தோ கற்பிக்கப்படுவதில்லை என்பதே வருத்தத்திற்குறிய உண்மையாகும்.இன்னும் சொல்லப்போனால் பெரும்பாலான பேராசிரியர்களே வியாபாரத்தின் அடிப்படை கூறுகளை சரியாக புரியாததுதான் அவ்வாறு நடைபெறுவதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றது என்றும் நான் கருதுகின்றேன்.

எனவே இந்த கட்டுரையில் வியாபாரத்தின் சில தத்துவங்களை சுட்டிக்காட்டுவதின் மூலம் வியாபாரம் என்றால் என்ன என்பதையும் அவைகள் எதனையெல்லாம் அடைப்படையாகக் கொண்டு நடைபெறுகின்றது என்பது போன்ற முக்கிய அடிப்படை விஷயங்களையும் குறிப்பிட்டு இருக்கின்றேன்.இது வியாபரத்தின் அடிப்படையை புரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு மிக பிரயோஜனம் மிக்கதாக இருக்கும் என்றே நம்புகின்றேன்.

வியாபாரம் என்றால் என்ன?

இதற்கு பொருளாதார கோட்பாட்டு புத்தகங்களில் பல்வேறு பொருள்கள் கூறப்பட்டிருந்தாலும் இயல்பான வியாபார விதியை குறிப்பிடவே நான் விரும்புகின்றேன்.அதாவது."இரு நபர்கள் தங்களின் மனப்பொறுத்தத்துடன் ஒப்புதல் பெற்று தங்களுக்குள் ஒன்றை பரிமாறிக்கொல்வதற்கே இயல்பு வாழ்வில் வியாபாரம் என்று சொல்லப்படுகின்றது."

இங்கு வியாபாரத்தின் முதல் அடிப்படையாக பார்க்கப்படுவது இருவரின் மனப்பொறுத்தம் மட்டுமே என்பதை பொருளாதார வல்லுநர்கள் மிக ஆழமாக வலியுறுத்துகின்றனர்.ஏனெனில் எந்த வியாபாரத்தில் மனப் பொறுத்தமில்லாமல் வற்புறுத்தலின் பெயராலோ அல்லது மிரட்டலின் பெயராலோ கொடுக்கவோ வாங்கவோ செய்யப்பட்டிருக்குமோ அந்த வியாபாரம் செல்லாது என்பதே வியாபாரத்தின் அடிப்படை விதியாகும்.

எப்படி மனப்பொறுத்தமில்லாத வாழ்க்கையை முறித்துக்கொள்வதற்கு கணவன் மனைவி இருவருக்கும் உரிமை இருக்கின்றதோ அதனைப் போன்றே மனப்பொறுத்தமில்லாத வியாபாரத்தை முறித்துக்கொள்ள இருவருக்குமே உரிமை இருக்கின்றது என்பதே இதன் கருத்தாகும்.

வியாபாரம் ஏன் உறுவானது?

இரு மனிதர்கள் தங்களின் வேறுபட்ட தேவையை பரிமாரிக் கொள்வதற்காகவே வியாபாரம் என்ற முறை உறுவானது.இது பண்டைய காலம் தொட்டு இன்றுவரை கடைபிடிக்கப்பட்டும் வருகின்றது.அன்றைய வியாபாரம் மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கான ஒரு கருவியாக மட்டுமே பார்க்கப்பட்டது.ஆனால் இன்று அந்த வியாபாரம் பல்வேறு பரினாம வளர்ச்சி கண்டு வியாபாரம் இல்லையெனில் மனித வாழ்வு இல்லை என்றளவிற்கு மனித வாழ்வின் அடிப்படை அம்சமாக உறுமாறி இருக்கின்றது.எனவே இங்கு இன்றைய வியாபாரம் எத்தகைய நோக்கங்களுகெல்லாம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது என்பது சம்மந்தமாக அறிந்து வைத்துக்கொள்ள நாம் கட்டாயம் கடமைபட்டிருக்கின்றோம் என்ற அடிப்படையில் ஒரு சில அடிப்படையான விஷயங்களை இங்கு பதிவு செய்கின்றேன்.

இன்றைய வியாபாரத்தின் நோக்கங்கள் யாவை?

1.தனி மனித தேவையை பூர்த்தி செய்தல்.

2.சமூக தேவையை பூர்த்தி செய்தல்.

3.நாட்டின் வளத்தை பெறுக்குதல்.

4.குறிப்பிட்ட நபர்களின் பொருளாதார நிலையை வளர்ச்சியடையச் செய்தல்.

இந்த நான்கு நோக்கங்களே பெரும்பான்மையான வியாபாரத்தில் காணப்படுகின்றது.ஆரம்ப காலங்களில் மனிதர்கள் உற்பத்தியாளர்களையும் வாடிக்கையாளர்களையும் நேருக்குநேர் சந்தித்து வியாபாரம் செய்து வந்ததால் பெரும்பாலும் அவர்கள் தங்களுக்குள்ளேயே தங்களின் பொருட்களை பண்டமாற்றம் செய்து தங்களின் வியாபாரத்தை தொடர்ந்தார்கள்.அதன்பிறகே பொருட்களை சந்தைப்படுத்துதல் என்ற வழக்கம் தோன்றியது.அது எப்படி தோன்றியது என்பதை பார்த்துவிடுவோம் வாருங்கள்.

சந்தைப்படுத்தல் முறை எப்படி உறுவானது?

பண்டமாற்றுமுறை கடினமாக இருப்பதை உணர்ந்து அதை எளிமையாக்க ஒரு காலத்தில் கொடுக்கள் வாங்களை சந்தைபடுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.அதாவது தங்களுக்கு தேவையானதை கொடுக்கல் வாங்கள் செய்துகொள்ள (வியாபாரத்திற்கென்று) ஒரு தனி இடத்தை நிர்னயித்து அங்குதான் வியாபாரம் நடக்கும் என்றும்,அங்கு வந்தே மக்கள் விற்கவோ அல்லது வாங்கவோ வேண்டும் என்றும் அங்கு நிர்ணயிக்கப்படுவதுதான் விலை என்றும் பல்வேறு புதிய திட்டங்களை தங்களுக்கு தாங்களே மக்கள் வகுத்துக்கொண்டனர்.

இப்படித்தான் வியாபாரம் என்பது சந்தைபடுத்தல் முறையாகமாறியது.பிறகு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மக்களின் தேவையையும் வியாபாரியின் தேவையையும் பூர்த்தி செய்யும் அந்த இடம் போட்டிக்குள்ளாக்கப்பட்டது.ஒரே பொருளோ அல்லது பலவிதமான பொருளோ பல்வேறு விதங்களில் வியாபார வடிவில் பகிர்ந்துகொள்ளப்பட்டது.ஆனால் அவற்றிலும் மக்கள் பல்வேறு சிக்கள்களை சந்தித்தனர்.ஏனென்றால் சில சமயங்களில் மக்களுக்கு பொருளின் தேவை அதிகமாக இருந்தது ஆனால் பொருள் மிக குறைவாக இருந்தது.சிலசமயங்களில் வியாபாரப் பொருட்கள் அதிகமாக இருந்தது ஆனால் மக்களின் தேவை குறைவாக இருந்தது.

இதனை எல்லாம் அனுபவங்களால் புரிந்துகொண்ட அன்றைய பொருளாதார முதலைகள்(Corporates) தான் வெறும் லாப நோக்கை மட்டும் கொண்ட நான்காவதாக மேலே நான் குறிப்பிட்டிருக்கும் தனிமனித லாபத்தை மட்டும் நோக்கமாக கொண்ட விசித்திரமான வியாபார முறையை உறுவாக்கினார்கள்.அதாவது பொருட்களை எப்படியாவது மக்களிடம் கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்ற ஆபத்தான வியாபாரம் செய்யும்முறை என்பது உறுவாக்கப்பட்டது.உண்மையில் இந்த வியாபாரமுறையானது மனித இனத்தை இறுதி கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் ஆபத்தான வியாபாரமுறை என்பதாகவே நான் கருதுகின்றேன்.அத்தகைய வியாபாரமுறை குறித்து அடுத்த கட்டுரையில் பதிவிடுகின்றேன்.
நன்றி:

அவசரம் வேண்டாம்!பொறுமையாக இருங்கள்!

அவசரம் வேண்டாம்!பொறுமையாக இருங்கள்!
அவசரம் வேண்டாம்!பொறுமையாக இருங்கள்!

முன்னுரை:

இந்த உலகில் ஒவ்வொன்றிற்கும் ஒரு நேரம் இருக்கின்றது என்ற உண்மையை பெரும்பான்மையான சமயங்களில் மனிதன் புரிந்துகொள்ள முற்படுவதே இல்லை என்பது மிக பரிதாபத்திற்குறிய விஷயமாகும்.மனிதன் தான் விரும்பிய அல்லது எண்ணிய எதனையும் உடனே அடைந்துவிட வேண்டும் என்ற ஆசை அவனை உயர்ந்த மகத்தான மனித உச்சத்தை அடைவதைவிட்டும் தடுத்துவிடுகின்றது என்றே நான் கருதுகின்றேன்.

மேலும் இந்த உலகில் பொறுமையாக இருந்து,தான் விரும்பியதை அடையாதவர்களைவிட அவசரப்பட்டு எல்லாவற்றையும் தொலைத்தவர்களே அதிகம் என்றே நான் கருதுகின்றேன்.இங்கு பலரும் பொறுமை என்பது பலஹீனத்தின் அல்லது இயலாமையின் வெளிப்பாடு என்று எண்ணிக் கொள்கின்றனர்.ஆனால் அவசரமும் நிதானமின்மையும்தான் மிகப்பெரிய பலஹீனம் என்பதை அவர்கள் உணரத்தவறிவிடுகின்றனர்.

ஆம்..!

யாரிடம் பொறுமையும் நிதானமும் இருக்குமோ அவர் இந்த உலகில் பிரம்மாண்டமான சாம்ராஜ்யத்தை அசைக்க முடியாதளவு உயர்த்தி நிறுத்திவிட முடியும்.ஆனால் யாரிடம் பொறுமையும் நிதானமும் இல்லையோ அவரால் பிரம்மாண்டமாக எழுப்பப்பட்ட உறுதிமிகு சாம்ராஜ்யங்களும் கூட  சுக்கு நூறாக்கப்பட்டுவிடும் என்பதே நிதர்சனமாகும்.பலசமயங்களில் ஒரு நிமிட அவசரம் அல்லது நிதானமின்மை நம்மை 100 வருட கைசேதத்திற்கு ஆளாக்கிவிடுகின்றது என்பதே இந்த உலகின் மகத்தான பேருண்மையாக இருக்கின்றது.

இந்த உலகில் நாம் வியப்புடன் பார்க்கும் பல்வேறு சாம்ராஜ்யங்கள் ஏதோ சில நொடிகளில் கட்டமைக்கப்பட்டதல்ல.மாறாக எத்தனையோ யுகங்களின் சகிப்புத்திறனால் உறுவாக்கப்பட்டவையே என்ற பேருண்மையை வரலாற்றை சற்று ஆழமாக உற்றுநோக்கும் சமயம் வெள்ளிடை நீரைப்போல் வெண்மையாக நாம் உணர்ந்து கொள்ளலாம்."அவசரக்காரனுக்கு புத்தி மட்டு"என்ற தமிழ் அடைமொழி மனித உலவியலை மிக அற்புதமாக பேசும் ஒரு தமிழ் சொற்றொடர் என்றே நான் கருதுகின்றேன்.

ஏனெனில் அவசரம் என்பது நம்முடைய மனித மதிப்பீடான அறிவை முற்றிலும் மட்டுப்படுத்திவிடுகின்றது என்பதே மகத்தான உண்மையாக இருக்கின்றது. சாலைகளை கடப்பதில் தொடங்கி கடைகளில் பொருள் வாங்கும் வரைக்கும் எதிலும் அவசரம் என்ற நிலையை மனிதன் அடையும்பொழுது அவன் உண்மையில் தனக்குத்தானே மிகப்பெரிய தண்டனையை கொடுத்துக் கொள்கின்றான் என்றே நான் கருதுகின்றேன்.

பிறரை முந்துவதையோ அல்லது தோற்கடிப்பதையோ தனக்கான வெற்றியாக தானே எண்ணிக்கொண்டு தனக்குத்தானே தண்டனை அளித்துக்கொள்ளும் மனிதர்களை காணும் சமயம் உண்மையில் நான் அவர்களுக்காக பரிதாபப்படுகின்றேன்.அவசரம் என்பது நம்முடைய சிறிய அற்பத்தனமான எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்துவிடும் என்றாலும் அது இந்த உலகின் மகத்தான செயலை ஒருபொழுதும் உருவாக்கிவிடாது என்பதை ஒருபோதும் மறுக்கமுடியாது.

எனவே அண்பர்களே.....!

எதெற்கெடுத்தாலும் அவசரம், துரிதம் என்று தயவுகூர்ந்து உங்களுக்கு நீங்களே தண்டனை வழங்கிக்கொள்ள முற்படாதீர்கள்.எதனையும் உணர்ந்து நிதானத்துடன் செயல்படத்தொடங்குவீர்களேயானால் நிச்சயம் உங்கள் வாழ்வை மிக அர்த்தமுள்ளதாக உணரத்தொடங்கிவிடுவீர்கள்.எல்லோரும் அவசரப்படுகின்றனர் என்பதற்காக நீங்களும் உங்களை அதே படுகுழியில் தள்ளிக்கொள்ளாதீர்கள்.உங்களுக்கானதை நீங்கள் முடிவு செய்து பழகிக்கொள்ளுங்கள்.

பிறகு அதில் ஸ்திரமாக நிதானத்துடன் செயல்படுங்கள். நிசயம் இந்த வாழ்க்கை உங்களுக்கு இன்பம் தர வல்லதாக அமைந்துவிடும். இவற்றிற்கு மாறாக அவசரத்தையும் நிதானமின்மையையும் நீங்கள் உங்களுக்காக தேர்ந்தெடுதுக்கொண்டால் நிச்சயமாக உங்களை நீங்களே ஒரு குழிக்குள் புதைத்துக்கொண்டு மண்ணையும் நீங்களே உங்கள் மீது இரைத்துகொண்டிருப்பதைப் போன்றதாகும் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.

வெள்ளி, 17 செப்டம்பர், 2021

யார் இந்த ஈ.வெ.ராமசாமி பெரியார்?(Who is the Periyar E.V.Ramasamy?)

யார் இந்த ஈ.வெ.ராமசாமி பெரியார்
யார் இந்த ஈ.வெ.ராமசாமி பெரியார்


தமிழக மக்களின் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஒரு மகத்தான "கதாநாயகன்"தான் பெரியார் என்ற போற்றுதலுக்குறிய ஈ.வே.ராமசாமி பெரியார் அவர்கள் என்பதாகவே நான் காண்கின்றேன்.ஏனெனில் அவருடைய வாழ்வியல் செயல்பாடுகள் அனைத்தையும் நான் உற்றுநோக்கிய சமயம் இந்த தமிழ் சமூகத்தை உயர்த்தி நிறுத்துவதிலேயே அவர் தன் வாழ்வு முழுவதையும் அற்பனித்து இருப்பதை என்னால் காண முடிந்தது.

இன்றைய நிகழ் உலகின் கதாநாயகர்கள் அனைவரும் மக்களுக்கு பண உதவி செய்தோ அல்லது ஏதேனும் பொருள் உதவி செய்தோ தன்னை கதா நாயகர்களாக நிலை நிறுத்திக்கொள்கின்றனர்.ஆனால் பெரியாரை என்னால் அப்படி காணமுடியவில்லை.மாறாக அவர் ஒரு சமூகத்திற்கான வாழ்வியல் விடியளுக்காக தன்னை முழுவதுமாக அற்பனித்திருப்பதை காணும்பொழுது எவ்வாறு நான் அவரை உண்மை கதாநாயகன் என்று கூறாமல் ஒரு எழுத்தாளனாக கடந்துவிட முடியும்.?

எனவேதான் பெரியாரின் வாழ்வியல் குறித்த அறிமுகமான என்னுடைய புத்தகத்திற்கு பெயரே "தமிழர்களின் கதாநாயகன் பெரியார்" என்று பெயரிட்டுள்ளேன்.உண்மையில் அவர் இந்த நாட்டின் ஒரு குறிப்பிட்ட சாரார்களுக்கு மிகப்பெரும் வில்லனாக திகழ்ந்தார் என்பதையும் நான் ஒப்புக்கொள்கின்றேன்.ஆனால் அவர் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை அடித்து, அடக்கி ஆழவும்,சுரண்டிப் பிழைக்கவும் நினைத்தவர்களுக்கே வில்லனாக இருந்தார் என்பதை கவனிக்கும் சமயம் அங்கும் அவர் உண்மை கதாநாயகன் என்ற பெருமையையே சேர்த்துக்கொண்டுவிட்டார் என்பதாகவே நான் கருதுகின்றேன்.

பெரியாருக்கான அறிமுக உரையான என்னுடைய சிறிய புத்தகத்தில் மூன்றே மூன்று பகுதிகளை மட்டுமே பதிவு செய்வது எனது நோக்கம் என்பதால் பெரியார் சம்மந்தமான அனைத்து விஷயங்களையும் நான் தொகுக்கவில்லை என்பதை முன்கூட்டியே குறிப்பிட்டுவிடுகின்றேன்.ஏனெனில் அந்த புத்தகத்தில் பெரியார் இந்த தமிழ் சமூகத்தின் உண்மை கதாநாயகனாக திகழ்ந்ததற்கான அடிப்படை காரணிகளை மட்டுமே தொகுத்து வழங்கி இருக்கின்றேன்.

அதாவது பெரியார் வாழ்ந்த சமயத்தில் இந்த தமிழ் சமூகம் எத்தகைய நிலையில் அடிமைப்படுத்தப்பட்டிருந்தது என்பது சம்மந்தமாகவும் அதனை பெரியார் எப்படி கலைஎடுத்தார் என்பது சம்மந்தமாகவும் மேலும் தமிழர்களையும் தமிழ்மொழியையும் குறிவைத்து தாக்க நினைத்தபோது அதனை எவ்வாறு உயர்த்தி நிறுத்தினார் என்பது சம்மந்தமாகவும் மட்டுமே இந்த சிறிய புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கின்றேன்.இறைவன் நாடினால் பெரியாரின் முழு வாழ்வியலையும் தனி ஒரு புத்தகமாக தொகுத்து வழங்குகின்றேன்.(அப்பணியை செய்து கொண்டும் இருக்கின்றேன்.)

பெரியார் தமிழ் சமூகத்தின் ஒப்பற்ற கதாநாயகனாக ஆவதற்கு அன்றைய சமூக கட்டமைப்பே காரணமாக இருந்தது என்பதால் பெரியார் காலத்தில் அன்றைய சமூக கட்டமைப்பு எவ்வாறு இருந்தது என்பது சம்மந்தமாக நாம் புரிந்து வைத்திருப்பது மிக அவசியமாக இருக்கின்றது என்பதால் முதலில் அது சம்மந்தமாக இங்கு பார்ப்போம்.


பெரியார் காலத்தில் தமிழ் சமூகம் எவ்வாறு இருந்தது.?

  • குறிப்பிட்ட சில மக்கள் சூத்திரர்கள் எனக்கூறி அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று சமூகத்தைவிட்டும் ஒதுக்கி வைக்கப்பட்டனர்.
  • பார்ப்பனர்கள் என்று கூறப்படும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தவர்கள் மட்டும் உயர் சாதியினர் என்றும் அவர்களுக்கு சரி சமமாக ஏனைய எச்சமூகத்தை சார்ந்தவர்களும் இடம் பெறக்கூடாது என்ற சமூக அமைப்பும் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டிருந்தது.
  • கீழ் சாதியினராக பார்க்கப்படுவர்களுக்கு கல்வி வழங்கப்படக் கூடாது என்பது தான் கல்வி கொள்கையாக இருந்தது.
  • அரசு அலுவல்கள் அனைத்திலும் பார்ப்பனர்கள் தவிர வேறு யாரும் இருக்க முடியாது என்ற சூழலே மிகைத்திருந்தது.
  • உயர் சாதியினராக பார்க்கப்படும் பார்ப்பனர்கள் புழங்கும் பொது இடங்களில் கீழ் சாதியினர் புழங்கக் கூடாது என்றும் இன்னும் அவர்களைப் போன்று செறுப்போ அல்லது தோளில் துணியோ அல்லது குடை பிடித்துக் கொண்டோ தெருவில் நடமாடக் கூடாது என்றும் வெளிப்படையாகவே தடை இருந்தது.
  • அவ்வாறே கீழ் சாதியினராக பார்க்கப்படுபவர்கள் பொது குழங்களிலோ அல்லது கிணருகளிலோ தண்ணீர் அருந்த முடியாது.
  • ஊரின் ஏதோ ஒரு பகுதியில் இருக்கும் தேனீர் கடையிலும் கீழ் சாதியினர் கொட்டங்குச்சியில் தேனீரை பெற்றே குடிக்க வேண்டும் என்ற கட்டமைப்பு அமைக்கப்பட்டிருந்தது.
  • அசிங்கமான வார்த்தைகளாலும் இழிவான பெயர்களாலும் உயர் சாதியை சார்ந்த சிரியவர்கள் அழைத்தாலும் கீழ் சாதியினர் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  • உணவு விடுதிகள் ,குளிக்கும் அறைகள் மற்றும் கோவில்களுக்குள் உயர் சாதியினரை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்ற கொடூரம் அரங்கேற்றப்பட்டது.
  • மாட்டு வண்டிகளில் அமர்ந்து செல்லக் கூடாது,அதிலும் குறிப்பாக எதிரில் பார்ப்பனர் வந்துவிட்டால் ஓரமாக ஓடிச் சென்று கண்ணில் படாதவாறு நின்று கொள்ள வேண்டும்.
  • கீழ் சாதியினர் தங்க நகைகளை ஒரு பொழுதும் அணியக் கூடாது.
  • கீழ் சாதியினர் மண் சுவரால் ஆன ஓலை குடிசைகளில் மட்டுமே வாழ வேண்டும்.
  • கீழ் சாதியினர் உலோக பாத்திரங்கள் எதுவும் பயன்படுத்தக் கூடாது.
  • கீழ் சாதி பெண்கள் மாராப்புத் துணி அணியக்கூடாது என்றும் இன்னும் மேல் சட்டை அணியக் கூடாது என்றும் பனிக்கப்பட்டிருந்தனர்.
  • பெண்கள் என்றாலே இழி பிறவிகள் என்று பரவலாக கருதப்பட்டு வீட்டில் எடுபிடி வேலைக்கென்றே வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேற்குறிப்பிட்ட அனைத்து மனித உரிமை மீறல்களும் இந்நாட்டை ஆண்ட சேரர்கள் ,மற்றும் சோழர்கள் ,மற்றும் பாண்டியர்கள், மற்றும் நவாப்கள் ஆகிய அனைவரின் ஆட்சி காலத்திலும் கொஞ்சமும் குறைவின்றி குறிப்பிட்ட ஒரு சமூகத்தாரால் மட்டுமே அரங்கேறியதை வரலாற்றின் மூலம் அதிகாரப் பூர்வமாக நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.
இத்தகைய மனித உரிமை மீறல்களையெல்லாம்  கலைவதற்கு பெரியார் கையாண்ட வழிமுறைகள்தான் அவரை தமிழ் மண்ணின் போற்றுதலுக்குறிய கதாநாயகனாக நிலைநிறுத்தியது என்பதாகவே நான் நம்புகின்றேன்.
எனவே அடுத்தபடியாக தமிழ் மக்களின் இந்த இழிவை துடைக்க பெரியார் எத்தகைய வழிமுறைகளை கையாண்டார் என்பதைக் குறித்து பார்ப்பதே இங்கு உசிதமாக இருக்கும் என்பதால் அவற்றைப்பற்றி பார்ப்போம்..!
பெரியார் இந்த தமிழ் சமூகத்தின் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளை கலைய மூன்று முக்கிய ஆயுதங்களை மிக வீரியமாக பயன்படுத்தியதாக வரலாற்றில் நம்மால் காண முடிகின்றது. 

1.சொற்பொழிவு பிரச்சாரம்.

2.எழுத்துப் பிரச்சாரம்.

3.தமிழுக்கான அரும்பணியும் அரசியல் பங்கும்.

பெரியார் இந்த மூன்று பெரும் ஆயுதங்களாலும் இந்த சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் இழிவை துடைத்துவிடலாம் என்று தன் வாழ்நாள் முழுவதையும் அற்பணிக்க முன்வந்தார்.

1.சொற்பொழிவு பிரச்சாரம்.

தொடர்ந்து வாசிக்க என் புத்தகத்தை அமேசானில் பெற்று பெரியாரின் ஒப்பற்ற வாழ்வின் அந்த மூன்று அரும்பணிகளும் எவ்வாறு இருந்தது என்பதையும் அறிந்து பலனடைந்து கொள்ளும்படி அன்போடு வேண்டிக்கொள்கின்றேன்.